எண்ணெய் பிசுபிசுப்பு முகத்தை பொலிவிழக்கச் செய்கிறதா..? இந்த 3 வகையான ஃபேஸ் ஸ்கிரப் டிரை பண்ணி பாருங்க..!

சோர்வான முகம், முகப்பருக்கள் , இறந்த செல்கள் சருமத்தை சேதப்படுத்துதல் என பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எண்ணெய் பிசுபிசுப்பு முகத்தை பொலிவிழக்கச் செய்கிறதா..? இந்த 3 வகையான ஃபேஸ் ஸ்கிரப் டிரை பண்ணி பாருங்க..!
சோர்வான முகம், முகப்பருக்கள் , இறந்த செல்கள் சருமத்தை சேதப்படுத்துதல் என பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  • Share this:
எண்ணெய் சருமம் கொண்டோர் சமாளிக்க வேண்டிய சிக்கல் எண்ணெய் சுரத்தலைக் கட்டுப்படுத்துவதுதான். எண்ணெய் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த ஏதாவதொறு வீட்டுக்குறிப்பை செய்துகொண்டே இருந்தால்தான் பொலிவான சருமம் கிடைக்கும்.

இல்லையெனில் சோர்வான முகம், முகப்பருக்கள் , இறந்த செல்கள் சேர்ந்து சருமத்தை சேதப்படுத்துதல் என பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே எண்ணெய்யை கட்டுப்படுத்த இந்த ஃபேஸ் ஸ்கிரப் டிரை பண்ணுங்க.

தக்காளி மற்றும் சர்க்கரை : தக்காளியை பாதியாகக் நறுக்கி அதை சர்க்கரையில் தொட்டு முகம் முழுவதும் தேய்த்து 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். பின் முகத்தை கழுவ எண்ணெய் பிசுக்கு நீங்கி முகம் தெளிவாக இருக்கும்.




இந்து உப்பு, எலுமிச்சை, தேன் : எலுமிச்சை, தேன் 2 ஸ்பூன், உப்பு 1 ஸ்பூன் என கலந்துகொள்ளுங்கள். பின் முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுகள். இதனால் இறந்த செல்கள் நீங்கும். முகம் எண்ணெய் இல்லாமல் ஜொலிக்கும். வாரம் ஒரு முறை செய்யுகள்.

மூக்கு, தாடைகளில் உள்ள வெண்புள்ளிகளை போக்க இந்த எளிய முறையைப் பின்பற்றுங்கள்..!காஃபி பொடி , தயிர் : இரண்டையும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்கு கலக்குங்கள். பின் அதை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். தயிர் சருமத்தில் உள்ள கிருமிகளை அழிக்கும். காஃபி பொடி எண்ணெய் பிசுக்கை நீக்கும். முகத்தை கழுவியபின் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள். வாரம் இரண்டு முறை செய்யுங்கள். முகம் ஜொலிக்கும்.

பார்க்க :

 

 
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading