அமேசான் சேலில் ரூ.9 லட்சம் கேமராவை ரூ.6,500-க்கு வாங்கிய வாடிக்கையாளர்கள்: தவறால் நடந்த அதிர்ஷ்டம்

அமேசான்

கடந்த 15 , 16 ஆம் தேதி அமேசான் ஷாப்பிங் சேலில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போருக்கு வரமாக வந்ததுதான் இந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் பெஸ்ட் ஆஃபர் சேல். பிடித்தவற்றை எல்லாம் ஷிப்பிங் கார்டில் போட்டுவிட்டு காத்துக் கிடந்தோருக்கு கடந்த 15 , 16-ம் தேதி அமேசான் ஷாப்பிங் சேல் கடவுள் போல் வந்தது. கூட்டம் அலைமோத அமேசானும் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களை மன மகிழச் செய்தது.

  குறிப்பாக புகைப்படக் கலைஞர்களுக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம். ஆம்.. பல புகைப்படக் கலைஞர்களுக்குக் கனவாக இருக்கும் அதிக ஃபீச்சர்களைக் கொண்ட ’கெனான் EF800 லென்ஸ்’ அதாவது ஒன்பது லட்சம் மதிப்புக் கொண்ட கேமராவை வெறும் 6,500 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல இந்த வரிசையில் சோனி, ஃபுஜிஃபிலிம் போன்ற பெரிய பிராண்டுகளின் விலையும் குறைவாக இருந்துள்ளன.  யாருக்குத்தான் இப்படியொரு ஆஃபரை விடத் தோன்றும். கேமராவை பயன்படுத்தத் தெரியாதவர் கூட வாங்கிவிடுவாரே... அப்படித்தான் குவிந்திருக்கிறது ஆர்டர்கள். வெளியிட்ட அடுத்த நொடியே ஆர்டர் குவிகிறது.. மக்களிடமிருந்து நன்றி மழை குவிந்திருக்கிறது... அப்படி என்ன சேல் போட்டிருக்கிறோம் என்று அமேசானே பார்த்துள்ளது.. பார்த்தவர்களுக்கு பகீர் அதிர்ச்சி. ஊழியரின் தவறால் 9 லட்சம் கேமரா 6,500 ரூபாய் என போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உடனே அந்த டீலைக் கேன்சல் செய்துள்ளது அமேசான்.

  இந்த சேல் ஆஃபரைக் கண்ட நொடியே ஆர்டர் செய்த சிலர் தவறு நடந்துள்ளது என்று தெரியாமல் ”அமேசானின் இந்த ஆஃபர் மிகவும் அருமையாக உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ஆர்டர் செய்து விட்டேன். இந்த கேமரா எனக்கு வருமா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேன்சல் செய்து விடுவீர்களா” என்று கமெண்டில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதேபோல் மற்றொருவரும் ”16,000 டாலர் மதிப்புக் கொண்ட பொருளை வெறும் 800 டாலருக்கு முன்பதிவு செய்துள்ளார். அதுவும் வருமா” என்றுக் கேள்வி கேட்டுள்ளார். கேமராவை புக் செய்த பலருக்கும் கேமரா கிடைத்துள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
  Published by:Sivaranjani E
  First published: