குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடத்தப்போறீங்களா? செப்டம்பரில் அதற்கான நல்ல நாள் மற்றும் நேரம் இதோ..

காட்சி படம்

செப்டம்பர் மாதம் உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்போகிறீர்கள் என்றால், எந்த தேதியில் இந்த சுப நிகழ்ச்சியை வைக்கலாம் ?

  • Share this:
இந்துக்கள் எந்த ஒரு சுப காரியத்தையும், சடங்குகளையும் சுப முகூர்த்த நாளில் செய்யவே விரும்புவார்கள். சொத்து மற்றும் வாகனங்கள் வாங்குவது, பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது, காது குத்துவது, மொட்டை அடிப்பது மற்றும் திட உணவை ஊட்டுவது போன்ற அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் , ஒரு நல்ல தேதியில் செய்தால் அது வெற்றியையும் செழிப்பையும் தரும் என்று பல காலமாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த சுப முகூர்த்த தினங்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சீரமைப்பு அடிப்படையிலும், சில நேரங்களில் குண்டலியில் உருவாகும் யோகங்கள் மற்றும் தசாக்களின் அடிப்படையிலும் சித்தரிக்கப்படுகின்றன.

இந்து ஜோதிடத்தில், அதிர்ஷ்டம் மற்றும் நன்மை பயக்கும் தினம் என்று கருதப்படும் சில நாட்கள் மற்றும் கால கட்டங்கள் உள்ளன. மேலும், முகூர்த்த தினத்தை குறிக்கும் போது, திதி அல்லது தேதி, நாள், யோகா, கரணம், நட்சத்திரம், நவகிரகங்கள், மல்மாக்கள், ஆதிக் மாஸ், சுக்கிரன் மற்றும் வியாழன் எரிப்பு நாள், சுப மற்றும் அசுப யோகம், பத்ரா, அதிஷ்ட லக்னம் மற்றும் ராகு கால் ஆகியவற்றை மனதில் வைத்து குறிக்கப்படுகின்றன. சரி, இந்த செப்டம்பர் மாதம் உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்போகிறீர்கள் என்றால், எந்த தேதியில் இந்த சுப நிகழ்ச்சியை வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

செப்டம்பர் 3: காலை 9:15 முதல் 10:15

செப்டம்பர் 8: காலை 9:15 முதல் 10:15

செப்டம்பர் 9: காலை 10:45 முதல் 11:45

செப்டம்பர் 12: காலை 10:45 முதல் 11:45

செப்டம்பர் 16: காலை 6:15 முதல் 7:15 மற்றும் காலை 10:45 முதல் 11:45

செப்டம்பர் 17: காலை 12:15 முதல் 1:15

செப்டம்பர் 22: காலை 9:15 முதல் 10:15

செப்டம்பர் 23: காலை 10:45 முதல் 11:45

செப்டம்பர் 26: காலை 6:15 முதல் 7:15 மற்றும் காலை 10:45 முதல் 11:45

செப்டம்பர் 27: காலை 6:15 முதல் 7:45

ஒரு நாளின் 24 மணிநேரத்தில் மொத்தம் 30 சுப முகூர்த்தங்கள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு புனிதமான முகூர்த்தமும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு சுப தினமாக இருக்கும். அதேபோல, ஒரே முகூர்த்த நேரம் அனைத்து விதமான காரியங்களை செய்ய நல்ல காலமாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. வாகனங்களை வாங்குவது, சொத்தில் முதலீடு செய்வது, நிலம் வாங்குவது போன்ற சுப காரியங்களுக்கு கூட முகூர்த்த நேரங்கள் வேறுபடலாம். சரி நீங்கள் வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் செப்டம்பர் மாதத்தில் எந்த நாளில் எந்த நேரத்தில் வாங்கலாம் என்பதை பாப்போம்.

Also read : உங்கள் குழந்தை துறுதுறுவென இருக்கிறதா? அப்ப இத மட்டும் பண்ணுங்க..

செப்டம்பர் 2: வாகனம் வாங்க மதியம் 2:57:22 முதல் செப்டம்பர் 3ம் தேதி அதிகாலை 05:59:17 வரை

செப்டம்பர் 9: காலை 6:02:46 முதல் செப்டம்பர் 10ம் தேதி 00:20:20 வரை.

செப்டம்பர் 12: காலை 9: 50: 41 முதல் மாலை 05:22:38 மணி வரை.

செப்டம்பர் 26: பிற்பகல் 02:33:34 மணி முதல் செப்டம்பர் 27 காலை 06:11:10 வரை வாங்கலாம்.

செப்டம்பர் 27:காலை 06:11: 41 மணி முதல் மாலை 03:46:07 மணி வரை நல்ல நேரம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: