Home /News /lifestyle /

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகள்... இதை தெரிந்துகொண்டு விளையாடுங்கள்..!

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகள்... இதை தெரிந்துகொண்டு விளையாடுங்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆக்ரோஷமான சண்டை காட்சிகள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் தீய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்கின்றனர்.

உலகம் முழுவதுமே வீடியோ கேமிற்கு அடிமையான குழந்தைகள் பற்றிய கவலைத்தரக்கூடிய சம்பவங்கள் அடிக்கடி வெளியான வண்ணம் உள்ளன. ஆக்ரோஷமான சண்டை காட்சிகள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் தீய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்கின்றனர்.

ஆன்லைன் விளையாட்டு மீதான மோகத்தை குறைப்பதற்காக பெற்றோர்கள் திடீர் கண்டிப்பு காட்டும் போது, குழந்தைகள் தற்கொலை, கொலை அல்லது தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு சிறந்த உதாரணமாக பப்ஜி கேமை சொல்லலாம். ​​​​சமீபத்திய கூட லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், ஆன்லைன் கேம்களை விளையாடுவதைத் தடுத்ததால் தனது தாயை சுட்டுக் கொன்றதாகக் சம்பம் இந்தியாவையே உலுக்கியது. அதேபோல் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான ஐதராபாத்தைச் 16 வயது சிறுவன், தனது தந்தையின் மரணத்திற்காக கிடைத்த இழப்பீட்டுத் தொகையான 36 லட்சம் ரூபாயை ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக செலவிட்ட அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு (WHO) வீடியோ கேமுக்கு அடிமையாவதை அதிகாரப்பூர்வ மனநலக் கோளாறாக அறிவித்தது. அதேபோல் சமீபத்திய ஹவர்ட் மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வில், ஆன்லைன் விளையாட்டை அதிகமாக பயன்படுத்தும் நபர்களின் கைகளில் மன அழுத்தம் காரணமாக மீண்டும், மீண்டும் ஏற்படும் காயங்கள் ஏற்படுவதாகவும், இது அவர்களை பலவீனமானவர்களாக மாற்றி நிரந்தர காயத்திற்கு வழிவகுக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.ஆன்லைன் கேமிற்கு அடிமையான குழந்தைகள் அல்லது நபர்களுக்கு கீழ்காணும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆக்ரோஷமான மனநிலை:

அமெரிக்க உளவியல் அசோசியேஷன் நடத்திய ஆய்வின்படி, வன்முறை சம்பந்தமான விளையாட்டுகளை விளையாடுவது ஒரு நபரின் ஆக்ரோஷமான எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளை அதிகரிக்கிறது. தொலைக்காட்சிகளில் வன்முறையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை பார்ப்பதை விட, வீடியோ கேம்களில் வரும் வன்முறை காட்சிகள் மிகவும் தீங்குவிளைவிக்க கூடியவையாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் இவை விளையாடும் நபர்களை ஈர்க்க கூடியதாகவும், ஆக்கிரமித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் ஃபிட்னஸ் விஷயத்தில் தவறாக புரிந்து வைத்திருக்கும் 5 விஷயங்கள்..! 

கவனமின்மை:

ஒரு விஷயத்தை செய்து முடிக்க அதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆன்லைன் வீடியோ கேம்களை சிறப்பாக விளையாட வேண்டும் என்றாலும் கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். ஆனால் வீடியோ கேம் மீது தங்களது கவனத்தை குவிக்கும் நபர்களால், வேறு எந்த விஷயத்திலும் முழு கவனத்துடன் செயல்பட முடியாது என்றும், அவர்களுக்கு மோசமான கண்காணிப்பு மற்றும் கவனச்சிதறல் பிரச்சனைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இதய பிரச்சனைகள்:

வீடியோ கேம் விளையாடும் நபர்கள் தங்களது அதிக நேரத்தை செல்போன் அல்லது லேப்டாப் முன் அமர்ந்து கழிக்கின்றனர். தொடர்ந்து பல மணி நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்களை விளையாடுவது, வாழ்க்கை முறையில் நிறைய சிக்கல்களை உருவாக்கிறது. இதுபோன்ற தவறான லைஃப் ஸ்டைல் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் இருதய நோய் ஏற்பட காரணமாகிறது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின் பைபர்... குணமடைந்து வருவதாக வீடியோ வெளியீடு...

தற்கொலை எண்ணங்கள்:

உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் அல்லது ஊடகங்களில் அன்றாடம் வெளியாகும் செய்திகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது, வீடியோ கேமிற்கு அடிமையாக உள்ள நபர்களுக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் இவை தற்காலிகமானதாக தோன்றினாலும், ஆண்டுகள் செல்லச் செல்ல இந்த எண்ணம் அதிகரிக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.ஆன்லைன் கேம் அடிமைத்தனத்தில் இருந்து மீள்வது எப்படி?

ஆன்லைன் கேமிற்கு அடிமையான நபர்கள், அந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வர மன உறுதி அவசியம். ஏனென்றால் வீடியோ கேம்கள் மீதான அடிமைத்தனத்தை கடக்க நிறைய அர்ப்பணிப்பும், நேரமும் தேவைப்படும்.

மனதை முதலில் ஆன்லைன் கேமை விட்டு, அதற்கு அடுத்தபடியாக உங்களுக்கு பிடித்த விஷயங்கள் எதுவோ அதை செய்ய பழக்க வேண்டும்.

குடும்பத்துடன் கூடுதல் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். தனிமையில் இருப்பதை தவிர்த்துவிட்டு, நண்பர்கள், குடும்பத்தினருடன் இருக்க பழகுங்கள்.

மேலும் தற்கொலை எண்ணங்களை சாமானியர்களால் கையாள முடியாது என்பதால் மன நல மருத்துவர் அல்லது நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Addicted to Online Game

அடுத்த செய்தி