Home /News /lifestyle /

சன்ஸ்கிரீனை தேர்வு செய்யும் முன்பு இந்த 5 விஷயங்களை கட்டாயம் மறக்காதீங்க..!

சன்ஸ்கிரீனை தேர்வு செய்யும் முன்பு இந்த 5 விஷயங்களை கட்டாயம் மறக்காதீங்க..!

சன்ஸ்கிரீன்

சன்ஸ்கிரீன்

ஸ்கின் பராமரிப்பு முறையை தொடங்கும் முன்பு, உங்களுடைய சருமம் எந்த வகையைச் சார்ந்தது, எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வெயில் நேரத்தில் சுல்லென சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து சருமத்தை பராமரிக்க சன்ஸ்கிரீன் லோஷன்கள் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. இது சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. எல்லா வகை சருமத்திற்கும் ஒரே சன்ஸ்கிரீன் க்ரீம்களை பயன்படுத்துவது எப்போதுமே சிறந்த தீர்வாக இருக்காது.

பல முன்னணி பிராண்ட்களைச் சேர்ந்த சன்ஸ்கிரீன்கள் மார்க்கெட்டில் கிடைத்தாலும்,உங்கள் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழுப்பயனையும் அடைய முடியும். எதை தேர்வு செய்வது எனது உங்களுக்கு குழப்பமாக இருக்கிறது என்றால், தோல் மருத்துவர்கள் மற்றும் அழகு கலை நிபுணர்கள் பரிந்துரைகளின் அடிப்படையில் சன்ஸ்கிரீன் வாங்கும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

1. சரும வகைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்:

ஸ்கின் பராமரிப்பு முறையை தொடங்கும் முன்பு, உங்களுடைய சருமம் எந்த வகையைச் சார்ந்தது, எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது அவசியம். நார்மல் ஸ்கின், ஆய்லி ஸ்கின், டிரை ஸ்கின் சென்சிடிவ் ஸ்கின் என பலவகைகள் உள்ளன.

உங்கள் சரும வகைக்கு ஏற்றார் போன்ற சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுடையது டிரை ஸ்கின் என்றால் ஈரப்பத இழப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்க ஸ்பெக்ட்ரம் பாதுகாப்பைக் கொண்ட சன்ஸ்கிரீம்களை அணிய வேண்டும், ஆயிலி அல்லது கலவையான ஸ்கின் என்றால் சருமத்தை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும் கெமிக்கல் அல்லது ஜெல் அடிப்படையிலான சன்ஸ்கிரீன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



2. சன்ஸ்கிரீன் தயாரிப்பு பொருட்களை பாருங்கள்:

சன்ஸ்கிரீன் மட்டுமல்ல எந்தவொரு அழகு சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தாலும், அதன் பேக்குகளுக்கு பின்னால் அச்சிடப்பட்டுள்ள தயாரிப்பு பொருட்கள் குறித்த பட்டியலில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை பார்ப்பது நல்லது. சில நிமிடங்கள் இதற்காக செலவிடுவதால், அதன் பின்னால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய பல மணி நேரத்தை செலவு செய்ய வேண்டிய இருக்காது.

உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க்குகள்!

பிசிக்கல் மற்றும் கெமிக்கல் என சன்ஸ்கிரீன்கள் இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. பிசிக்கல் சன்ஸ்கிரீன் லோஷன்களில் துத்தநாக ஆக்சைடு போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. இவை தோலுக்கு சூரியனின் புற ஊதக்கதிர்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, முகப்பரு, சரும சுருக்கம் போன்ற பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பளிக்கிறது. அதே நேரத்தில் வேதியியல் சன்ஸ்கிரீன்கள் அதிக அளவிலான பாதுகாப்பிற்கு உதவும் ரசாயன கலவைகளைக் கொண்டுள்ளன.

3. மேக்கப்பில் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது எப்படி?

தற்போது காஸ்மெட்டிக்ஸ் பொருள்களுடன் கலந்த சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. மேட் ஃபினிஷ், மாய்ஸ்ச்சரைசருடன் கூடிய சன்ஸ்கிரீன்கள், ஃபவுண்டேஷன் க்ரீமுடன் கூடிய சன்ஸ்கிரீன்கள் என பலவகையான சன் ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம்.



4. வாட்டர் ப்ஃரூப் சன்ஸ்கிரீன்கள்:

வாட்டர் ப்ஃரூப் சன்ஸ்கிரீன்களை பயன்படுத்துவது மிகச்சிறந்த தேர்வாகும். திடீரென மழை அல்லது வியர்வையால் சன்ஸ்கிரீன்கள் அழிந்து, உங்கள் சருமத்தை சூரியனின் புற ஊதாக்கதிர்கள் தாக்குவதை தடுக்க வாட்டர் ப்ஃரூப் சன்ஸ்கிரீன்கள் உதவும்.

5. SPF அளவை கவனியுங்கள்:

நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் எதுவாக இருந்தாலும் அதில் எஸ்.பி.எஃப் (SPF) என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அளவானது நீங்கள் உபயோகிக்க உள்ள சன்ஸ்கிரீன் சருமத்தை எவ்வளவு நேரம் சூரியனின் தாக்கத்தில் இருந்து காக்கும் என்பதை குறிக்கிறது. SPF 100, SPF 50 உடன் ஒப்பிடும் போது, ​​சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த பட்ச அளவான SPF 30 கொண்ட சன்ஸ்கிரீனை மீண்டும், மீண்டும் பயன்படுத்தினால் மட்டுமே அது சருமத்திற்கான பராமரிப்பை கொடுக்கும், ஒருமுறை பூசிவிட்டு மறந்துவிட்டால் அது சிறப்பான பலனைக் கொடுக்காது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Sunscreen

அடுத்த செய்தி