அடர்த்தியான தாடி இப்போதைய ட்ரெண்ட். கெத்து காட்டவும், ஸ்டைல் செய்யவும் பார்த்துப் பார்த்து வளர்த்த தாடிக்கு தலைமுடியைப் போலவே பராமரிப்பு அவசியம். ஏனெனில் ஆண்களின் தாடியும் கிருமி நிறைந்தது என்பது ஆய்வுகள் கூட நிரூபிக்கும் உண்மை. எனவே தாடி பராமரிப்பிற்கு இரண்டு நிமிடங்கள் ஒதுக்குங்கள் போதும்.
பியர்ட் வேக்ஸ் : தாடி ஷேப் கிடைக்க வேக்ஸ் பயன்படுத்தலாம். இது தாடியின் முடி உதிர்வு, உடைதல் போன்றவற்றை தடுத்து மென்மையான தாடியை தரும்.
பியர்ட் கண்டிஷ்னர் : தாடிக்கு ஷாம்பு பயன்படுத்துதல் மட்டும் போதாது. ஷாம்பு முடியை வறட்சியாக்கும். அதற்கு ஈடுகட்ட பியர்ட் கண்டிஷ்னர் பயன்படுத்த வேண்டும்.
டிரையர் : தலைமுடிக்கு ஹேர் டிரையர் பயன்படுத்துவதுபோல் தாடிக்கும் பயன்படுத்த வேண்டும். தாடிக்கு பயன்படுத்தும்போது கவனமாக செயல்பட வேண்டும். முகச்சருமம் மென்மையாக இருக்கும். எனவே 10 இன்ச் இடைவெளி விட்டு பயன்படுத்துங்கள்.
பிரஷ் : பியர்ட் பிரஷ் பயன்படுத்தி தாடியை சீவுவது நல்லது. இதனால் அந்த இடத்தை சுற்றி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முடி வளர்ச்சி கிடைக்கும். இதனால் தாடிக்கு ஷேப் கிடைக்கும்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.