வித்தியாசமாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு செய்த பெண் : வைரல் வீடியோ

இந்த வீடியோவை அவர் யூடியூபில் பதிவு செய்த அடுத்த நொடியே வைரலாகப் பரவி வருகிறது.

Web Desk | news18
Updated: October 30, 2019, 8:14 PM IST
வித்தியாசமாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு செய்த பெண் : வைரல் வீடியோ
இந்த வீடியோவை அவர் யூடியூபில் பதிவு செய்த அடுத்த நொடியே வைரலாகப் பரவி வருகிறது.
Web Desk | news18
Updated: October 30, 2019, 8:14 PM IST
30 வயதைக் கடந்த பெண்களை வெகுவாகத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நியூயார்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் வெளியிட்ட மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

அதாவது க்ரிஸ் ஸிலிங் என்ற பெண் வெளியிட்ட அந்த வீடியோவில் மேற்கத்திய நாடுகளில் உள்ள உடைக் கலாச்சாரத்தைப் போன்றே சாதாரணமான உடையை அணிந்து செல்கிறார். அது அத்தனை ஆபாசமாகவும் இல்லை. இருப்பினும் உள்ளாடையில் ஹிட்டன் கேமரா பொருத்தி மார்கெட், ஷாப்பிங் மால், ஹோட்டல் என அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். அப்போது அவரின் மார்பகங்களை காணும் நபர்களை அந்த ஹிட்டன் கேமரா பதிவு செய்கிறது.
அப்படி ஆண்கள் மட்டுமன்றி பெண்கள், நாய் என எத்தனை பேர் அவர் கடக்கும் நொடியில் அவரின் மார்பகங்களைக் காண்கிறார்கள் என்பதே அந்த வீடியோவின் நோக்கம். அதில் அவரின் மார்பகங்களைக் காணும் நபர்களை பிங் நிறத்தில் வட்டமிட்டுக் காட்டுகிறார்.

இறுதியாக அந்த வீடியோவில் பெண்களே உங்கள் மார்பகங்களையும் கவனியுங்கள் என்றும், இப்படி அனைவரும் பார்க்கும் உங்கள் மார்பகங்களை நீங்களே காணாமல் விடுவது சரியல்ல. இனியாவது விழித்துக்கொண்டு உங்கள் மார்பகங்களை கவனியுங்கள். மார்பகப் புற்றுநோயைத் தவிருங்கள் என்று நிறைவு செய்கிறார்.

Loading...

இந்த வீடியோவை அவர் யூடியூபில் பதிவு செய்த அடுத்த நொடியே வைரலாகப் பரவி வருகிறது.

பார்க்க :

RAINFALL FORECAST: தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை

First published: October 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...