சரும பராமரிப்பில் அழகு சாதன பொருட்களுக்கென்று தனி மார்க்கெட் உண்டு. தினமும் விதவிதமான தயாரிப்புகள் சந்தையில் அறிமுகபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலும் அவை அனைத்திலும் ஏதோவொரு வகையில் வேதி பொருட்கள் கலந்தே இருக்கிறது. இவை சருமத்திற்கு அழகு சேர்த்தாலும், நாளடைவில் சரும பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இப்படி வெளியே கிடைக்கும் பொருட்களை வாங்கி பழக்கப்பட்ட நமக்கு அன்றாடம் இயற்கையாகவே வீடுகளில் பயன்படுத்தும் தயிரின் நன்மையைப் பலருக்கு தெரிவதில்லை.
சமீபத்தில் பல நிறுவனங்கள் தயிரை பயன்படுத்தி தங்களுடைய அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகின்றனர். “பாடி யோகர்ட்(Body Yogurt)” எனப்படும் இந்த தயிராய் கொண்டு தயாரிக்கப்படும் அழகு சாதன பொருள் பார்ப்பதற்கு பெரும்பாலும் ஜெல் போன்று காணப்படும். இதை சருமத்தில் தேய்த்துக் கொள்வதன் மூலம் வேரிலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், உடனடியாக சருமத்தினால் கிரகித்து கொள்ளப்பட்டு ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. மேலும் பல்வேறு சிறப்புகள் உடைய இந்த “பாடி யோகர்ட்” எப்படி எல்லாம் நம் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது:
மற்ற அனைத்து அழகு சாதன பொருட்களை விடவும் இந்த பாடி யோகர்ட் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அதிக அளவு தக்கவைக்கிறது. மேலும் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாமலும் தடுக்கிறது. நம் சாதாரணமாக கடைகளில் வாங்கி பயன்படுத்தப்படும் லோஷன்கள் 12-ல் இருந்து 24 மணி நேரம் மட்டும்தான் கை கொடுக்கும். ஆனால் “பாடி யோகர்ட்” பயன்படுத்தும் போது கிட்டத்தட்ட 48 மணி நேரம் தக்க வைக்கும் முக்கியமாக குளிர் காலங்களில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்க இதனை பயன்படுத்தலாம்.
Also Read : சருமத்தின் அனைத்து பிரச்சனைகளையும் போக்க வேண்டுமா..? இந்த ஐஸ் க்யூப்ஸை தயார் செஞ்சு வச்சுக்கோங்க..!
சருமத்திற்கு உடனடி பாதுகாப்பு:
கடைகளில் கிடைக்கும் லோஷன்கள் மட்டும் கிரீம்களை விடவும் இந்த பாடி யோகர்ட் பயன்படுத்தும் போது மிக விரைவில் சருமத்தினால் கிரகித்துக் கொள்ளப்பட்டு உடனடி பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் பிசுபிசுப்பு இல்லாமலும் இருக்கிறது.
நறுமணம்:
சந்தையில் நறுமணத்துடன்கூடிய பல்வேறு அழகு சாதன பொருட்கள் இருந்தாலும், விதவிதமான நறுமணத்துடன் கூடிய “பாடி யோகர்ட்” பற்றி பலருக்கு தெரிவதில்லை. அதிக அளவு நறுமணத்துடன் கூடிய அழகு சாதனப் பொருட்களை விரும்புவோர் தங்களுக்கு பிடித்த நறுமணத்தை உடைய பாடி யோகர்ட்டை வாங்கி பயன்படுத்தலாம்.
சருமத்தை மென்மையாகவும் வறட்சியில் இருந்தும் பாதுகாக்கிறது:
சருமத்தை மென்மையாக்குவதிலும் அதனை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் மேலும் சருமத்தில் உள்ள திட்டுக்களை நீக்குவதிலும் பாடி யோகர்ட்டை விட சிறந்த பொருள் எதுவும் இல்லை. மேலும் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதுடன் மென்மையாகவும் மிருதுவாகவும் புத்துணர்ச்சியோடும் வைக்க உதவுகிறது.
Also Read : புருவத்தை அழகாக ஹைலைட் செய்து காட்ட இந்த 6 ஸ்டெப் போதும்..!
இது போன்ற காரணங்களினால் எந்த ஒரு சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களை விடவும் ரசாயன பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த பாடி யோகர்ட் சருமத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடியதாக இருக்கின்றது முக்கியமாக அது தரக்கூடிய புத்துணர்ச்சியும் அதன் நறுமணமும் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Yogurt