நான் ஃபிட்டாக இருக்க இதுதான் காரணம்.. ரகசியத்தை பகிர்ந்து கொண்ட அக்‌ஷய் குமார்..!

நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுதான் நம் உடல் அமைப்பையும் தீர்மானிக்கும். எனவே இயற்கை வழி உணவுகளை விரும்புங்கள். கலப்படங்களை தவிருங்கள்.

Web Desk | news18
Updated: September 20, 2019, 11:53 PM IST
நான் ஃபிட்டாக இருக்க இதுதான் காரணம்.. ரகசியத்தை பகிர்ந்து கொண்ட அக்‌ஷய் குமார்..!
அக்‌ஷய் குமார் ஃபிட்னஸ்
Web Desk | news18
Updated: September 20, 2019, 11:53 PM IST
பலருக்கும் அக்‌ஷய் குமாரின் படங்கள்தான் இன்ஸ்பிரேஷன். படங்கள் மட்டுமல்ல பல இளைஞர்களுக்கு அக்‌ஷய் குமாரின் ஃபிட்டான உடலமைப்பு மீதும் ஒரு பொறாமை உண்டு. நீங்களும் அதில் ஒருவர் எனில் நிச்சயம் உங்களுக்குக் கடின உழைப்பு அவசியம். ஏன் என்று கேட்போருக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் ஜிம் வீடியோக்களே பதில் சொல்லும்.

சமீபத்தில்தான் அக்‌ஷய் குமாருக்கு பிறந்த நாள் முடிந்து 52 வயதை எட்டினார் என்றால் யாராலும் நம்ப முடியாது. இத்தனை ஃபிட்னஸிற்கு என்னக் காரணம் என அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது நிச்சயம் உங்களுக்கும் உதவலாம்.

அதில் அக்‌ஷய் குமார் "நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுதான் நம் உடல் அமைப்பையும் தீர்மானிக்கும். எனவே இயற்கை வழி உணவுகளை விரும்புங்கள். கலப்படங்களை தவிருங்கள். நச்சு நீக்கி உணவுகளே உங்கள் உடலைப் பாதுகாக்கும்" எனக் கூறும் அக்‌ஷய்-க்கு டயட் விஷயத்தில் முற்றிலும் விருப்பம் இல்லை. தேவைக்கு ஏற்ப உண்ணுங்கள். ஆனால் இயற்கையான உணவுகளை சாப்பிடுங்கள் என்பதே அவருடைய மந்திரமாக உள்ளது. ஊட்டச்சத்திற்கு கூடுதல் மருந்து , பவுடர் , மாத்திரைகளையும் தவிர்த்து காய்கறிகள் மூலம் ஆரோக்கியமாக இருங்கள் என்பதும் அக்‌ஷய்யின் ஃபிட்னஸ் ரகசியம். அதைத்தான் அவர் பின்பற்றவும் செய்கிறார்.

அதேபோல் உணவு சாப்பிடும் நேரமும் அவசியம் என்கிறார். இரவு ஷூட்டிங், பிஸியான வேலைகள் என எது இருந்தாலும் 7 மணிக்கு சரியாக இரவு உணவை சாப்பிட்டுவிடுவாராம். அதுவும் அவருடைய ஃபிட்னஸிற்கான காரணம் என முன்வைக்கிறார்.

உணவைத் தவிர ஜிம், உடற்பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சி, நீச்சல் பயிற்சி, வாலிபால் விளையாட்டு இவையும் அவருடைய ஃபிட்டான உடலுக்கு மூலக் காரணங்களாக இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்...அக்‌ஷை குமார் உடலமைப்பு வேண்டுமெனில் கடின உழைப்பும் அவசியம் தானே..?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...