ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வேக்ஸிங் செய்யும் முன் மணப்பெண் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன..?

வேக்ஸிங் செய்யும் முன் மணப்பெண் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன..?

வேக்ஸிங்

வேக்ஸிங்

முன்பெல்லாம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள மாதக்கணக்கில் நேரம் கிடைக்கும். ஆனால் தற்போது படிப்பு, வேலை போன்ற காரணங்களால் நிச்சயிக்கப்பட்ட உடனே திருமணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்பெல்லாம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள மாதக்கணக்கில் நேரம் கிடைக்கும். ஆனால் தற்போது படிப்பு, வேலை போன்ற காரணங்களால் நிச்சயிக்கப்பட்ட உடனே திருமணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதனால் எண்ணெய் தேய்த்து குளிப்பது, மஞ்சள், சந்தனம் கொண்டு சருமத்தை பராமரிப்பது போன்றவற்றை செய்ய நேரம் கிடைப்பதில்லை. எனவே ஆன்லைன் யுகத்தில் பெண்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு சாய்ஸ் பியூட்டி பார்லர்கள் மட்டுமே. பேஸியல், பெடிக்யூர், மெனிக்யூர், பிளீச்சிங், த்ரெட்டிங் போன்ற பல விஷயங்களை ஒரே பேக்கேஜாக செய்து கொள்கின்றனர். தற்போது மணப்பெண் அலங்காரத்தில் வேக்ஸிங் முக்கியம் இடம் பிடித்துள்ளது.

திருமண நாளான்று மட்டுமல்லது தேனிலவு ட்ரிப் முடிந்து வரும் வரையிலும், உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்கவும், மணப்பெண்கள் தங்களுக்கு பிடித்தமான உடைகளை எவ்வித அசெளகரியமும் இன்றி அணிந்து கொள்ளவும் மெழுகு கொண்டு செய்யப்படும் வேக்ஸிங் உதவுகிறது. குறிப்பாக ஷேவிங் செய்யும் போது அடுத்த நாளே முடி வளர ஆரம்பித்து சொரசொரப்பான உணர்வை தரக்கூடும், ஆனால் வேக்ஸிங் பல நாட்களுக்கு சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த கட்டுரையில் மணப்பெண்கள் வேக்ஸிங் செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்னவென பார்க்கலாம்...

1. தரமான வேக்ஸ் தேர்வு:

வேக்ஸிங் செய்ய பயன்படுத்தப்பட உள்ள மெழுகின் விலை சற்றே அதிகமாக இருந்தாலும் தரமானதை தேர்வு செய்வது கட்டாயமாகும். ஏனெனில் தரமற்ற வேக்ஸ் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். திருமண நாளான்று தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க முடியாது. மிருதுவான மற்றும் பளபளப்பான சருமம் வேண்டும் என்றால், கோல்டு லிப்போசோலபுள் வேக்ஸ் சரியான தேர்வாக இருக்கும். லிப்போசோலபுள் வகையில் உள்ள வேக்ஸ்கள் அனைத்துமே தரம் மற்றும் ஐஜினிக் நிறைந்தவை ஆகும்.

Also Read : பியூட்டி பார்லரில் ஹேர் வாஷ் செய்தபோது பெண்ணுக்கு ஸ்டிரோக் பாதிப்பு : என்ன காரணம்..?

மென்மையான வேக்ஸை விரும்புவோருக்கு மைக்ரோவேவ் வேக்ஸின் உயர்ந்த HD டைட்டானியம் ஃபார்முலா சிறந்ததாக இருக்கும். இது மேலோட்டமாக செயல்படாமல் ஆழமாக ஊருடுவி வேறோடு முடியை அகற்ற பயன்படுகிறது. இதன் மூலமாக சருமத்திற்கு மென்மையான லுக் கிடைக்கும்.

அடுத்ததாக பீலபிள்ஸ் எனப்படும் மணிகள் வடிவத்திலான கடினமான வேக்ஸ், முகம், அக்குள், அந்தரங்க உறுப்புகள் போன்ற உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் முடியை அகற்ற உதவுகிறது.

2. வேக்ஸிங்கிற்கு முன்னும், பின்னும் செய்யவேண்டியவை:

நீங்கள் தரமான நல்ல வேக்ஸிங் சிகிச்சையைத் தான் தேர்வு செய்துள்ளீர்களா? என்பதை சம்பந்தப்பட்ட அழகுக்கலை நிபுணர்கள் வேக்ஸிங்கிற்கு முன்னதாகவும், பின்னதாகவும் கொடுக்கும் சில பராமரிப்புகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். மணப்பெண் வேக்ஸிங் செய்வதற்கு முன்னதாக, ப்ரீ வேக்ஸிங் ஜெல் ட்ரீட்மெண்ட் செய்யப்படும். இது சருமத்தை மென்மையாக்கவும், அழுக்குகளை நீக்கவும் உதவுகிறது. ப்ரீ வேக்ஸிங் ஜெல் ட்ரீட்மெண்ட்டிற்கு பிறகு வேக்ஸிங் செய்யும் போது, சருமத்தில் உள்ள முடிகளை வேக்ஸ் மூலம் அகற்றுவது எளிதாக்கப்படுகிறது.

வேக்ஸிங் செய்த பிறகு மேற்கொள்ளப்படும் போஸ்ட் வேக்ஸிங் ட்ரீட்மெண்ட்டானது, சருமத்தில் படிந்துள்ள மெழுகை அகற்றவும், சருமத்தை ரீலாக்ஸ் செய்யவும், பளபளப்பாக்கவும் உதவுகிறது.

3. கை, கால்களுக்கு சிறந்த வேக்ஸிங் எது?

மணப்பெண் திருமண நாளுக்கு முன்னதாக தனது கைகள் மற்றும் கால்களை பொலிவாக வகைத்துக்கொள்ள பெடிக்யூர், மெனிக்யூர் சிகிச்சைகளை செய்து கொள்வதைப் பார்த்திருப்போம். இதேபோல் கை மற்றும் கால்களை வேக்ஸிங் செய்யும் போது கூடுதல் ஊட்டச்சத்தை எதிர்பார்ப்பவர்கள் பாரஃபின் அடங்கிய வேக்ஸிங் சேவையை தேர்வு செய்யலாம். பாரஃபின் சிகிச்சைகள் சருமத்திற்குள் ஆழமாக ஊருடுருவுவதால், அதனை ஈரப்பதத்துடனும், மென்மையாகவும், அனைத்து பருவநிலைக்கும் ஏற்றதாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை திறம்பட மேம்படுத்துவதால், கடினமான தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு ரிலாக்ஸ் மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Bride tips, Waxing