Work From Home - ஆல் ஏற்படும் உடல் வலி , சோர்வு , பிற உடல் நல பாதிப்புகளை தவிர்க்க எளிய வழிகள்..!

வேலை சுமை

உட்கார்ந்து வேலை பார்க்கும் முறை துவங்கி தொடர்ச்சியாக வேலை பார்க்கும் நேரங்கள் வரை என பல சிரமங்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் போது சந்திக்க நேரிடுகிறது. வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள புதிதாக பரவி காணப்படும் இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரம் பலருக்கு எண்ணற்ற உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
பல மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு அலுவலகங்கள் தொற்று பரவல் துவங்கிய கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை ஊழியர்கள் நேரடியாக வந்து வேலை பார்க்கும் முறையை மாற்றி இருக்கின்றன. ஒரு வருடத்திற்கும் மேலாக பல நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். என்ன தான் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்றாலும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் முறையிலும், வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

உட்கார்ந்து வேலை பார்க்கும் முறை துவங்கி தொடர்ச்சியாக வேலை பார்க்கும் நேரங்கள் வரை என பல சிரமங்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் போது சந்திக்க நேரிடுகிறது. வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள புதிதாக பரவி காணப்படும் இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரம் பலருக்கு எண்ணற்ற உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தி உள்ளது. முறையான நாற்காலி மற்றும் டேபிள் இன்றி பலரும் பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அலுவலக வேலைகளை கவனித்து வருவது பலருக்கு உடல் வலி, சுளுக்கு குறிப்பாக கழுத்து,முதுகு மற்றும் கீழ் இடுப்பில் வலிகளை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் அலுவலகங்களில் வேலை செய்யும் போது கம்ப்யூட்டரை சரியான உயரத்தில் வைத்து நாமும் சரியான உயரத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் ஊழியர் ஒருவர் தனது வீட்டில் அலுவலக செட்டப்பை ஏற்படுத்தி கொண்டு சிறந்த நடைமுறைகளை பின்பற்றி வீட்டில் வேலை பார்ப்பது அனைவருக்கும் சாத்தியமில்லை.



பாட்டியா மருத்துவமனையின் தலைமை பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ஷீத்தல் ரானே பேசுகையில், கொரோனா காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை காரணமாக கழுத்து மற்றும் பேக் பெயின் பிரச்சனைகள், கார்பல் டன்னல் நோய்க்குறி மற்றும் கர்ப்பப்பை வாய் சிதைவு வட்டு நோய் உள்ளிட்ட பலவவற்றை ஊழியர்கள் எதிர்கொள்ள வழிவகுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது ஊழியர்கள் கடுமையான வலிகளை அனுபவிக்க மிகப் பெரிய காரணம் அவர்கள் சரியான நடைமுறை மற்றும் சரியான பொசிஷனில் அமர்ந்து வேலை செய்வதை பின்பற்ற தவறுகிறார்கள். மேலும் அவர்களுக்கு உடல் வலிக்கும் போது மட்டுமே அதை பற்றி கவலைப்பட துவங்குகிறார்கள் என்றும் கூறி உள்ளார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து டாக்டர் ஷீத்தல் கூறியுள்ள சில யோசனைகள் கீழ்வருமாறு:

போதுமான பிரேக் தேவை:

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தொடர்ச்சியாக வேலைகளை செய்து கொண்டே இருக்காமல் அவ்வப்போது பிரேக் எடுத்து கொள்வது மிக முக்கியம். சோர்வு மற்றும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடி ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.

பொசிஷனை மாற்றுங்கள்:

முழங்கால்களை வளைத்து, முதுகெலும்பு மற்றும் தோள்களை முன்னோக்கி வளைத்து நீண்ட நேரம் ஒரே பொஷிஷனில் உட்கார்ந்து வேலைகளை செய்வது உடலுக்கு நல்லதல்ல. எனவே நீங்கள் உட்கார்ந்திருக்கும் பொசிஷனை அடிக்கடி மாற்றிக் கொண்டு வேலைகளை தொடருங்கள்.



சரியாக உட்கார வேண்டும்:

எந்த நாற்காலியில் உட்கார்ந்தாலும் உங்கள் கால்கள் தரையில் தட்டையாகவும், உங்கள் பின்புறம் நேராகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் பொஷிஷனில் உட்காருங்கள். மேலும் வேலை செய்யும் போது உங்கள் முழங்கால்களின் பின்புறம் நாற்காலியை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்வது பல ரத்த நாளங்களுக்கு தேவையில்லாத அழுத்தம் கொடுக்கும்.

Workouts At Home | ஜிம் தேவையில்லை… வீட்டிலேயே செய்யும் வொர்க்கவுட் மூலம் செலவில்லாமல் நீங்கள் ‘சூப்பர் ஃபிட்’ ஆகலாம்!

மானிட்டர் பொஷிஷன்:

உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஸ்கிரீன் உங்கள் கண்களிலிருந்து ஒரு அடி தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் மானிட்டரின் மேற்புறமும் உங்கள் கண்களும் சமமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மானிட்டரை உங்கள் முகத்திற்கு சென்ட்டராக இருப்பது அவசியம்.

கை பாதுகாப்பு:

கார்பல் டன்னல் நோய்க்குறியைத் தவிர்க்க உங்கள் கைகள் மவுஸை இயக்கும் போது முன்கைகள் ஒரு தட்டையான மேற்பரப்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். தவிர உங்கள் காதுகள், தோள்பட்டை மற்றும் இடுப்பு ஒரே லைனில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி இருக்குமாறு பார்த்து கொள்வது இது உங்கள் முதுகெலும்பு மற்றும் கழுத்தில் உள்ள எடையை குறைக்கிறது.



தவறாமல் உடற்பயிற்சி:

இதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 நிமிட மிதமான உடற்பயிற்சி தேவை என்று WHO பரிந்துரைக்கிறது. வழக்கமான உடற்பயிற்சியும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 
Published by:Sivaranjani E
First published: