மருத்துவ உலகில் மைல் கல்லாக ரோபோக்களை வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுவது நவீன தொழில்நுட்பங்களின் அடுத்த வளர்ச்சி எனலாம். பல விதமான சிகிச்சைகளுக்கும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வந்துள்ளது. இதில் குறிப்பாக ரோபோட்டிக் டோட்டல் ஆத்ரோ பிளாஸ்டி என்ற மொத்த மூட்டு மாற்று சிகிச்சைக்கு ரோபோக்கள் பயன்பாட்டை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.
இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் என்பது அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் அதிக வேகமாக வளர்ந்துவரும் நிலையில், இதைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறைகளை எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் திருப்தியாக செய்ய வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். குறிப்பாக பல செய்ய முடியாத மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்கு சமீப காலங்களாக அதிகளவில் ரோபோட்டிக் முறையைப் பின்பற்றுகின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில் தான் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நோக்கில், ரோபோடிக் முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான ஒன்றாக உள்ளது Robotic Total Knee Arthroplasty (ROBITIC TKA) எனப்படும் ரோபோட்டிக் மொத்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை.
Also Read : ஒரே நெஞ்சு எரிச்சலா இருக்கா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க உடனே ரிசல்ட் தெரியும்..!
இச்சிகிச்சையின் மூலம் முழங்கால் உறுதிப்பாடு, சீரமைப்பு மற்றும் முழங்காலின் இயக்கம் ஆகியவற்றை உள்நோக்கில் மதிப்பிடுவதற்கு டைனமிக் குறிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்ப வசதி உள்ளது. மேலும் அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனக்குரிய வேலையைத் திறம்பட செய்து முடிக்கும் திறன் இந்த அறுவை சிகிச்சையில் ரோபோ கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும், ரோபோட்டிக் மூலம் செய்யப்படும் மொத்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினால் மென்மையான திசுக்கள் துண்டிப்பினால் ஏற்படும் பிரச்சனை மற்றும் தசைக்காயம் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்கிறது. அறுவை சிகிச்சை செய்த சில நாள்களிலேயே நேராக கால்களை உயர்த்துதல் போன்ற பிசியோதெரபி செயல்களை எவ்வித இடையூறும் இன்றி செய்யமுடிகிறது.
ரோபோட்டிக் மொத்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் நன்மைகள்:
ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தோடு மக்களுக்கு அறிமுகமாகிறது என்பதால் எவ்வித தயக்கமும் இன்றி, நோயாளிகள் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Joint pain, Knee Pain, Robo