முடி வளர்ச்சியை பொருத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதற்கு ஏற்ப பிரச்சனைகளும் வெவ்வேறாகவே இருக்கும். ஹார்மோன் சமநிலையின்மை , ஊட்டச்சத்து குறைபாடு, தீராத நோய் என பல காரணங்களின் தாக்கம் தலைமுடியிலும் இருக்கும். சில சமயங்களில் நாம் நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளாலும் முடி உதிர்வு, முடி உடைதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். அந்த வகையில் இந்த 3 தவறுகள் நீங்களும் செய்கிறீர்களா என கவனியுங்கள்.
ஈரத்தலையில் சீப்பு பயன்படுத்துதல் அல்லது ஈரத்தலையுடன் தூங்குதல் :
சிலர் தலைக்குக் குளித்ததும் நேரமின்மையால் காய வைக்காமல் அப்படியே சீப்பு கொண்டு தலையை இறுக்க வாறிக்கொள்வார்கள். இதனால் முடி உதிர்வு அதிகரிக்கும். அதேபோல் ஈரத்தலையுடன் தூங்கினாலும் முடி உதிர்வு அதிகரிக்கும். குறிப்பாக படிந்திருக்கும் ஈரம் வேர்களில் பூஞ்சைகளை உருவாக்கும். முடி உதிர்வு மட்டுமன்றி முடி உடைதல் பிரச்சனையும் உண்டாகும். முடியின் வேர்கள் சேதமடையும். எனவே தலைக்கு குளிக்க முடிவு செய்தால் வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே தலைக்கு குளித்துவிடுங்கள். இதனால் முடியை காய வைக்க நேரமும் கிடைக்கும். முடியும் சேதமடையாது.
தலைமுடி தயாரிப்புகளை நேரடியாக பயன்படுத்துதல் :
சிலர் தலைமுடி பராமரிப்பிற்காக கெமிக்கல் கொண்ட தயாரிப்புகளை நேரடியாக பயன்படுத்துவார்கள். அவ்வாறு நேரடியாக பயன்படுத்துவது வேர்களை சேதப்படுத்தும். இதனால் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலர் உச்சந்தலையில் நேரடியாக அப்ளை செய்வதும் இதற்கு முக்கிய காரணம். எனவே வேர்களில் படாதவாறு இரண்டு அடி விட்டு முடியில் தடவ வேண்டும். இதனால் வேர்களின் சேதத்தை தவிர்க்கலாம். முடிந்தவரை கெமிக்கல் அல்லாத மூலிகை குறிப்புகளை பயன்படுத்துவது பக்கவிளைவுகளை குறைக்கும் அல்லது பக்கவிளைவுகளே இருக்காது.
நுரை அல்லது நுரை இல்லை?
பலருக்கும் ஷாம்பூ என்றாலே அதிக நுரை வர வேண்டும். அதுதான் நல்ல ஷாம்பூ என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் நுரை என்பது சல்பேட்டால் தூண்டப்படுகிறது. இது நம் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். முடியை பராமரிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகளில் இதுவும் ஒன்று. அடுத்த முறை நீங்கள் ஷாம்பூ வாங்கும்போது அது சல்பேட் இல்லாததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் வறட்சி, முடி உடைப்பு அல்லது ஃபிரிஸ் ஆகியவற்றைத் தடுக்கலாம்.
குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைக்க இதை செய்யுங்கள்..
உங்கள் தலைமுடிக்கு கலரிங் செய்யும்போது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாத இயற்கை சாயங்களைத் தேடுங்கள். குறிப்பாக PPD, Paraben, EDTA, Sulfates, Resorcinol, Mineral Oil, Sodium Chloride, Sodium Perborate, Hydrogen Peroxide, Synthetic Fragrance, Gluten and ammonia மற்றும் அதன் துணை தயாரிப்புகளான Ethanolamine, Diethanolamine மற்றும் Triethanolamine போன்றவை இல்லாமல் இருக்கும் பொருட்களை தேர்வு செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.