நாட்டைவிட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்கள் அதிகம்!- ஆய்வில் தகவல்

அமெரிக்கர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி புதிய நாடுகளில் குடியேற விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

நாட்டைவிட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்கள் அதிகம்!- ஆய்வில் தகவல்
அமெரிக்கர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி புதிய நாடுகளில் குடியேற விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
  • News18
  • Last Updated: December 22, 2018, 6:27 PM IST
  • Share this:
நம்மில் பலரும் அமெரிக்கா கிரீன் கார்டு கிடைத்தால் போதும் எனக் காத்துக்கிடக்கும் சூழலில் அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்காவைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழவே விரும்புகிறார்களாம்.

ஐக்கிய நாடுகளில் உள்ள கென்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்லவே விரும்புகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் நாட்டைவிட்டு வெளியேற நினைப்பவர்களில் 87.4 சதவிகிதத்தினர் புதிய இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வெளிநாடுகளில் வசிக்க விரும்புகிறார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அரசியல், ஆட்சி சூழ்நிலைகளின் காரணமாக அமெரிக்கர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியிருக்க விரும்புகிறார்களா என்றால் இல்லை என்றே கூறுகின்றனர் ஆய்வாளர்கள். ஒரு அட்வென்சராகவும் புதிய இடங்களை நோக்கிய புதுத் தேடலின் காரணமாகவுமே அமெரிக்கர்கள் புது இடங்களை நோக்கி நகர்கின்றனர் என்கிறது ஆய்வு.


மேலும் ஆய்வில், ’50.8 சதவிகிதத்தினர் பணி ஓய்வுக்குப் பின்னர் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேற நினைக்கின்றனர். பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் 48.3 சதவிகிதமாக உள்ளது. பிரச்னைகளால் புது மாற்றங்களைத் தேடி அமெரிக்காவைவிட்டு வெளியேறுவோர் 49 சதவிகிதமாக உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
First published: December 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading