பணியிடத்தில் ஹெட் செட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்யும் நபரா நீங்கள் ?

ஊழியர்கள் அவர்களின் இலக்கை விரைந்து முடிக்க இசை உதவுகிறது.

news18
Updated: June 19, 2019, 6:00 PM IST
பணியிடத்தில் ஹெட் செட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்யும் நபரா நீங்கள் ?
பணியிடத்தில் ஹெட் செட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்யும் நபரா நீங்கள் ?
news18
Updated: June 19, 2019, 6:00 PM IST
இன்றைய கார்பரேட் நிறுவனங்கள் கணினி அல்லது லேப்டாப்புடன் சேர்த்து ஹெட்செட்டையும் தருகின்றனர். அதை அவர்கள் பணி ரீதியாகப் பயன்படுத்துகிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். இந்த போக்கு நல்லதா கெட்டதா.. இது பணிச்சூழலுக்கு ஏற்றதா எனப் பல கட்ட விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அது மனதளவில் நல்லது என்கிறது ஆய்வுகள்.

சிலருக்கு இசை ஊக்குவிக்கும், சிலருக்குக் ஒருங்கினைந்த சிந்தனையை அதிகரிக்கும் , மகிழ்ச்சி, உற்சாகம் தரும். ஆனால் சிலருக்கு அது இடையூறாகவும், கவனச் சிதறலாகவும் இருக்கும். எதுவாயினும் அது பணியைப் பொறுத்தது. இதை ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்கின்றனர். பணியிடத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்தால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்கிறது. ஆனால் அது அவர்கள் செய்யும் வேலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இலக்குகளைப் பொறுத்தது என்கிறது ஆய்வுகள்.
நெதர்லாந்தில் உள்ள ராட்பௌட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள டெக்னாலஜி பல்கலைக்கழகம் பணியிடத்தில் இசை குறித்த ஆய்வை நடத்தியது. அதில் வெவ்வேறு வகையான இசையைக் கேட்கும்போதும் அவர்களின் மன நிலை மாறுகிறது என்று கூறியுள்ளது. இறுதியாக பணியிடத்தில் பாட்டுக் கேட்பதால் அவர்களின் ஒருங்கிணைந்த சிந்தனை சிதைகிறது. இதனால் எந்தவித பலனும் இல்லை. அவர்களின் பிரச்னைகள் தவிர்க்கச் சிறந்த யோசனை பாட்டுக் கேட்பது என்ற சிந்தனை தவறு என்றும் சுட்டிக்காட்டுகிறது.

இதேபோல் மியாமி பல்கலைக்கழகம் வெளியிட்ட மற்றொரு ஆய்வில் ஊழியர்கள் அவர்களின் இலக்கை விரைந்து முடிக்க இசை உதவுகிறது. சாதாரணமாக அவர்கள் அந்த வேலையை முடிப்பதை விட இசைக் கேட்டுக்கொண்டு உற்சாகமாகச் செய்யும்போது இன்னும் சிறந்ததாக அளிக்கின்றனர் என்று கூறியுள்ளது. அதுவும் அவர்கள் கேட்கும் பாடலைப் பொருத்து அமைகிறது என்கிறது.

ஊழியர்களின் விமர்சனங்களை மேலாளர்கள் பாசிடிவாக எடுத்துக்கொள்வார்களா?

Loading...

அதாவது ஒருவர் புதிதாக ஒரு பாடலைக் கேட்கிறார் அல்லது மற்ற மொழிப் பாடலை கேட்கிறார் எனில் பாடல் வரிகள் மற்றும் இசையைக் கவனிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் வேலையில் கவனம் சிதறும் என்கிறார்கள். மனதிற்கு இதமான, பிடித்த பாடல்களைக் கேட்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாகச் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் என்கிறது.அந்த ஆய்வின் இறுதியில் பாடல் கேட்பது மன நிலையை மாற்றுவதுடன் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் என்கிறது. இதை டைம்ஸ் பத்திரிகையும் உறுதி செய்கிறது. ஒருவேலைப் பாட்டுக் கேட்பதற்கான சூழல் இல்லை அல்லது பணி நேரத்தில் பாடல் கேட்டால் இடையூறாக இருக்கும் என நினைத்தால் இடைவேளையில் கேளுங்கள். பணியைத் தொடங்கும் முன் பிடித்த பாடலைக் கேட்டுவிட்டு பணியைத் தொடங்குங்கள் என யோசனையும் தருகிறது அந்த ஆய்வு.

சில ஆய்வுகள் இசை ஒவ்வொருவரின் மன நிலையைப் பொறுத்தது என்பதால் சரியான தீர்வுக்கு வர இயலாது என்றும் முழுமையான அமைதியே அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிடுகிறது.

இதையும் படிக்க :

ஊழியர்களின் விமர்சனங்களை மேலாளர்கள் பாசிடிவாக எடுத்துக்கொள்வார்களா?

கணினி, செல்ஃபோனில் வெளியாகும் புளூ லைட் கதிர்களைத் தடுக்க அறிமுகமானது சன் ஸ்கிரீன்

அக்குள் துர்நாற்றம் உங்களைச் சங்கடப்படுத்துகிறதா? சில எளிய தீர்வுகள்!


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...