Home /News /lifestyle /

ஹோலி வண்ணப்பொடிகள் சருமத்தை பாதிக்காமல் இருக்க இந்த 3 வகை எண்ணெய்களை அப்ளை செய்யுங்கள்..!

ஹோலி வண்ணப்பொடிகள் சருமத்தை பாதிக்காமல் இருக்க இந்த 3 வகை எண்ணெய்களை அப்ளை செய்யுங்கள்..!

ஹோலி

ஹோலி

ஹோலியின் போது தோல் பராமரிப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் பருவம் மாறுகிறது மற்றும் நமது சருமம் மாறுகிறது. வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருக்க வேண்டும்.

வண்ணங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும் என்பார்கள். அந்த வகையில் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும் வண்ணமயமான பண்டிகைதான் ஹோலி. அதற்காக அனைவரும் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது அதாவது ஹோலியின் போது தூவப்படும் வண்ணப்பொடிகளில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் சேதத்தை உண்டாக்குகின்றன.

எனவே ஹோலியின் போது தோல் பராமரிப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் பருவம் மாறுகிறது மற்றும் நமது சருமம் மாறுகிறது. வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருக்க வேண்டும். பியூட்டி குரு, டாக்டர். ப்ளாசம் கோச்சார், (ப்ளாசம் கோச்சார் குழுமம் தலைவர்) ஹோலியின் போது சருமத்தை பாதுகாக்க சில எண்ணெய்களைப் பட்டியலிடுகிறார் மற்றும் ஹோலிக்கு பிறகு ஆரோக்கியமான சருமத்தைப் பெறவும் சில குறிப்புகளை வழங்குகிறார்.

எண்ணெய்களின் ராஜா, தேங்காய் எண்ணெய். இது எப்போதும் அன்றாட சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான எண்ணெயாக இருக்கிறது. தேங்காய் எண்ணெயின் சிறந்த விஷயம் என்னவென்றால், அது சருமத்தில் தடவிய பின் பாதுகாப்பான லேயரை உருவாக்குகிறது. இதனால் நிறங்களையும் ஊடுருவ விடாமல் தோலில் ஒரு கவசத்தைப்போல் செயல்படும். எனவே ஹோலி கொண்டாட்டத்திற்கு செல்லும் முன் சருமத்தில் தேங்காய் எண்ணெயை தடவிச் செல்லுங்கள்.



நீங்கள் தடவ வேண்டிய இரண்டாவது எண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆகும். இது உங்கள் தோலில் தடவினாலும் லேசான உணர்வையே அளிக்கும். உங்கள் முகத்தை க்ரீஸ் செய்யாது . அதோடு சூரியனில் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

மூன்றாவதாக உங்கள் தோலில் பாதாம் எண்ணெயையும் பயன்படுத்தலாம். எண்ணெயில் வாசனையை இல்லை என நினைத்தால் நறுமணத்தைக் கூட்ட சில துளிகள் லாவெண்டர் அல்லது சந்தன எண்ணெய் கலக்கலாம். இது நிறத்தை தோலில் ஒட்டிக்கொள்ள அனுமதிக்காது மற்றும் எளிதில் அகற்றவும் உதவும்.

ஹோலி விளையாடிய பிறகு தோல் எரிச்சல் ஏற்படுவதாக பலர் புகார் கூறுகின்றனர். இதற்கு சரியான முன்னெச்சரிக்கை பராமரிப்புடன் செல்லாததுதான் காரணம். எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து செல்ல வேண்டும்.

உதட்டி ஓரங்களில் உண்டாகும் கருமை முக அழகை கெடுக்கிறதா..? உங்களுக்கான வீட்டுக்குறிப்புகள்..!

முதலில் ஒரு இலகுவான எண்ணெயைப் பயன்படுத்துங்கள். ஹெவியான எண்ணெய் அல்லாமல் மேலே குறிப்பிட்ட லேசான எண்ணெய் வகைகளை தடவலாம். அவை முகத்தை கிரீஸ் தடவியதுபோல் பொலிவிழக்கச் செய்யாது. முகம் , கை, கால் என அதை முழுவதுமாக தடவுங்கள். உங்கள் கழுத்தையும் மறந்துவிடாதீர்கள், பின்னர் அதன் மேல் மாய்ஸ்சரைசரையும் அப்ளை செய்யுங்கள்.

இந்த எண்ணெய்கள் நிச்சயமாக உங்கள் சருமத்தை அனைத்து கடுமையான நிறங்கள் மற்றும் இரசாயனங்களிலிருந்து பாதுகாக்கும். இதனால் நீங்கள் வண்ணங்களின் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.



ஹோலி நிறங்கள் சருமத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும்?

உலர்ந்த மற்றும் ஈரமான நிறங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அவற்றில் உள்ள நச்சுத்தன்மையின் காரணமாக தோல் ஒவ்வாமை, சொறி, சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும். அவை ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் ஒவ்வாமைகளையும் தூண்டலாம்.

ஹோலியில் உங்கள் சருமத்தை பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி?

உங்கள் சருமத்தை ஹோலி வண்ணப்பொடியிலிருந்து பாதுகாக்க, உடலின் பெரும்பாலான பாகங்களை மறைக்கும் ஆடைகளை அணியுங்கள். நிறங்களை வெளிப்படுத்தும் முன் உங்கள் உடல் முழுவதும் எண்ணெயை தாராளமாக தடவவும். ஏனெனில் இது சருமத்திற்கும் நிறத்திற்கும் இடையில் ஒரு பாதுகாப்பு தடையாக இருக்கும்.

பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் கெட்டியாக இருப்பதால் பயன்படுத்தலாம். இதனால் சேதம் குறையும். நிறங்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்கள் சருமத்தை மேலும் பாதுகாக்க உங்கள் உடலின் அனைத்து வெளிப்படும் பகுதிகளிலும் சன் ஸ்கிரீனை தாராளமாக பயன்படுத்துங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Holi Celebration, Skincare, Skincare Oil

அடுத்த செய்தி