குழந்தைப்பிறப்பு என்பது ஒவ்வொரு தம்பதியினருக்கும் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். ஆனால் என்னதான் நாம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பெரும்பாலான நேரங்களில் தோல்வியைதான் சந்திக்கிறோம். இதோடு இயற்கையான முறையில் கருத்தரிப்பு என்பது இன்றைக்கு பலருக்கு எட்டா கனியாகவே உள்ளது.
இவர்களுக்காக ஒவ்வொரு ஊர்களிலும் பல செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் செயல்பட தொடங்கிவிட்டது. இதுப்போன்ற நிலை எதுவும் ஏற்படாமல் இயற்கையான முறையில் குழந்தை பிறப்பிற்கு நீங்கள் திட்டமிட்டிருந்தால் ஆயுர்வேதம் சொல்லும் வழிமுறைகளைக் கொஞ்சம் பாலே பண்ணுங்க. நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாக காணலாம்.
கருத்தரிக்கத் திட்டமிடும் போது எதிலும் நாம் அவசரப்படக்கூடாது. எப்படி ஒரு விவசாயி தனது வயலில் புதிய பயிர்களை விளைவிக்கும் போது காலநிலை, மண்வளம், முறையான நீர்ப்பாசனம் மற்றும் தரமான விதை வாங்குவதில் கவனம் செலுத்துகிறார்களோ? அதே போன்று தான், பெண்கள் கருத்தரிப்பதற்கான முயற்சியை எடுக்கும் போது சில விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான கருத்தரிப்புக்கு, கருவுற்ற காலம், ஆரோக்கியமான கருப்பைச் சூழல், சரியான இரத்த ஓட்டம் மற்றும் நல்ல தரமான கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் ஆகியவை அவசியம்.
Also Read : பிரச்சனையில்லாத கர்ப்பத்திற்கு தந்தையின் ஆரோக்கியமும் அவசியம் : ஆய்வு தரும் விளக்கம்..!
இவற்றை அடைய வேண்டும் என்றால், கருத்தரிப்பதற்கு முன் தம்பதியரின் முன்கூட்டிய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேத முறைகள்.
குறிப்பாக ஆண் மற்றும் பெண் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு மாற்றங்கள், தியானம், யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆயுர்வேத சூத்திரங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு தம்பதியினரும் குழந்தைப் பிறப்பிற்கானத் திட்டமிடுவதற்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு முன்பே ஆயுர்வேத முறையிலான கர்ப் சன்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும்.
கருப்பையில் கல்வி எனப்படும் சமஸ்கிருத சொல் தான் கர்ப் சன்ஸ்கார் என்றழைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தாயின் மனநிலை தான் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. எனவேதான் கர்ப்பம் தரித்தவுடன் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும், இனிமையான இசை கேட்பது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, குழந்தைகளிடம் பேசுவது போன்றவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த செயல்களை நாம் செய்து வரும் போது, குழந்தைகளின் வளர்ச்சியில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். மருத்துவ ரீதியாக, பீஜா சன்ஸ்காருக்குப் பிறகு கருத்தரிக்கும் ஒரு பெண்ணுக்குக் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் குறைவு மற்றும் சிறந்த கரு ஆரோக்கியம் மற்றும் அழகான தாய்மைப் பயணம் நமக்குக் கிடைக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே, குழந்தைகள் கருத்தரிக்கத் திட்டமிட்டிருந்தால் நிச்சயம் ஆரோக்கியமான விஷயங்களை மேற்கொள்வதற்கு மறந்துவிடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayurvedic Tips, Pregnancy, Pregnancy Plan, Pregnancy Symptoms