கணவன் மனைவி இணைந்து வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது எப்படி? கேஜிஎஃப் நடிகர் மனைவியுடன் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ

இருவரும் வீட்டு மொட்டை மாடியில் செய்த ஒர்க் அவுட்டுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

கணவன் மனைவி இணைந்து வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது எப்படி? கேஜிஎஃப் நடிகர் மனைவியுடன் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ
ஜான் கொக்கேன்
  • Share this:
கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு இருப்பதால் உடற்பயிற்சிக் கூடங்களும் இயங்காத நிலையில் பலரும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் உணவுப் பழக்கத்தோடு உடற்பயிற்சியும் அவசியம் என மருத்துவர்களும், ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. ஏனெனில் உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதோடு வீட்டிலேயே இருப்பதால் உடல் உழைப்பு குறைவாக இருக்கும். இதனால் உடல் எடையும் அதிகரிக்கும். எனவே வீட்டில் இருந்தாலும் சோர்வில்லாமல் சுருசுருப்பாக இயங்க உடற்பயிற்சி உதவும்.

மேலும் கணவன், மனைவி இருவரும் காதலை அதிகரிக்க இதுவொரு சரியான வாய்ப்பு. வீட்டு வேலைகளை மட்டும் பகிர்ந்துகொள்ளாமல் இப்படி உடற்பயிற்சியிலும் சமபங்கு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உங்கள் காதலுக்கும் இது ஆரோக்கியம்தான்.


அப்படி வீரம், கேஜிஎஃப், பாகுபலி போன்ற படங்களில் வில்லனாக நடித்த ஜான் கொக்கேன் தன் மனைவி ரம்யாவுடன் இணைந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த காதல் தம்பதிகள் இருவரும் வீட்டு மொட்டை மாடியில் செய்த ஒர்க் அவுட்டுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.ஜான் மற்றும் ரம்யா இருவருமே உடற்பயிற்சியிலும், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதிலும் தீவிரம் காட்டுபவர்கள். குறிப்பாக ஜான் ஒர்க் அவுட்டுகளில் கடினமாக உழைத்து அசர வைப்பவர். ஒருமுறை ஃபிட்னஸ் ஃபிரீக்கான ஆர்யாவே ஜானின் ஒர்க் அவுட் வீடியோவை பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் ஜோடியாக ஒர்க் அவுட் செய்து பாருங்கள். இது புதுவித முயற்சியாக மட்டுமல்லாது சிறந்த அனுபவமாகவும் இருக்கும்.

பார்க்க : 

 
First published: April 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading