Home /News /lifestyle /

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மனிதர்களை பாதிக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன!

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மனிதர்களை பாதிக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன!

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

பன்றி காய்ச்சல் போல இந்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது

    நாட்டில் மற்றும் காட்டில் வாழும் பன்றிகளை பாதிக்கும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் (african swine fever) கடந்த பிப்ரவரி 2020-ல் இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டதில் இருந்து அசாம் மாநிலத்தில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளதாக அம்மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அமைச்சர் அதுல் போரா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

    அசாம் மாநிலத்தை தவிர மிசோரம், சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்த தொற்று காய்ச்சலால் பாதிக்கப்படும் பன்றிகள் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் உள்ளிட்ட பாதிப்புகளை முக்கிய அறிகுறிகளாக எதிர்கொள்கின்றன. African Swine Fever தொற்று அடுத்தடுத்து பல மாநிலங்களுக்கும் பரவி வருவதால் இந்த நோயின் தீவிரம் குறித்தும், மனிதர்களை பாதிக்குமா என்பது குறித்தும் கேள்விகள் பலரது மனதில் எழுந்துள்ளன.

    ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

    பன்றிகள்


    ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் என்பது மிகவும் தொற்ற கூடிய மற்றும் ஆபத்தான விலங்கு நோயாகும். இது பன்றிகளில் ரத்த கசிவு காய்ச்சலின் கடுமையான பதிப்பைத் தூண்டுகிறது. இந்த நோய் முதன்முதலில் 1920-களில் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. பின்னர் மெதுவாக உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த நோய்க்கு தடுப்பூசி இல்லை மற்றும் பாதிக்கப்பட்டால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100% ஆகும்.

    இது பன்றிகளில் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

    இந்த நோயால் பாதிக்கப்படும் பன்றிகள் அதிக காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தோலில் ரத்தக்கசிவு, சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுப்போக்கு மற்றும் பலவீனம் உள்ளிட்ட பாதிப்பு அறிகுறிகளை எதிர்கொள்கின்றன.

    ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் மனிதர்களை பாதிக்குமா?

    பன்றிகள்


    பன்றி காய்ச்சல் போல இந்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதர்களால் இந்த நோயை பெற முடியாது. ஆனால் மனிதர்கள் நோயின் கேரியர்களாக இருக்க முடியும் அதாவது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் கால்நடைகளுக்கு மனிதர்கள் மூலம் இந்நோய் பரவலாம். இந்த நோய் மனித ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்காது என்றாலும் வேறு வழிகளில் சிறிய அளவில் பாதிக்க கூடும். மனிதர்களை விட கால்நடைகளுக்கு இந்த நோய் மிகவும் ஆபத்தானதாக இருப்பதால், விலங்குகளை நம்பியுள்ள பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

    ALSO READ | அதிகரித்து வரும் மங்கி பாக்ஸ்... இதிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி..?

    நோய் வராமல் எப்படி தடுப்பது?

    இந்த நோய்க்கு எந்த முழு சிகிச்சையும் இல்லாத நிலையில், மிக கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும். நீங்கள் உங்கள் விலங்குகளை, குறிப்பாக பன்றிகளை வைத்திருக்கும் இடத்தில், சுகாதார நிலைமைகளை மிக சரியாக ஒருவர் பராமரிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் நோய் பரவியவுடன், விலங்குகளை அழிப்பதே பரவாமல் தடுக்க ஒரே வழி.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Swine Flu, Swine flu symptoms

    அடுத்த செய்தி