ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பிளாக் டீ தெரியும்... அது என்ன ஒயிட் டீ? 8 வகை தேநீர்களை தெரிந்துகொள்ளுங்கள்

பிளாக் டீ தெரியும்... அது என்ன ஒயிட் டீ? 8 வகை தேநீர்களை தெரிந்துகொள்ளுங்கள்

tea

tea

டீ இல்லாவிட்டால் இந்தியாவில் முக்கால் பகுதி மக்களின் வாழ்க்கையே ஓடாது.. அப்படி இருக்க அதில் க்ரீன் டீ, பிளாக் டீ தான் நமக்கு தெரியும். தெரியாத 8 வகை டீயை இப்பொது தெரிந்துகொள்ளுங்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வெள்ளை தேநீர் மற்ற தேயிலைகளை விட தூய்மையான மற்றும் குறைந்த பதப்படுத்தலுக்கு உட்பட்ட தேயிலை ஆகும். இயற்கையான இனிப்பு மற்றும் சுவைக்காக பாராட்டப்படுகிறது.இந்த தேயிலையானது வருடத்துக்கு ஒருமுறை வசந்தகாலத்தில் சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் பறித்து ஈரப்பதம் எடுத்து பேக் செய்துவிடுவார்கள்.கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கும் என்று சொல்லப்படுகிறது

பச்சை தேயிலைகிரீன் டீ மிகவும் பிரபலமான தேநீர் வகை. சில தளர்வான பச்சை தேயிலைகள் பூக்கள் அல்லது பழங்களுடன் கலந்து அருமையான வாசனை, சுவை கொண்ட தேநீர்களை உருவாக்குகின்றன. க்ரீன் டீயை குடிக்கும் போது உங்கள் இரத்தத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அளவு அதிகமாகிறது. இது நம் உடல் இயக்கத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவுகிறது

ஊலாங் டீபொதுவாக சீன உணவகத்தில் வழங்கப்படும் சீன தேநீர் இவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது. பச்சை அல்லது கருப்பு தேயிலை வகைகளை விட ஓலாங் டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிமுடேஜெனிக் விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

பிளாக் டீஒரு கட்டன் சாயா அடித்தால்தான் நம் ஊரில் இருக்கும் பெரும்பாலானோருக்கு வண்டியே ஓடும். பால் கலக்காத வலுவான, அடர்த்தியான தேநீர் பழசக் டீ என்று அழைக்கப்படுகிறது. இதற்கென பிரத்யேக சுவை இருக்கும். மேலும் இது சிறந்த ஐஸ்கட் டீயை உருவாக்குகிறது.

மூலிகை உள்ளீட்டு டீ தூய மூலிகைகள், பூக்கள் மற்றும் பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருக்கலாம். செரிமானம், நச்சுத்தன்மை, எடை இழப்பு உட்பட குறிப்பிட்ட நன்மைகளை வழங்குவதோடு ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இது மனதை அமைதிப்படுத்தவும் புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

மேட் டீகாபியைப் போலவே சுவையாக இருப்பதால் காபி பிரியர்களின் விருப்பமான தேநீராக மேட் டீ கருதப்படுகிறது. மேட் அர்ஜென்டினா சேர்ந்த ஒரு காட்டுப் செடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேட் டீயின் ஆக்ஸிஜனேற்ற சக்தி பச்சை தேயிலையை விட சற்று அதிகமாக உள்ளது. இதனால் குடிப்பவரின் கவனத்தை ஒருநிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது.

ரூயிபோஸ் தேநீர் ரூயிபோஸ் தேநீர் என்பது தென்னாப்பிரிக்க சிவப்பு புதரில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் ஆகும். ரூயிபோஸ் தேநீர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆஞ்சியோடென்சின்-மாற்றும் என்சைமை (ACE) தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது 

ப்ளூமிங் டீபூக்கும் தேநீர் என்றும் அழைக்கப்படும் இந்த தேநீர் உண்மையில் செங்குத்தான பூத்து குலுங்கும் ஒரு காட்டு புதரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மற்ற தேயிலையை விட வாசம் கூடுதலாகவும் பூவின் தனி மணத்துடனும் இருக்கும் பூக்கும் தேயிலை பாலிபினால்கள் எனப்படும் சிறப்பு கலவை நிறைந்துள்ளது. இந்த கலவையை உட்கொள்வதால் சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்

Published by:Ilakkiya GP
First published:

Tags: Black Tea, Green tea