ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பார்லரில் ஃபேஷியல் செய்த பின் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க...

பார்லரில் ஃபேஷியல் செய்த பின் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க...

ஃபேஷியல்

ஃபேஷியல்

பேஷியல் செய்யும்போது சருமத்தின் தசைகள் இலகுவாகும். இறந்த செல்களை நீக்க உதவுகிறது. அதோடு சருமத்தில் நிறம் மாற்றம், கரும்புள்ளிகளை நீக்கி தெளிவான பளபளப்பான சருமத்தை பெற ஃபேஷியல் உதவுகிறது. சருமத்தை இறுக்கி இளமையிலேயே சுருக்கம் வருவதை தவிர்க்கவும் ஃபேஷியல் உதவுகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சருமத்தை பராமரிப்பதில் ஃபேஷியல் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சருமத்தை பராமரிக்க முடியாதவர்களுக்கு ஃபேஷியல்தான் கைக்கொடுக்கிறது. இதை செய்வதால் சருமத்திற்கும் ஒரு ரெஃப்ரஷ்மென்டாக இருக்கும். அதனாலேயே பல பெண்கள் மாதத்திற்கு ஒரு முறையேனும் ஃபேஷியல் செய்துகொள்கிறார்கள்.

  ஃபேஷியல் செய்வதன் நன்மைகள் : பேஷியல் செய்யும்போது சருமத்தின் தசைகள் இலகுவாகும். இறந்த செல்களை நீக்க உதவுகிறது. அதோடு சருமத்தில் நிறம் மாற்றம், கரும்புள்ளிகளை நீக்கி தெளிவான பளபளப்பான சருமத்தை பெற ஃபேஷியல் உதவுகிறது. சருமத்தை இறுக்கி இளமையிலேயே சுருக்கம் வருவதை தவிர்க்கவும் ஃபேஷியல் உதவுகிறது.

  இப்படி பல வகைகளில் நன்மை தரும் ஃபேஷியலின் பலனை நீங்கள் முழுமையாக பெற வேண்டுமெனில் ஃபேஷியல் செய்த பின் இந்த 5 விஷயங்களை செய்யவே கூடாது. மீறினால் நீங்கள் செலவு செய்தது ஒரு பக்கம் இருந்தாலும் செய்ததன் நோக்கமே வீணாகிவிடும். அதோடு அவை சருமத்தை சேதப்படுத்தவும் காரணமாகிவிடும்.

  ஃபேஷியல் செய்து வந்த பின் செய்யக்கூடாதவை :

  மேக்அப் : ஃபேஷியல் செய்த பின் சருமம் சுவாசிக்க நேரம் தர வேண்டும். நீங்கள் உடனே மேக்அப் அப்ளை செய்வதால் அவை திறந்திருக்கும் சருமத் துகள்களை அடைத்துவிடும். இதனால் சருமம் சுவாசிக்க முடியாமல் போகும். இதனால் பருக்கள், சருமச் சிதைவு ஏற்படலாம். எனவே ஃபேஷியல் செய்த பின் மேக்அப் அப்ளை செய்வதை தவிர்க்கவும். அதோடு ரெடினோல், டோனர் போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டாம்.
  முகத்தை தொட வேண்டாம் : நீங்கள் முகத்தை தொடுவதால் கைகளில் படிந்திருக்கும் அழுக்கு அல்லது கிருமிகள் போன்றவை திறந்திருக்கும் முகத் துகளில் சென்று சருமத்தை சேதப்படுத்தலாம்.
  பீலிங் செய்யக் கூடாது : சிலருக்கு வீட்டில் பீலிங் செய்யும் பழக்கம் இருக்கும். இதை நீங்கள் ஃபேஷியல் செய்து வந்தபின் செய்யக் கூடாது. சில நாட்கள் கடந்த பின்பே பீலிங் செய்ய வேண்டும்.
  கிளென்சிங் செய்ய கூடாது : ஃபேஷியல் செய்த பின் சருமத்தின் ஈரப்பதத்தை முற்றிலும் உறிஞ்சும் விதமாக கிளென்சர் பயன்படுத்தக் கூடாது. இது சருமத்தின் தோற்றத்தை கடுமையாக பாதிக்கலாம்.
  சரியான புராடெக்ட் பயன்படுத்தவும் : நீங்கள் எந்த வகை ஃபேஷியல் செய்கிறீர்களோ அதற்கு ஏற்ப ஸ்கின்கேர் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் ஃபேஷியலின்போது பயன்படுத்திய கெமிக்கல்கள் எதிர்வினையாற்றி சருமத்தை பாதிக்கலாம். அலர்ஜியை உண்டாக்கலாம்.
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Facial, Skincare