முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்க சருமத்திற்கு ஏற்ற நல்ல ஃபவுண்டேஷனை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கா..? உங்களுக்கான டிப்ஸ்.!

உங்க சருமத்திற்கு ஏற்ற நல்ல ஃபவுண்டேஷனை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கா..? உங்களுக்கான டிப்ஸ்.!

Foundation

Foundation

பவுண்டேஷன் ஃபார்முலாக்கள் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது அல்ல. வறண்ட சருமத்திற்கு வேலை செய்யும், ஃபவுண்டேஷன் எண்ணெய் சருமத்திற்கு வேலை செய்யாது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்கள் பொதுவாக தாங்கள் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்த கூடியவர்களாக இருப்பார்கள். அலுவலகம், சுப நிகழ்ச்சிகள், பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக ஒப்பனையில் அதிக கவனம் செலுத்துவது உண்டு.

அப்படி பளிச் முகத்துடன் அழகான தோற்றத்தில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் எண்ணம் பலருக்கு உண்டு. ஒரு நல்ல மேக்கப் என்றாலே, அதற்கு அடித்தளமாக இருப்பது ஃபவுண்டேஷன் தான். வெவ்வேறு சருமத்தின் நிறத்துக்கு ஏற்ப ஒரு ஃபவுண்டேஷனை தேர்வு செய்தால் மட்டுமே மேக்கப் முழுமையாக வெளிப்படும்.

அடித்தளமான ஃபவுண்டேஷன் சரியாக இல்லையெனில், முழு தோற்றத்தையும் அது கெடுக்கும். ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன், முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சருமத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுப்பது. எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், சாதாரண சருமம், காம்பினேஷன் சருமம் என இந்த அடிப்படை நான்கு சரும வகைகளில் என்ன மாதிரியான சருமத்தை கொண்டுள்ளோம் என்பதை கவனத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு பொருத்தமான ஃபவுண்டேஷனை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

உங்கள் தோலின் நிறத்தை கண்டறிதல்:

சரும நிறத்தை முகத்தில் இல்லாமல் தாடை பகுதி அல்லது கழுத்துப் பகுதி நிறத்தை கொண்டே கணக்கிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமே ஃபவுண்டேஷனில் சரியான ஷேடை (shade) தேர்ந்தெடுக்க முடியும். தோலின் வகைகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. சருமத்தின் அண்டர்டோன் (Undertone) பற்றிய அறிய வேண்டும். வார்ம் (Warm) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் மஞ்சள், அல்லது தங்க நிறத்தில் இருக்கும். இவர்கள் வார்ம் டோனிற்கு பொருந்தும் பவுண்டேஷன் ஷேடை (shade) தேர்ந்தெடுக்க வேண்டும். கூல் (Cool) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பிங்க், நிறத்தில் இருக்கும். இவர்கள் கூல் டோன்க்கான ஃபவுண்டேஷன் ஷேடை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை பரிசோதனை செய்ய உங்கள் கையின் மணிக்கட்டு தோலின் நிறத்தை பார்த்து உங்கள் ஃபவுண்டேஷனை தேர்வு செய்யலாம்.

அப்படி ஃபவுண்டேஷனை தேர்வு செய்யும் போது உங்களிடம் பச்சை நிற நரம்புகள் இருந்தால், உங்களுக்கு (warm undertone) என்பதை கண்டுபிடிக்கலாம். நீலம் அல்லது ஊதா நிறத்தில் நரம்புகள் இருந்தால், (cool undertone) வகை என்பதை கண்டறியலாம். ஃபவுண்டேஷனை வாங்கும் முன், பெரும்பாலும் அதனை கைகளில் பரிசோதித்து வாங்குவோம். ஆனால் கையின் நிறமும், முகத்தின் நிறமும் ஒன்றுபோல் இருக்காது என்பதால் தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது.

Also Read : Eye Makeup | ஐ லைனர் பிரஷில் இத்தனை வகைகள் இருக்கா..? எதுக்கு எந்த பிரஷுனு தெரிஞ்சுக்கோங்க..!

தோல் வகையை அறிந்து கொள்வது எப்படி?

பவுண்டேஷன் ஃபார்முலாக்கள் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது அல்ல. வறண்ட சருமத்திற்கு வேலை செய்யும், ஃபவுண்டேஷன் எண்ணெய் சருமத்திற்கு வேலை செய்யாது. உங்களுக்கு எண்ணெய்ப்பசை சருமம் என்றால் பவுடர் ஃபவுண்டேஷன் அல்லது எண்ணெய் இல்லாத திரவ வடிவிலான ஃபவுண்டேஷனை (Liquid Foundation) பயன்படுத்தவும். காம்பினேஷன் சருமம் என்றால் லிக்விட் அல்லது பவுடர் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். முகப்பரு உள்ள மற்றும் சென்சிட்டிவ் சருமம் என்றால், ஆல்கஹால் மற்றும் நறுமண பொருள்கள் கலந்த ஃபவுண்டேஷனை தவிர்ப்பது நல்லது.

First published:

Tags: Beauty Tips, Foundation Selection tips, Makeup