Home /News /lifestyle /

ஜப்பானின் ஒகினாவா தீவு மக்கள் நீண்ட காலம் வாழும் ரகசியம்.. இதை பின்பற்றினாலே போதும்..

ஜப்பானின் ஒகினாவா தீவு மக்கள் நீண்ட காலம் வாழும் ரகசியம்.. இதை பின்பற்றினாலே போதும்..


100 வயதை கடந்த வாழும் ஜப்பான் மக்கள்

100 வயதை கடந்த வாழும் ஜப்பான் மக்கள்

Secrets for Long Living : பூமியில் வாழும் அனைவருக்கும் மிக நீண்ட ஆயுள் வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசையாக இருக்கும். நீண்ட காலம் வாழும் ஜப்பானின் ஒகினாவாவாசிகள் பின்பற்றிவரும் நடைமுறைகளை பின்பற்றினால் நாமும் நீண்ட காலம் வாழலாம்..

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • international, IndiaJapanJapan
    உலக நாடுகளிலேயே குறிப்பாக ஜப்பானில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு 1,450 பேரில் ஒரு ஜப்பானியர் இப்போது 100 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதாகத் தெரிய வருகிறது.

    பூமியில் வாழும் அனைவருக்கும் மிக நீண்ட ஆயுள் வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசையாக இருக்கும். 100 வயது மற்றும் அதற்கு மேல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை மனிதர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் ஜப்பான் நாட்டின் Kyushu பகுதியில் உள்ள ஒகினாவா (Okinawa) தீவு உலகின் ஐந்து நீல மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் 100 வயதுக்கு மேல் வாழும் அதிக மக்களை ஒகினாவா கொண்டுள்ளது.

    ஆய்வு ஒன்றின்படி மற்ற ஜப்பானிய மக்களை விட ஒகினாவா வாசிகள் 100 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பு 40% அதிகம் உள்ளது. நீண்ட ஆயுளுக்கான இவர்களின் ரகசியம் இகிகை (Ikigai) என்று அறியப்படுகிறது. ஜப்பானிய மொழியில் 'Iki' என்றால் 'வாழ்க்கை' மற்றும் 'gai' என்பது மதிப்பு. அதாவது வாழ்க்கையின் மதிப்பு. நூறு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஜப்பானியர்கள் இகிகை (Ikigai) கருத்தை மையமாகக் கொண்டு வாழ்கிறார்கள்.

    100 வயதைக் கடந்த ஜப்பான் மக்களின் நீண்ட ஆயுள் ரகசியங்கள்:

    ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம்:

    நம் உடல் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதில் நம்முடைய உணவு முறை நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. The Okinawan Way என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் பிராட்லி வில்காக்ஸின் கூற்றுப்படி, 100 வயதைக் கடந்து வாழும் ஒகினாவா வாசிகள் தங்கள் அன்றாட உணவில் நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

    ஹரா ஹச்சி பு (Hara Hachi Bu):

    ஒகினாவா வாசிகள் பின்பற்றும் ஒரு வகையான நடைமுறை தான் இது. ஹரா ஹச்சி பு என்ற ஜப்பானிய வார்த்தையின் அர்த்தம் "உங்கள் வயிறு 80% நிரம்பும் வரை சாப்பிடுங்கள்" என்பதாகும். இந்த ஆரோக்கிய போதனை ஒகினாவா நகரில் உருவானது. தங்கள் உணவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்த ஒரு வழியாக இந்த போதனையை அம்மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    பிசியாக இருப்பது:

    ஒகினாவா நகரில் வாழும் மக்கள் எவ்வளவு வயதானாலும் ஓய்வு எடுப்பதை விரும்ப மாட்டார்கள். தாங்கள் செய்ய விரும்புவது என்ன என்பதில் வெளிப்படையாக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் செய்ய விரும்பும் விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார்கள். எனவே எப்போதும் எந்த விஷயத்திலாவது ஈடுபாடு காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மனரீதியாக அவர்கள் பின்பற்றுகிறார்கள். மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் சுகாதாரச் செலவுகள் குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    Also Read : உலக தேனீக்கள் தினம் : இதெல்லாம் தேனியிடம் இருந்தா கிடைக்கிறது; ஆச்சரியப்பட வைக்கும் தேனீ பொருட்கள்

    சோஷியல் குரூப்:

    பெரிய குடும்பங்கள் மற்றும் வலுவான சப்போர்ட் குரூப்ஸ் உள்ளிட்டவை ஒகினாவா வாசிகளின் ஆயுளில் பல வருடங்களைச் சேர்க்கும் மற்ற காரணிகளாகும். ஜப்பானிய மக்கள் Moais அல்லது சமூக குழுக்களில் சேருகிறார்கள். இதன் மூலம் மனதிற்கு நெருக்கமான பல மக்களை அங்கு சந்திக்கிறார்கள், அவர்களுடன் தேநீர் அருந்துகிறார்கள், மேலும் அவர்களைச் சுற்றி நடக்கும் செய்திகள் மற்றும் பிற நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். வயதானாலும் கூட தனிமையிலிருந்து தப்பிக்க இந்த கான்செப்ட் அவர்களுக்கு  பெரிதும் உதவுகிறது.

    நேரத்தைப் பார்த்து ஓடுவதில்லை:

    ஒகினாவா வாசிகள் நேரத்தைப் பற்றி மெதுவான உணர்வைக் கொண்டுள்ளனர், அவசர அவசரமாக எதையும் குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது மன ரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. எனவே இவர்கள் நேரத்தில் ஈடுபாடு காட்டாவிட்டாலும் இறுதியில் விஷயங்களைச் சரியாகச் செய்கிறார்கள். இவர்கள் காலக்கெடுவிற்குப் பிறகு ஓடுவதை விட, வேலையில் மூழ்கிவிடுகிறார்கள். எதையும் எளிமையாக எடுத்துக் கொள்கிறார்கள்.

    ஆன்மிகம்:

    உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான உறவாக ஆன்மீகத்தைப் பார்க்கிறார்கள். மேலும் ஆன்மீகத்திற்கு ஒகினாவா மக்கள் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். தங்கள் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். எல்லாவற்றிலும் ஆன்மீக ஆற்றல் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். தலைமுறை தலைமுறையாக இந்த நம்பிக்கையைப் பேணுகிறார்கள்.
    Published by:Janvi
    First published:

    Tags: Healthy Lifestyle, Japan

    அடுத்த செய்தி