ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பண்டிகை காலத்தில் பௌர்ணமி நிலவாய் ஜொலிக்க வேண்டுமா..? ஆயுர்வேத டிடாக்ஸ் செய்யுங்கள்..!

பண்டிகை காலத்தில் பௌர்ணமி நிலவாய் ஜொலிக்க வேண்டுமா..? ஆயுர்வேத டிடாக்ஸ் செய்யுங்கள்..!

ஆயுர்வேத டிடாக்ஸ்

ஆயுர்வேத டிடாக்ஸ்

உணவுகளாக, ஆயுர்வேதம் வெவ்வேறு வண்ணங்களில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள், இயற்கையின் கொடைகளைக் குறிக்கின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, அதிக வேலை, தூக்கமின்மை மன அழுத்தம் என்று அனைத்துமே தம்முடைய தோற்றத்தை பாதிக்கும், முகத்தில் தெரியும். பண்டிகை காலங்களில் யாருக்குத்தான் அழகாக இருக்க வேண்டும் நேர்த்தியாக உடையணிந்து பளிச்சென்று இருக்க வேண்டுமென்று ஆசை இருக்காது?

சில நேரங்களில் நம்முடைய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உடலில் நச்சு சேர்ந்து இருந்தால் கூட அது சருமத்தில், முகத்தில் வெளிப்படும். ஆயுர்வேதத்தில் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கு பாரம்பரியமான சிகிச்சை இருக்க்ரியது. பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவப்படி பஞ்ச கர்மா என்று கூறப்படும் அந்த சிகிச்சை உடலின் செல், திசுக்களின் ஆழம் வரை சென்று, அனைத்து நச்சுக்களையும் நீங்கி உங்களை புது பொலிவோடு மாற்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தற்போது பஞ்ச கர்மா சிகிச்சை எடுப்பதற்கெல்லாம் நேரம் இல்லையே. ஆனால், ஆயுர்வேத முறைப்படி உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க, ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் எளிமையான குறிப்புகளை பகிர்ந்துள்ளார்கள்.

ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே சாப்பிடுங்கள்:

ஆயுர்வேத முறையில் ஆரோக்கியம் என்பது நாம் சாப்பிடும் உணவின் அடிப்படையிலேயே இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் வெளியேறும். நீங்கள் டீடாக்ஸ் செய்ய விரும்பினால், ரசாயனங்கள் செய்யப்பட்ட பொருட்களை தவிர்த்திடுங்கள். அதிக எண்ணெய், அதிக உப்பு, அதிக சர்க்கரை ஆகியவற்றையும் தவிர்த்திடுங்கள். பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளையும், பாட்டில்களில் பாக்கெட்டில் வரும் எல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு, ஆர்கானிக்கான பிரஷ்-ஆன காய்கறிகள் மற்றும் பழங்களை, தானியங்களை சாப்பிட்டால் உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் நீங்கும். உடல் ஆரோக்கியமாவதோடு மட்டுமல்லாமல் உங்கள் தோற்றம் மேம்படும் பளிச்சிடும், இளமையாக காண்பீர்கள்.

மூலிகைத் தேநீர் குடித்து உடலில் நீர்சத்து அளவை பராமரிக்கவும்:

தேநீர் என்றவுடன், தேயிலை தூள், பால், தண்ணீர், விரும்பும் மசாலா பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து குடிப்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, தேநீர் என்பது மூலிகைகளை தண்ணீரில் கொதிக்க விட்டு குடிக்கும் அற்புதமான பானங்களையும் குறிக்கிறது. துளசி, கற்பூரவள்ளி, சோம்பு, புதினா, பட்டை என்று ஆயுர்வேதத்தில் நறுமணமிக்க ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை பயன்படுத்தி நீங்கள் சூடாக தேநீர் குடிப்பதன் மூலம் உங்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடலில் இருக்கும் நீர்ச்சத்து அளவையும் பராமரிக்கும்.

மூலிகை பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரில் உங்களுக்கு உடலில் நச்சு நீக்கும் தன்மையும் உள்ளது. கொழுப்பு கரையும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், ரத்த வால்வுகளில் உள்ள அடைப்புகள் நீங்கும், உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும். உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் நச்சு சேராமல் இருக்க தேவையான அளவுக்கு நீர்ச்சத்து இருப்பது அவசியம்.

பசுமையான, வண்ணமயமான உணவுகளை சாப்பிடுங்கள் :

உணவுகளாக, ஆயுர்வேதம் வெவ்வேறு வண்ணங்களில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள், இயற்கையின் கொடைகளைக் குறிக்கின்றன. பொதுவாகவே நம் வீட்டில்கூட தினம் ஒரு கீரையை சாப்பிட வேண்டும், தினம் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள்.

Also Read : பைசா செலவில்லாமல் நல்ல ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும் வழிகள்!

உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்குவதற்கு, ஆரோக்கியமான கீரைகள் மற்றும் இயற்கையாகவே வண்ணமயமான உணவுகளை சாப்பிடவேண்டும். வண்ணமயமான உணவுகள் என்று வரும் பொழுது ஃபுட் கலர், உணவு பிக்மென்ட், ரசாயனங்கள் என்பதை மறந்திடுங்கள். பலவிதமான வண்ணங்களில் இருக்கும் கேரட், பீட்ரூட், பூசணி, தேன், மற்றும் பல நிறங்களில் கிடைக்கும் கீரை வகைகள் ஆகியவற்றில் தினம் ஒன்று தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும்.சமைக்காத உணவுகளை காலை அல்லது இரவில் சாலடாக சாப்பிடலாம்.

உடற்பயற்சி அல்லது உடலுக்கு வேலை அவசியம் :

எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், உடலுக்கு வேலை தருவது அவசியம். தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அல்லது உங்களால் முடிந்த உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சிகளை செய்யலாம். உடலுக்கு வேலையே கொடுக்காமல் இருந்தால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமாகிவிடும். இதுவே உடலில் நச்சுக்களை சேர்வதற்கு வழிவகுக்கும். வெளிப்புறத்தில் அழகாக காட்சியளிட்டு தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமாக, நடக்க முடியாமல், கால் வீக்கமாக இருப்பதெல்லாம் யோசித்துப் பாருங்கள்!!

எனவே ஆரோக்கியமான உணவுகளோடு தினமும் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் ஏதாவது வேலையில் ஈடுபடலாம்.

எல்லா மருத்துவர்களும் சொல்வது போல, தண்ணீர் அதிகம் குடியுங்கள். தண்ணீர் அதிகம் குடித்தாலே, உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.இதையெல்லாம் சில நாட்கள் பின்பற்றினாலே, இயற்கையாகவே உடலில் மிகப்பெரிய மாற்றம் தெரியும், சருமம் ஜொலிக்கும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Beauty Tips, Detox, Skincare