ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உப்டான் பயன்படுத்துவதால் முகத்திற்கு ஏற்படும் அசத்தலான 5 நன்மைகள் என்னென்ன..?

உப்டான் பயன்படுத்துவதால் முகத்திற்கு ஏற்படும் அசத்தலான 5 நன்மைகள் என்னென்ன..?

உப்டான்

உப்டான்

கரும்புள்ளிகள், மற்றும் சீரற்ற சரும நிற பிரச்சனைகள் பெண்களில் பெரும்பாலோனோருக்கு ஏற்படுகிறது. இதனை எல்லா நேரத்திலும் மேக்கப் போட்டு மறைக்கவும் முடியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மார்டன் யுகத்தில் திருமணத்திற்கு பெண்ணை தயார் செய்ய ஃபேஷியல், பிளீச், கிளீனப், த்ரெட்டிங், மேக்கப் என பல விஷயங்கள் வந்துவிட்டன. ஏனென்றால் மண நாளான்று பெண் மணப்பந்தலில் தேவதையாய் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் நம் பாட்டி மற்றும் அம்மாக்கள் காலத்தில் எல்லாம் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உப்டானை முகத்தில் பூசுவார்கள், இதை ஒரு நிகழ்ச்சியாகவே செய்து வருகின்றனர். பெரும்பாலும், வீட்டில் இருக்கும் மஞ்சள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள், கடலை மாவு மற்றும் கொட்டைகள் போன்ற பொருட்களை பாரம்பரிய முறைப்படி நன்றாக அரைத்து, அந்த கலவையை முகத்தில் பூசுவார்கள்.

இதனால் திருமண பெண்ணின் முகம் சந்திரனைப் போல் பளபளப்பாக ஜொலிக்கும். உப்டான் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுர்வேத முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் சருமத்தை சரி செய்யும் சிகிச்சை முறையாக இந்த உப்டான் சொல்லப்படுகிறது. அதனால் தான் உப்டானை நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற வாழ்வின் மிக முக்கிய நாட்களில் முகம் மற்றும் சரும பொலிவோடு ஒளிர பயன்படுத்துகிறார்கள்.

மதர் ஸ்பர்ஷின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் டாக்டர் ஹிமான்ஷு காந்தி, உப்டானைப் பயன்படுத்துவதால் கிடைக்க கூடிய சில நன்மைகள் பற்றி பகிர்ந்துள்ளார்.

1. ரசாயன கலப்பு இல்லை:

கெமில்களை கொண்ட கிரீம்கள் மற்றும் அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு நீண்ட கால பாதிப்புகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஒரு சில சந்தர்ப்பங்களில், தயாரிப்புகள் உடனடி பளபளப்பைக் கொடுப்பதாக தோன்றும், ஆனால் அது நீண்ட காலத்திற்கு சரும பிரச்சனைக்கு வழிவகுக்கும். உப்டானில் இயற்கையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம்.

2. கரும்புள்ளிகள், நிறமாறுபாட்டிற்கு குட்பை:

கரும்புள்ளிகள், மற்றும் சீரற்ற சரும நிற பிரச்சனைகள் பெண்களில் பெரும்பாலோனோருக்கு ஏற்படுகிறது. இதனை எல்லா நேரத்திலும் மேக்கப் போட்டு மறைக்கவும் முடியாது. இதனை அகற்ற வேண்டும் என்றால், அதன் மூலக்காரணத்தை சரி செய்யக்கூடிய உப்டானை பயன்படுத்த வேண்டும். இயற்கையாகவே சருமத்தில் உள்ள கறைகளை நீக்க உப்டான் உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உப்டானை மெதுவாக முகத்தில் தேய்த்து, அது காய்ந்த பிறகு நீரால் கழுவி முகத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவும். இதனை அடிக்கடி செய்வதன் மூலம் உங்கள் சருமத்தில் உள்ள சீரற்ற நிறம் மற்றும் கருமைகள் மறைவதை கண்கூடாக காணலாம்.

கோடைகால சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் பேஷியல் ஸ்க்ரப்ஸ்!

3. எக்ஸ்ஃபோலியேட்டிங் நன்மைகள்:

ஸ்கின் எக்ஸ்ஃபோலியேட்டிங் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் பலமுறை பார்லருக்கு சென்று, சில ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருக்கும். அதுவே உப்டான் பயன்படுத்தினால் வீட்டிலேயே ஹாயாக படுத்துக் கொண்டு, அழகான சருமத்தை பெற்றுவிடலாம். இது உங்கள் சரும தோலை உரிக்கவும், இறந்த செல்களை அகற்றவும் பயன்படுகிறது. மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டி புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.

4. புதிய மற்றும் மென்மையான சருமம்:

கடுமையான கோடை காலம் சருமத்தை வறண்டு போக செய்கிறது, இதனால் முதலில் பாதிக்கப்படுவது முகம்தான். இப்படிப்பட்ட நிலைமையை சமாளிக்க உப்டானில் ரோஜா இதழ்கள், குங்குமப்பூ அல்லது ஆரஞ்சு தோல்களைச் சேர்ப்பது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும், நீண்ட நேரம் மென்மையாகவும், மிருதுவாகவும் பராமரிக்க உதவுகிறது.

5. அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது:

உங்கள் சருமம் எண்ணெய் சருமமா, சாதாரண சருமமா அல்லது சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்தின் கலவையா? என எதுவாக இருந்தாலும், உப்டான் அதற்கு ஏற்ற தீர்வுகளை தரக்கூடியது. சரும வகைகளுக்கு ஏற்ப பால், தண்ணீர் அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் சருமத்திற்கு பால் மற்றும் தண்ணீர் மற்றும் வறண்ட சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தில் அதிசயம் நிகழ்வதை காண முடியும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Face pack