டெங்கு முதல் மஞ்சள் காய்ச்சல் வரை.. உயிரைப் பறிக்கும் ஏடீஸ் கொசுக்களிடமிருந்து தற்காப்பது எப்படி?

கோரமுகம் கொண்ட இவை இரத்ததை மட்டுமல்ல மனித உயிரையும் உறிஞ்சக்கூடியது இந்த ஏடீஸ் கொசுக்கள்.

news18
Updated: August 20, 2019, 5:13 PM IST
டெங்கு முதல் மஞ்சள் காய்ச்சல் வரை.. உயிரைப் பறிக்கும் ஏடீஸ் கொசுக்களிடமிருந்து தற்காப்பது எப்படி?
கொசு
news18
Updated: August 20, 2019, 5:13 PM IST
கடித்தாலே வீங்கும் இந்த கருகரு கொசுக்கள் பகலிலும் மனிதரை விடாது துரத்தும்.  கோரமுகம் கொண்ட இவை இரத்ததை மட்டுமல்ல மனித உயிரையும் உறிஞ்சக்கூடியது இந்த ஏடீஸ் கொசுக்கள்.

இளைஞர்கள், பிறந்த குழந்தைகள், வயதானவர்கள் என பாரபட்சமின்றி பலரின் உயிரைப் பறிக்கும் டெங்குக் காய்ச்சல் இந்த ஏடீஸ் கொசுக்களால் பரவுகின்றன. டெங்கு மட்டுமல்ல சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் என கடுமையான காய்ச்சல்களுக்குக் காரணம் இந்த ஏடீஸ் கொசுக்கள்தான்.

இந்த ஏடீஸ் கொசுக்கள் தூய நீரில் உருவாகி வளரக் கூடியது. எனவேதான் சுகாதாரத்துறையும் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் நீரை மூடி வைக்கச் சொல்கின்றனர்.




அதேபோல் இவை ஊற்றுநீர், புதிய நீர் அதாவது மழைநீர் தேக்கத்திலும் உற்பத்தியாகும். மழைக்காலத்தில் நீர்த்தேக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குப்பைத் தொட்டிகளை சுத்தமாக மூடி வையுங்கள். இதனால் இந்த ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியைத் தவிர்க்க முடியும். தேவையற்ற நோய் தொற்றுகளையும் தவிர்க்கலாம்.

இவை தவிற நில வேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதை மழைக்காலங்களில் குடித்து வரும்முன் காப்பது சிறந்தது.

Loading...

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவோ, மிகக் குறைவாகவோ இருப்போருக்கு இந்தக் கொசுவின் விஷம் விரைவில் பாயக்கூடிய ஆற்றல் பெற்றது.

எனவே இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். அதோடு அனைத்துவகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சம அளவில் உட்கொள்ளுங்கள்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...