Home /News /lifestyle /

வெயில் காலத்தில் உங்கள் முடிக்கு இந்த 5 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்..!

வெயில் காலத்தில் உங்கள் முடிக்கு இந்த 5 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்..!

தலைமுடி

தலைமுடி

முடியை பராமரிப்பது குறித்து பலரும் கண்டு கொள்வதில்லை. வெயில் காலங்களில் முடிக்கு பல விதங்களில் பாதிப்புகள் உண்டாகும்.

பொதுவாக வெயில் காலத்தில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலில் பல வித பாதிப்புகள் கோடை காலத்தில் உண்டாகும். அதே போன்று உடல் ஆரோக்கியத்தையும், சரும பாதுகாப்பையும் அவசியம் சரிவர பார்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில் முடியை பராமரிப்பது குறித்து பலரும் கண்டு கொள்வதில்லை. வெயில் காலங்களில் முடிக்கு பல விதங்களில் பாதிப்புகள் உண்டாகும். வெயில் காலத்தில் உங்கள் முடிக்கு நீங்கள் செய்ய கூடாத 5 விஷயங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சூரிய ஒளி :

பொதுவாக சூரிய ஒளியில் இருந்து வெளியேறும் புற ஊதா கதிர்கள் முடியை சேதப்படுத்துகின்றன. இதனால் உங்கள் முடி முற்றிலுமாக பொலிவிழந்து விடுகிறது. உறுதியான மற்றும் ஆரோக்கியமான முடி அமைப்பை பெற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் தேவை. உடலுக்கு சூரிய ஒளி தேவை தான், என்றாலும் வெயிலில் செல்லும்போது அவசியம் தொப்பி அணிந்து செல்லுங்கள்.



முடியை கட்டுதல் :

நீண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு கோடை காலத்தில் அதிக பிரச்சனைகள் உண்டாகும். கூந்தல் நீளமாக இருப்பதால் வெயில் காலங்களில் சரியாக பராமரிப்பது கடினமாக இருக்கும். எனவே உங்கள் முடி உதிராமலும், முடி உடையாமலும் இருக்க கவனமாக பார்த்து கொள்ளுங்கள். முக்கியமாக அவற்றை கட்டியே வைத்திருங்கள்.

குளம் அல்லது கடலில் குளித்தல் :

கடல் நீரில் உப்பு அதிகம் உள்ளதால், அதில் குளிக்கும் போது உங்கள் முடிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போன்று, நீச்சல் குளங்களில் குளோரின் சேர்க்கப்படுகிறது. இது முடியை வறட்சியாகவும், பலவீனமாகவும் மற்றும் உடையக்கூடியதாகவும் மாற்றுகிறது. எனவே வெளியில் குளித்த பிறகு வீட்டிற்கு வந்து நல்ல நீரில் தலையை அலசினால் உங்கள் முடிக்கு எந்த பாதிப்பும் வராது. அதே போன்று முடிக்கு பாதிப்பு தராத குறைத்த கெமிக்கல் உள்ள ஷாம்பூ பயன்படுத்தி குளிப்பதும் நல்லது.

காற்று மாசில் இருந்து உங்கள் கூந்தலை பாதுகாக்க உதவும் டிப்ஸ்..!

சூடு நீர் குளியல் :

வெதுவெதுப்பான குளியல் தான் உங்கள் உடலுக்கும், முடிக்கும் நல்லது. பலர் இதை உணராமல் எப்போதும் தலைக்கு சூடு நீர் பயன்படுத்துகிறார்கள். இதனால் முடியில் உள்ள இயற்கை எண்ணெய்கள் குறைந்து, முடி வறண்டு போய்விடும். எனவே, எப்போதும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ச்சியான நீரில் குளிப்பது தான் உங்கள் முடிக்கு ஆரோக்கியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் வெந்நீரை விரும்புபவராக இருந்தால், கடைசியாக குளிர்ந்த நீரில் முடியை கழுவி விடவும். இது உங்கள் முடியின் வலிமையையும் பளபளப்பையும் அதிகரிக்கும்.



குளியலுக்கு பிறகு :

தலைக்கு குளித்த பிறகு முடியை சரியாக பராமரிக்க வேண்டும். இதற்கு முதலில் நீங்கள் துண்டைப் பயன்படுத்தும் விதம் முக்கியமானது. துண்டை ஒருபோதும் தலைமுடியில் தேய்க்காதீர்கள். அதற்கு மாறாக, அதிகப்படியான தண்ணீரை அகற்றுவதற்கு மெதுவாக அழுத்தவும. மேலும் தலையை சீவும்போது, ​​மரத்தாலான சீப்புகளைப் பயன்படுத்த முயற்சியுங்கள். இந்த வகை சீப்புகள் முடி உடைவதை தடுக்கும். அதே போன்று தலை முடியை காய வைக்க ப்லோவர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியதில்லை. அதை இயற்கையாகவே காய விடுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Summer

அடுத்த செய்தி