குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..

கோப்புப்படம்.

கோடை காலங்களில் மட்டுமே சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், சன்ஸ்கிரீன் போடுவது கோடையில் இருப்பதைப் போலவே குளிர்காலத்திலும் பயனளிகக்கூடியது.

  • Share this:
கோடை காலம் மட்டுமல்ல, குளிர்காலத்திலும் சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படக்கூடும். உண்மையில், ஒரு தடிமனான மற்றும் க்ரீம் மாய்ஸ்டரைசரைப் பயன்படுத்துவதும், பின்னர் அதன்மேல் சன்ஸ்கிரீன் போடுவதும் உங்கள் குளிர்கால தோல் பராமரிப்புக்கு அவசியம். அவை ஆண்டு முழுவதும் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். குளிர் காலங்களில் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்களை நாம் அறிவது அவசியமாகும்.

1. மெல்லிய ஓசோன் லேயர் புற ஊதா கதிர்களை ஈர்க்கும்

குளிர்காலத்தில் ஓசோன் அடுக்கு மிக மெல்லியதாக இருக்கும். இந்த பருவத்தில் ஓசோன் அடுக்கு குறைந்த அளவிலேயே புற ஊதா கதிர்களை உறிஞ்சிடும் என்பதால் அந்த கதிரின் வெளிப்பாடு கணிசமாக அதிகரிக்கும். இதனால் அதிக எஸ்பிஎஃப் கொண்ட சன்ஸ்கிரீனை நீங்கள் பயன்படுத்தலாம். எனவே, குளிர்காலத்தில் புற ஊதா வெளிப்பாட்டிற்கு எதிராக உங்கள் சருமத்தைப் பாதுகாக்கலாம்.

2. தோல் புற்றுநோயின் அபாயம் உள்ளது

ஆண்டு முழுவதும் சன்ஸ்கிரீன் பரிந்துரைக்கப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று தோல் புற்றுநோயின் ஆபத்து. யு.வி. கதிர்கள் தோல் புற்றுநோயுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு புற ஊதா கதிர்கள் ஆகும். குளிர்கால மாதங்களில் இந்த கதிர்கள் மிகவும் வலுவாக உள்ளன. எனவே தினமும் காலையில் சன்ஸ்கிரீனை சருமத்தில் சேர்ப்பது தோல் புற்றுநோயைப் பெறுவதற்கான அபாயத்தைக் குறைக்கும். சிறந்த பாதுகாப்பிற்காக SPF30 அல்லது அதற்கும் அதிகமான எல்டாஎம்டி சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.

Also read: உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த மாதிரியான விஷயங்களில் பொய் சொல்லலாம்

3. உங்கள் சருமம் விரைவில் வயதாகிவிடும்

உங்கள் சருமத்தை முடிந்தவரை இளமையாக வைத்திருக்க விரும்பினால் சன்ஸ்கிரீன் அவசியம். தோல் புற்றுநோயை உண்டாக்கும் யு.வி கதிர்கள் உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜனையும் குறைக்கும். இதனால் தோல் தொய்வு ஏற்பட்டு உங்கள் சருமத்திற்கு முன்கூட்டியே வயதாகிவிடும். உண்மையில், யு.வி கதிர்கள் அதிகமாக வெளிப்படுவதால் 90 சதவீத சுருக்கங்கள் ஏற்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

4. கடுமையான காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம்

பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் வறண்ட சருமத்தைக் கொண்டிருப்பதற்கான காரணம், வளிமண்டலத்தில் குறைந்த ஈரப்பதம் இருப்பதும், கடுமையான குளிர்ந்த காற்று வீசுவதும் ஆகும். இது உங்கள் சருமத்திலிருந்து ஈரப்பதத்தை வெளியேற்றி, சுருக்கங்கள், விரிசல் மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இதற்கு ஈரப்பதமூட்டும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டெடுக்க ஒரு சிறந்த வழியாகும்.

5. குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் வேகமாக மறையும்

கோடையில் வெளியாகும் வியர்வை காரணமாக சன்ஸ்கிரீன் குறைந்த நேரமே நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் குளிர்காலத்திலும் இந்த சிக்கல் நீடிக்கிறது. குளிர்கால காற்று மற்றும் திடீர் மழை நீங்கள் காலையில் பயன்படுத்திய சன்ஸ்கிரீனின் அடுக்கை எளிதில் சிதைக்கும். மேலும் காற்றில் ஈரப்பதம் இல்லாததால் உங்கள் சருமம் வறண்டு போகும். எனவே குளிர்கால நாட்களிலும் சன்ஸ்கிரீனை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.6. உட்புற விளக்குகள் புற ஊதா வெளிப்பாட்டை ஏற்படுத்தும்

குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இதனால் மின்சார விளக்குகளை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் சுற்றுப்புற, நீலம் மற்றும் அகச்சிவப்பு விளக்குகள் புற ஊதா கதிர்களை வெளியிடுகின்றன. புற ஊதா கதிர்கள் அதிகரிப்பது தோல் சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே குளிர்காலத்தில் நீங்கள் வீட்டிற்குள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் அடுக்கைப் பயன்படுத்துவது அவசியம்.

7. குளிர்காலத்திலும் சன்பர்ன்-ஐ பெறலாம்

யு.வி கதிர்கள் பெரும்பாலும் எரியும் கதிர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. அவை வெயிலுக்கு காரணமான புற ஊதா கதிர்கள் ஆகும். கோடையில் அந்த கதிர்கள் வலுவாக இருந்தாலும், அவை குளிர்காலத்தில் சில நேர வெயிலுக்கு காரணமாக இருக்கலாம். ஆச்சரியப்படும் விதமாக, குளிர்காலங்களில் சூரியன் உண்மையில் பூமிக்கு நெருக்கமாக இருப்பதால் வெயிலின் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும். இதனால் சன்பர்ன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதுபோன்ற நேரங்களில் வெளியில் செல்லும் முன் சன்ஸ்கிரீனை உபயோகிப்பது நன்மை தரும்.
Published by:Rizwan
First published: