Home /News /lifestyle /

நீங்கள் நம்பிக்கையானவர் அல்லது யதார்த்தமானவர்? இந்த படத்தை வைத்தே சொல்லி விடலாம்..

நீங்கள் நம்பிக்கையானவர் அல்லது யதார்த்தமானவர்? இந்த படத்தை வைத்தே சொல்லி விடலாம்..

காட்சி படம்

காட்சி படம்

Optical Illusion : நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை ஒரு படத்தை வைத்தே சொல்லி விடலாம்.

ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும், மாயத் தோற்றங்களை உள்ளடக்கிய படம் ஒன்றை முன்வைத்து மனிதர்களின் குணாதிசயங்களை எடை போட முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்றை பார்த்த உடனேயே நம் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ, அதைப் பொறுத்து நம்முடைய குணம் என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது.

யூடியூப் தளத்தில் Bright Side என்ற பெயரில் இயங்கி வரும் சானல் சார்பில் இதுபோன்ற இமேஜ் கிளிப் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் இரண்டு விலங்குகள் தென்படுகின்றன. இதை பார்வையாளர்கள் முதல் பார்வையில் என்ன என்பதை கணிக்க வேண்டும். அதற்கு ஏற்ப அவர்களது குணாதிசயம் இருக்கும் என்கிறார் பதிவாளர்.



also read : இந்த படத்தில் நீங்கள் காணும் முதல் விஷயம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை குறிக்கும்!

அதாவது, உங்கள் கண்களுக்கு முதலில் எலி தெரிகிறது என்றால், நீங்கள் நம்பிக்கையாளர் என்று அர்த்தம். இத்தகைய மனிதர்களின் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் தங்களுக்கு சாதகமான விஷயங்களை எதிர்பார்ப்பார்களாம். சில சமயங்களில், யதார்த்தங்களை உணராதவராக, வானத்தில் மிதந்தபடி இந்த நபர்கள் வலம் வருவார்கள் என சொல்லப்பட்டாலும், தன்னைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர் என்று தெரிவிக்கிறார் பதிவாளர்.



also read : இதில் மறைந்திருக்கும் குதிரை முகம் தெரிகிறதா? கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லாடி தான்..

ஆனால், படத்தை பார்த்த உடனே உங்கள் கண்களுக்கு பூனை தெரிகிறது என்றால், நீங்கள் யதார்த்தமான நபர் என்றே அர்த்தம் எனப் பதிவாளர் கூறியுள்ளார். வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை என்பதை உணர்ந்தவர்களாக இத்தகைய மனிதர்கள் இருப்பார்கள் என்றும், வானத்தை நோக்கி கனவு கண்டு கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். யதார்த்தவாதிகளுக்கு ஒட்டுமொத்த உலகும் ஒரே மாதிரியானது தான் என்றும், அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.



தனி மனித வாழ்க்கையில் பொருந்துகிறது :

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தங்கள் வாழ்க்கையோடு பொருந்துகிறது என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். சிலர், தங்கள் குணாதிசயத்தை கணிக்கும் இந்த படம் பல ஆச்சரியங்களை தருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

also read : நீங்கள் பார்க்கும் முதல் உருவம் உங்கள் காதல் வாழ்க்கையை குறிக்கும்..

நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்டில், “ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் நான் நம்பிக்கையாளர் என நான் நினைத்திருந்தேன். ஆனால், இந்தப் படத்தை பார்த்ததும் என் எண்ணம் தவறானது என்பது புரிகிறது’’ என்று கூறியுள்லார்.

உண்மையை புரிந்து கொள்ள இந்த படம் உதவிகரமாக இருந்தது என்றும், தான் ஒரு யதார்த்தவாதி என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் மற்றொரு பதிவாளர் கூறியுள்ளார்.

அதே சமயம், இந்தப் படத்தின் மூலமாக புதிதாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றும், வாழ்க்கையில் தங்களை பற்றி ஏற்கனவே அறிந்த ஒன்றை தான் பதிவாளரும் கூறியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி