Home /News /lifestyle /

உங்கள் உடலில் இருக்கும் கூடுதல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகை பவுடர் 1 டீஸ்பூன் போதும்!

உங்கள் உடலில் இருக்கும் கூடுதல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகை பவுடர் 1 டீஸ்பூன் போதும்!

 எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகை

எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகை

இந்திய ஜின்ஸெங் என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்ட ஒரு அற்புத ஆயுர்வேத மூலிகையாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    எடை இழப்பிற்கு உதவும் சப்ளிமென்ட்ஸ்கள் மார்க்கெட்டில் ஏராளமாக உள்ளன. எனினும் பாரம்பரிய ஆயுர்வேத முறைப்படி எடையைக் குறைப்பது நம் உடலுக்குப் பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தாது என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.

    நீங்கள் உங்கள் உடல் எடையை இயற்கை முறையில் குறைக்க விரும்பினால் அதற்கு உதவுகிறது ஆயுர்வேத மருத்துவ மூலிகையான அஸ்வகந்தா. இந்திய ஜின்ஸெங் என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்ட ஒரு அற்புத ஆயுர்வேத மூலிகையாக இருக்கிறது. தூக்கமின்மை, பதட்டம், மனச்சோர்வு, பாலியல் பிரச்சனைகள், பலவீனம், நியூரோஜெனரேட்டிவ் நோய் மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், எடையைக் குறைப்பதில் அஸ்வகந்தாவின் பங்கு பற்றி தற்போது பார்க்கலாம்.

    உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பல விஷயங்களில் கவனம் செலுத்தும் அஸ்வகந்தா, எடை இழப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. அஸ்வகந்தா எப்படியெல்லாம் எடை குறைப்புக்கு உதவுகிறது.

    ஆயுர்வேத மூலிகை


    மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்:

    பலரது எடை அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம். ஏனென்றால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஒருவர், அதிக ஜங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கம் உடல் எடையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அஸ்வகந்தா மன அழுத்தத்தைப் போக்க உதவி எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

    தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தல்:

    போதுமான தூக்கம் இல்லாமல் போனால் ஹார்மோன்கள் சமநிலையின்மை சிக்கல் மற்றும் எடை அதிகரிப்பு சிக்கல் உள்ளிட்டவற்றைப் பெறுவர் சந்திக்க நேரிடும். தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் மருத்துவரின் அறிவுரைப்படி அஸ்வகந்தா எடுத்துக் கொள்வது போதுமான அளவு தூக்கத்தைப் பெற உதவுகிறது. இதனால் ஹார்மோன் சிக்கல்கள் குறைந்து அதிகரித்த உடல் எடையும் கட்டுக்குள் வரும்.

    Also Read : பார்ட் பார்டாக உடலில் கொழுப்பை கரைக்கும் உத்திகளை தெரிந்து கொள்ளுங்கள்!

    செரிமானத்தை மேம்படுத்தல்:

    செரிமான பிரச்சனைகள் இருந்தால், அவ்வளவு எளிதில் உடல் எடை குறையாது என்பது உங்களுக்குத் தெரியுமா. சீரற்ற செரிமானம் எடை குறைப்பு முயற்சியைக் கடினமாக்குகிறது. வயிறு தொடர்பான சிக்கல்களைக் குணப்படுத்தவல்லது அஸ்வகந்தா. சிறந்த செரிமானத்திற்கு உதவி எடை இழப்பு முயற்சிகளை எளிதாக்க உதவுகிறது.

    ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தது:

    எடை குறைப்பு முயற்சியில் வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் மட்டங்களுக்கு முக்கியப்பங்கு உண்டு. இவற்றை மேம்படுத்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அவசியம். அஸ்வகந்தாவில் உடல் எடையைக் குறைக்கத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் நிறைந்துள்ளன. அஸ்வகந்தா உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது.

    டயட்டில் எவ்வாறு சேர்க்கலாம்.?

    காப்ஸ்யூல் வடிவில் அஸ்வகந்தா கிடைத்தாலும் உலர்ந்த அஸ்வகந்தா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொடி மிகவும் பயனுள்ளது. ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியைச் சேர்த்து, சுவைக்கு ஏற்ப சிறிது தேன் அல்லது ஏலக்காய் சேர்த்துப் பருகலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அஸ்வகந்தா பாலை குடித்து வந்தால் எடை குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும்.
    Published by:Janvi
    First published:

    Tags: Ayurveda, Ayurvedic medicine, Health, Weight loss

    அடுத்த செய்தி