மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த தற்காலிக குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்களா? என்ன காரணம்?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த தற்காலிக குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்களா? என்ன காரணம்?

மாதிரி படம்

ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்ளும் போதெல்லாம் சில உபாதைகளை சந்திக்கிறார்கள்.

  • Share this:
ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்ளும் போதெல்லாம் சில உபாதைகளை சந்திக்கிறார்கள். சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னமே சில சிக்கல்கள் தலை தூக்க தொடங்கும். பொதுவாக அடி வயிறு வலி, முதுகு வலி, தசைபிடிப்பு, கை, கால் சோர்வு, உடல் வலி போன்றவை இருக்கும்.

இதில் ஒன்றையேனும் பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சி காலத்தில் சந்திப்பதுண்டு. இவை தவிர மாதவிடாய் காலத்தில் இலேசான தலைவலி வருவதும் உண்டு. ஏற்கனவே மாதவிடாய் அவஸ்தையை அனுபவிக்கும் பெண்கள் கூடுதலாக இந்த தலைவலியை பெறுவது இன்னும் எரிச்சலையும் மன நிலை மாற்றத்தையும் கொடுக்கும்.

மாதவிடாய் கோளாறு (Premenstrual dysphoric disorder -PMDD):

மாதவிடாய் நாட்களில் அன்றாட பணியை கூட செய்ய முடியாத அளவுக்கு நாட்களை மோசமாக நகர்த்தும். மாதவிடாய் நாட்களில் சில நாட்கள் வரை உடல் வலி நீடிக்க கூடும். இது இலேசான தலைவலி, தலைச்சுற்றலை உண்டாக்கும். இதற்கான காரணம் இன்னமும் சரியாக கண்டறியப்படவில்லை. ஆனால் இந்த PMDDஐ தான் பலரும் காரணமாக கூறுவர். ஆனால் ஹார்மோன் மாற்றங்களுக்கு அசாதாரண எதிர்வினையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இந்த நோய் தாக்குதல் இருந்தால் தலைச்சுற்றல் பிரச்சனை வரக்கூடும்.ஹார்மோன்கள் - புரோஸ்டாக்லாண்டின்:

மாதவிடாய் காலத்தில் உடலில் சில ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்க கூடும். அதில் ஒன்று புரோஸ்டாக்லாண்டின். இது வலியை தூண்டும் ஹார்மோன் ஆகும். இது மாதவிடாய் சுழற்சி உட்பட பல உடல் செயல்முறைகளை சீராக்க செய்தாலும் இயல்பை விட அதிகமான சிக்கல்களை உண்டாக்க கூடும். சில நேரங்களில் இந்த ஹார்மோன்கள் உடல் முழுவதும் இருக்கும் ரத்த நாளங்களை கட்டுப்படுத்த கூடும். கர்பப்பை தசைகளை சுருக்க செய்யும். இது தலைவலியை உண்டாக்க கூடும்.

மாதவிடாய்க்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இங்கே காண்போம்:

* மார்பக கட்டிகள்
* மார்பகங்களில் வலி
* எரிச்சல்
* காரணமில்லாத கோபம்
* ஒரு வித சோகம்
* மன அழுத்தம் / பதற்றம்
* உணவுகளின் மீது தீவிர நாட்டம் போன்றவை ஏற்படும்.இப்போது துறை சார்ந்த நிபுணர்கள் கூறும் அறிவுரைகளை காண்போம்..

மேற்கூறிய மாறுதல்களை நீங்கள் அனுபவிக்க கூடும். சில பெண்களுக்கு மாதந்திர மாதவிடாயின் போது குமட்டல் மற்றும் வாந்தியும் கூட ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் பல நேரம் சந்தோஷங்களை அளிக்காது. இக்காலம் பெண்களுக்கு கடுமையானதாக இருக்கும். நீங்கள் வீட்டையும் வேலையையும் சேர்ந்து கவனிக்க வேண்டுமென்றால், உங்கள் நிலைமை இன்னும் கஷ்டம் தான்.

* ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதுமான விழிப்புணர்வு இருந்தால், மாதவிடாயின் போது ஏற்பாடு மாற்றங்களை சுலபமாக சமாளிக்கலாம். இக்காலத்தில், பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொண்டால், பல பிரச்சனைகள் தீரும்.

* வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகளின் தாக்கங்கள் குறையும். மாதவிடாயின் போது ஏற்படும் மாற்றங்களை சந்திக்க முன் கூட்டியே தயாராக இருங்கள்.

* வழக்கமான உடற்பயிற்சி, யோகா, தியானத்துடன், அதிகளவு தண்ணீர் குடிப்பது உங்களை சிக்கலிலிருந்து மீட்க உதவும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.* ஃபோலிக் ஆசிட், வைட்டமின் B6, கால்சியம், ஜின்க் மற்றும் மெக்னீசியம் மாத்திரைகளை சாப்பிடலாம்.

* சோடியம் அதிகமுள்ள இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

* உங்கள் தினசரி உணவில் பெருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டையை சேர்க்கவும், ஏனெனில் அவை வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்பைக் குறைக்கும்.

பீரியட்ஸால் ஏற்படும் சருமத் தடிப்புகளை எப்படி கையாளுவது? நடிகை டாப்ஸி கொடுத்த மெசேஜ்..

* தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தூளாக்கப்பட்ட ஆளிவிதைகளை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இது கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் அறிகுறிகளைக் குறைக்குமாம்.

மாதவிடாய் என்பது இயற்கை சார்ந்தது. இந்த மாதவிடாய் காலத்தின் போது உங்கள் வீட்டில் இருக்கும் பலரது மனநிலை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்காது. அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் அவர்களை மென்மேலும் சோதனைக்குள்ளாக்காதீர்கள்.

 
Published by:Sivaranjani E
First published: