மகள் சாரா ஆசைக்காக அர்ச்சனா செய்த சிக்கன் பிரியாணி!

அர்ச்சனா செய்த பிரியாணி

பிக் பாஸ் அர்ச்சனா செய்த சிக்கன் பிரியாணி தான் இன்றைய ஸ்பெஷல் ரெசிபி

 • Share this:
  அடுத்த 2 நாள் வீக் எண்ட் வருது, வீட்டில பிரியாணி செய்ய பிளான் பண்ணி இருப்பவங்க நம்ம பிக் பாஸ் அர்ச்சனா செஞ்ச சிக்கன் பிரியாணி ஸ்டைலில் ட்ரை பண்ணி பாருங்க.

  நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்த பின்பு ரொம்ப பிஸியானார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பறந்து கொண்டிருந்தவர் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தவர் மகள் மற்றும் தங்கையுடன் சேர்ந்து கொரோனா லாக்டவுனில் ’வாவ் லைஃப்’ என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். அதில் ஒருமுறை சாரா ஆசைக்காக தனது கையால் பிரியாணி செஞ்சி அசத்தினார்.

  அர்ச்சனா செய்த அந்த பிரியாணி ஸ்டைலில் நீங்களும் பிரியாணி செஞ்சி பாருங்க. வழக்கமான சிக்கன் பிரியாணி என்றாலும் தன்னுடைய ஸ்டைலில் சில ஸ்கீரெட் பொருட்களை சேர்த்து அர்ச்சனா செய்த சிக்கன் பிரியாணி தான் இன்றைய ஸ்பெஷல் ரெசிபி. வாங்க செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி, சிக்கன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள், நெய், எண்ணெய், தயிர், கரம் மசாலா பொருட்கள், உப்பு.எலுமிச்சை சாறு.

  செய்முறை:

  குக்கரில் சமமான அளவு நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய் சேர்க்க வேண்டும். ஏலக்காய் வெடித்த பின்பு பட்டை, கிராம்பு, லவங்கம், ஜாதி பத்திரி, கடற்பாசி, கசகசா சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன் நிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து அது நன்கு குழைந்து வர உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.  பின்பு ஒரு கையளவு கொத்தமல்லி, புதினா சேர்த்து அதன் பச்சை வாசனை போனதும் தயிர் சேர்த்து கிளர வேண்டும். இப்போது அதில் சிக்கன் சேர்த்து அதன் மேலே மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.ஓரளவு மசாலா சிக்கனுடன் சேர்ந்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இப்போது தான் அர்ச்சனாவின் சீக்ரெட் மசாலா பொடியை சேர்க்க வேண்டும். இந்த பிரியாணிக்கு மேலும் சுவையை தருவது இந்த மசாலா பொடி தான்.

  அதற்கு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகு, வர மிளகாய் இவை பொன்னிறமாக வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ள வேண்டும்.பிரியாணி செய்யும் போது அதில் 1 ஸ்பூன் இந்த மசாலா பொடியை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு வழக்கம் போல் தண்ணீர் சேர்த்து கொதித்தது அரிசி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கினால் சுவையான அர்ச்சனா வீட்டு ஸ்டைல் சிக்கன் பிரியாணி தயார். நீங்களும் டரை பண்ணி பாருங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: