சாப்பிடாத குழந்தையை சாப்பிட வைக்கணுமா...? இதை ட்ரை பண்ணுங்க

news18
Updated: July 11, 2018, 6:40 PM IST
சாப்பிடாத குழந்தையை சாப்பிட வைக்கணுமா...? இதை ட்ரை பண்ணுங்க
news18
Updated: July 11, 2018, 6:40 PM IST
அன்றாடம் வேலைக்கு போகும் பெண் என்றாலும் வீட்டிலே இருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண் என்றாலும் அனைவரது கவலையும் பிள்ளைகள் சாப்பிடுவதே இல்லை என்பதுதான். எத்தனை ருசியா செய்து கொடுத்தாலும் சாப்பிடுவதே இல்லை என்கிற வருத்தக் குரல்தான் எல்லா வீடுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  சாப்பிடாத குழந்தைகளின் சத்துணவு வணிக நிறுவனங்கள் இதை சரியாக பயன்படுத்தி தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்கின்றன.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு முதலில் பசியைத் தூண்டி விட வேண்டும். பசி உணர்வு வந்து விட்டால் எந்தவொரு குழந்தையும் கேட்டு வாங்கிச் சாப்பிடும். பசியை தூண்டிவிட பச்சிளம் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு தாய்பால்தான் மருந்து. குழந்தை பெற்ற தாய்மார்கள் சில மாதங்கள் ‘பிரசவ நடகாய லேகிய’த்தை கட்டாயமாக சாப்பிடுங்கள். இதனால் குழந்தையின் பசி உணர்வு தூண்டப்பட்டு நன்றாக பால் குடிக்கும்.

ஆறு மாதத்துக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு நேந்திரம் வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்துப் பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் துளி சுக்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சுவதுபோல காய்ச்சிக் கொடுக்க எடை கூடும். இது கேரளா ஸ்பெஷல்!

திட உணவு எடுக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் பருப்புடன் சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பிஸ்கட் மற்றும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை தூண்டும் என்று சொல்லி விற்கும் ஊட்டச்சத்து பானங்களை நிறுத்தி விடுங்கள் பசி தானாக எடுக்கத் தொடங்கிவிடும்.

சாப்பிடவே மாட்டேன் என்கிற குழந்தையை அடித்து உங்கள் வழிக்கு கொண்டுவர  நினைக்காதீர்கள். கூடுதலாக அன்பு செலுத்தி அரவணையுங்கள், உணவு மீது ஆர்வம் வருகிற மாதிரி குழந்தை விரும்புகிற சுவையில் நீங்களே சமைத்து கொடுங்கள்.

சில குழந்தைகளுக்கு மாந்தம் பிடித்திருந்தாலும் சரி செய்யதால்தான் பசியெடுக்கும். மாந்தத்திற்கு தீர்வு  வேப்பங்கொழுந்து, ஓமம், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து  மிளகு அளவு உருட்டி கொடுங்கள். எப்பேர்பட்ட மாந்தத்தையும் இது சரி செய்துவிடும்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...