Home /News /lifestyle /

போலியான ஐ லாஷ் இனியும் தேவையில்லை... இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டால் நீண்ட கண் இமைகளை பெறலாம்..

போலியான ஐ லாஷ் இனியும் தேவையில்லை... இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டால் நீண்ட கண் இமைகளை பெறலாம்..

ஐ லாஷ்

ஐ லாஷ்

கண் இமை மீது ஒட்டப்பட்ட போலி ஐ லாஷ்கள் மீது மஸ்காரா, ஐ ஷேட் போன்றவற்றை தடவி அழகுபடுத்தினாலும், இயற்கையாகவே நீண்ட, அடத்தியான கண் இமைகள் தரும் அழகில் 50 சதவீதத்தை கூட தொட முடியாது.

பெண்களின் காந்த கண் அழகை மேலும் வசீகரமாக்குவது அவர்களுடைய கண் இமைகள் தான். இமைகள், தூசி, மணல் போன்றவற்றில் இருந்து கண்களைப் பாதுகாக்க மட்டுமல்ல, பெண்களின் அழகை கூட்டவும் உதவுகிறது. அதனால் தான் பெண்கள் விதவிதமான ஐ லாஷ்களை வாங்கி குவிக்கின்றனர். கண் இமை மீது ஒட்டப்பட்ட போலி ஐ லாஷ்கள் மீது மஸ்காரா, ஐ ஷேட் போன்றவற்றை தடவி அழகுபடுத்தினாலும், இயற்கையாகவே நீண்ட, அடத்தியான கண் இமைகள் தரும் அழகில் 50 சதவீதத்தை கூட தொட முடியாது.

நீண்ட மற்றும் அடர்த்தியான கண் இமைகள் வேண்டும் என யார் தான் விரும்பமாட்டார்கள்?. உங்கள் கண் இமைகளை நீளமாக வளர்க்கவும் அவற்றின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவக்கூடிய சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்...

இயற்கையாகவே கண் இமைகளை வளர்க்க இந்த 5 பொருட்களை முயற்சிக்கலாம்.

1. ஆமணக்கு எண்ணெய்:

பொதுவாக விளக்கெண்ணெய் என அழைக்கப்படும், ஆமணக்கு எண்ணெய் கண் இமைகள் அடர்த்தியாக வளர உதவுவது மட்டுமல்லாமல், அவை உதிர்வதையும் தடுக்கிறது.

ஆமணக்கு எண்ணெயுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெயைக் கலக்கவும். இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு அந்த எண்ணெய்யை பஞ்சால் தொட்டு, இமைகள் மீது தடவவும். பின்னர் காலையில் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.



2. கிரீன் டீ:

கிரீன் டீ பேக்குகளை சுடு தண்ணீரில் போட்டு கொதிக்கவும். 5 நிமிடங்கள் கழித்து அந்த டீ பேக்குகளை ஃபிரிட்ஜில் வைக்கவும். டீ பேக்குகள் நன்றாக ஜில்லென ஆனது, அதனை கண் இமைகள் மீது வைத்து 10 நிமிடத்திற்கு ஓய்வெடுக்கவும்.

தேன் சாப்பிட்டால் உடல் எடையை குறைகிறதா? இதோ தேன் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக...

3. ஆலிவ் ஆயில்:

கண் இமைகள் நீளமாகவும், அடத்தியாகவும் வளர ஆலிவ் ஆயில் சிறப்பானதாகும். வெர்ஜின் ஆலிவ் ஆயிலை பருத்தி பஞ்சில் நனைத்து கண்கள் மீது வைப்பது நல்ல பலன் தரும்.

4. தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டும் இல்லை. அதுவும் தேங்காய் எண்ணெய் உடன் சில துளிகள் வெர்ஜின் ஆலிவ் ஆயிலை கலந்தால் அற்புதமான மேஜிக் நடப்பதை நீங்கள் உணரலாம். இந்த எண்ணெய்யை மஸ்காராவில் தேய்த்து, கண் இமைகள் மீது தடவ வேண்டும்.



5. கற்றாழை ஜெல்:

அடர்த்தியான மற்றும் நீண்ட கண் இமைகளை பெற, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு கண் இமைகள் மீது கற்றாழை ஜெல்லைத் தடவி, காலையில் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த டிப்ஸ்கள் மட்டுமல்ல, கண் இமைகளை சுற்றியுள்ள பகுதியை விரலால் மசாஜ் செய்து விடுவதன் மூலமாகவும் ஐ லாஷ்கள் அடர்த்தியாக வளர்வதை காணலாம். மேலும் இந்த மசாஜ் கண்களுக்கும் நல்ல ரிலாக்ஸாக அமையும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Eye makeup

அடுத்த செய்தி