இந்தியாவில் சிறுத்தை இனம் அழியப் போகிறதா..? ஆய்வாளர்கள் வேதனை

இதைத் தொடர்ந்து இன்னும் 150 உயிரினங்கள் அழியும் விளிம்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

news18
Updated: September 12, 2019, 7:34 PM IST
இந்தியாவில் சிறுத்தை இனம் அழியப் போகிறதா..? ஆய்வாளர்கள் வேதனை
சிறுத்தை இனம்
news18
Updated: September 12, 2019, 7:34 PM IST
பருவநிலை மாற்றம் ஒரு பக்கம் பூமியை சீர்குலைத்து வருகிறது. அதற்கு மனிதர்களின் இரக்கமற்ற செயல்தான் முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாடு, காடுகளை அழித்தல் போன்ற காரணங்கள் முக்கிய காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன. இதன் விளைவு விலங்கினங்கள் தொடங்கி தாவர இனங்கள் வரை அழிந்து வருகின்றன.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் பேசிய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் மூன்று இனங்கள் இந்தியாவிலிருந்து அழியப் போவதாக குறிப்பிட்டுள்ளது. இதற்குக் இரசாயணக் கலப்படம் நிறைந்த விவசாயம் , நில அழிவே காரணம் என்றும் குறிபிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறுத்தை இனம், இளஞ்சிவப்பு தலை வாத்து, இந்திய கானமயில் ஆகியவை அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் 150 உயிரினங்கள் அழியும் விளிம்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக சுதந்திரத்திற்கு முன்பிலிருந்தே உள்ள கிட்டத்தட்ட 5.6 மில்லியன் தகவல்களை சேகரித்துள்ளனர். அதில் மற்ற நாடுகளின் தகவல்களையும் சேகரித்துள்ளனர். அதன் மூலம் கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களைக் காணும்போது பிரமிப்பாக இருப்பதாக கைலாஷ் சந்த்ரா கூறுகிறார். இவர் இந்தியாவின் உயிரியல் ஆராய்ச்சியகத்தின் இயக்குநராவார்.

இது ஒருபுறம் இருக்க விவசாய நிலங்கள், காடுகளை பூச்சுக் கொல்லிகள் பயன்படுத்தி நிலத்தை இரசாயணங்களால் நிரப்பி நிலத்தையே பாழ்படுத்துகின்றனர். இதன் மூலம் வளர்ச்சி என்பது அழிவிற்கான மூலாதாரமாக இருப்பதாக சந்த்ரா தெரிவிக்கிறார்.

Loading...இப்படி மரங்கள், நிலங்களைப் அழிப்பது ஒட்டுமொத்த உணவுச் சங்கிலித் தொடரையே அழிப்பதாகக் கூறுகிறார் சந்த்ரா. மனிதர்களுக்கு முன் தோன்றிய விலங்கினங்களுக்கே இந்த பூமி வாழத் தகுதியாக இல்லை எனில் மனித இனமும் அழியும் விளிம்பு நிலை மிக விரைவில் இல்லை என பல அராய்ச்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.

பார்க்க :

புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து மற்ற மாநிலங்கள் சொல்வது என்ன ?


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...