Home /News /lifestyle /

அழகுசாதனப் பொருட்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 4 முக்கியமான விஷயங்கள்!

அழகுசாதனப் பொருட்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 4 முக்கியமான விஷயங்கள்!

அழகுக்குறிப்பு

அழகுக்குறிப்பு

மாறிக்கொண்டே போகும். ஒரு புதிய தயாரிப்பைச் சுற்றியுள்ள சலசலப்பு உங்களை ஈர்க்கும் போது அதைப்பற்றி ஆராய சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது உங்களுக்குப் பொருத்தமானதா என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், குறிப்பிட்ட தயாரிப்பை பற்றி எல்லாவற்றையும் கவனியுங்கள்

மேலும் படிக்கவும் ...
இன்று, மேக்கப் மற்றும் ஸ்கின் கேர் என்பது ஒரு மல்டி பில்லியன் டாலர் பிஸ்னஸ் ஆகும். இந்த பியூட்டி துறையில் செல்வாக்கு செலுத்தும் நிறைய பேர் (நிறுவனங்கள்) இருப்பதால், எது சிறந்தது என்கிற விருப்பங்களும், அதற்கான விளம்பரங்களும் முடிவற்றவைகளாக உள்ளன. நடைமுறையில் ஒவ்வொரு வகையான சருமத்துக்கும் பலவிதமான பிராண்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் இருப்பதால், அதில் எது உங்களுக்கு சிறந்தது என்பதை அறிவது மிகவும் கடினம்.

ஒரு தயாரிப்பானது தேவைகளை பூர்த்தி செய்கிறதா என்று ஆராயும் அதே நேரம், அதை பயன்படுத்தும் குறிப்பிட்ட நபரின் தோலுக்கு பொருந்துகிறதா, குறிப்பிட்ட வகை சருமத்துக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். உயர்தர அழகு சாதனப் பொருட்களை வாங்குவது, உங்கள் சருமம் அழகாவதை உறுதி செய்யும்; இருப்பினும் இதுபற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் உள்ளன.

மூலப்பொருட்களை பற்றிய விழிப்புணர்வு!

பெரும்பாலான அழகுசாதன சப்ளையர்கள் தாங்கள் வழங்கும் அனைத்து மூலப்பொருட்களையும் பட்டியலிடுவதில்லை. இதுபோன்ற வெளிப்படைத்தன்மையை வழங்க முடியாத பல பிராண்டுகள் பின்னடைவையே சந்தித்தன. இதன் காரணமாகவே, பியூட்டி துறையில் மைக்காவின் பயன்பாடு குறையத் தொடங்கியது, ஏனெனில் மைக்காவின் பக்க விளைவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, சில பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் உங்கள் தோலுக்கு ஒவ்வாமை சார்ந்த எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. இந்த விடயத்தின் கீழ் பல உற்பத்தியாளர்கள் தவறான விளம்பரங்களையே நம்முன் வைக்கின்றனர்.

மேலும், பாராபென்ஸ், பெட்ரோகெமிக்கல்ஸ், ஈயம், பாதரசம் மற்றும் தாலேட்ஸ் போன்ற இரசாயனங்களை கொண்ட அழகுசாதனப் பொருட்கள் நம் தோலில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிற விரிவான ஆய்வுகளும் செயலில் உள்ளன.சரும வகைக்கு ஏற்றதை அடையாளம் கண்டு, அதை வாங்க வேண்டும்!

நீங்கள் ஒரு அழகுசாதன பொருளை வாங்குவதற்கு முன், அதன் மார்க்கெட்டிங்கில் மயங்கி வாங்குகிறீர்களா அலல்து உங்கள் சருமத்தின் வகையைப் புரிந்து வாங்குகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். உங்கள் தோல் வகையை நீங்கள் அடையாளம் காண தோல் மருத்துவரின் உதவியை நாடலாம். இந்த இடத்தில் ஒருவரின் தோல் வகை மாறிக்கொண்டே போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களின் தோல் ஒரே மாதிரி இருக்காது. ஹார்மோன்கள், உணவுப் பழக்கம் மற்றும் சூழல் போன்ற காரணிகளால் உங்களின் தோல் வகை மாறும்.

ஒரு தயாரிப்பு உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இல்லாவிட்டால், அது பயனற்றதாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் நிலைமைகளை இன்னும் மோசமாக்கலாம்.

கொலாஜின் அடுக்குகள் முகத்திற்கு செய்யும் நன்மைகள் என்ன..? கட்டுக்கதைகளும்..உண்மைகளும்

எரிச்சலூட்டும் தயாரிப்புகளை விலக்கவும்!

ஒரு அழகுசாதன பொருளில், உங்களின் தோலுக்கு எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க நீங்கள் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட அழகுசாதனப் பொருளானது எரிச்சலைத் தூண்டுகிறதா? ஒவ்வாமைக்கு வழிவகுக்கிறதா? என்பதை எளிமையாக அறிய முடியும்.

இந்த இடத்தில் முகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தோல்கள் வேறுபடும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், அதாவது உங்கள் உதடுகள் மற்றும் கண்களின் தோல் வகை வேறுபடலாம். ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பவுண்டேஷன் ஆனது உங்கள் முகத்தின் தோல் வகைக்கு ஏற்றதாக இருந்தாலும் கூட, அதே பிராண்டின் உதட்டுச்சாயம் உங்களுக்கு எதுவாக இல்லாமல் போகலாம்.உங்கள் வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்!

ட்ரெண்ட் - மாறிக்கொண்டே போகும். ஒரு புதிய தயாரிப்பைச் சுற்றியுள்ள சலசலப்பு உங்களை ஈர்க்கும் போது அதைப்பற்றி ஆராய சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது உங்களுக்குப் பொருத்தமானதா என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், குறிப்பிட்ட தயாரிப்பை பற்றி எல்லாவற்றையும் கவனியுங்கள், அதை உங்கள் வழக்கமான ஸ்கின் கேருக்குள் இணைக்க முடியுமா என்பதை தீர்மானியுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசீலனையில் உள்ள தயாரிப்பானது ஏற்கனவே உங்கள் ஸ்கின் கேர் வழக்கத்தில் ஏதாவது ஒரு வடிவத்தில் பயன்பாட்டில் இருக்கிறதா அலல்து முற்றிலும் புதியதா என்பதையும் ஆராய்ந்து பின் முடிவெடுக்க வேண்டும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Skincare

அடுத்த செய்தி