Home /News /lifestyle /

Motivational Story : விவசாய வேலை செய்த புத்திசாலிகள்... இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது சமூகம்!

Motivational Story : விவசாய வேலை செய்த புத்திசாலிகள்... இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது சமூகம்!

விதை போடுதல்

விதை போடுதல்

ஒருங்கிணைந்த உலகப் பார்வைதான் படைப்பாற்றலை வளர்க்கும், உரிய பயனையும் வெற்றியையும் கொடுக்கும். அனைத்து துறை வளர்ச்சிக்குமான முழுமையான செயல் திறனை ஊக்குவிப்பதாக அமையும். முறையாக வளரும் விதைபோல சமுதாயமும் வளரும்.

ஒரு கிராமத்தில் நான்குபேர் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர். ஒருவர் குழிகளைப் பறித்தார். மற்றொருவர் அந்தக் குழிகளில் விதைகளைப் போட்டார். மூன்றாம் நபர் அந்தக் குழிகளை மூடினார். நான்காம் நபர் தண்ணீர் ஊற்றிக் கொண்டு சென்றார். நாள் ஒன்றுக்கு ஐநூறு குழிகள் வீதம் அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்பது இலக்கு. இப்படியாக சில நாட்கள் வேலை நடந்து கொண்டிருந்தது.

ஒருநாள் குழிபறிப்பறிப்பவர் வேகமாகப் பறித்துக் கொண்டே சென்றார். மற்றொருவர் அந்தக் குழிகளை மூடிக் கொண்டே சென்றார். அடுத்தவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டே போனார். இதை அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவர் கவனித்தார். அருகில் சென்று பார்த்தார். கோபத்துடன் அவர்களிடம் வேலையை நிறுத்துமாறு கூறினார்.

பின்னர் அவர்களிடம் "என்னப்பா இப்படி வேலை செய்யறீங்க" என்றார். இதைக் கேட்ட முதலாம் நபர், "ஏன் என்ன ஆச்சு நான் நல்லாதானே வேலை செய்கிறேன்" என்றார் முதலாம் நபர். "அப்படி என்ன நல்லா செய்றீங்க என்று சொல்லுங்கள்" என கேள்வி எழுப்பினார் வந்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ஆமாம், என் வேலை குழிபறிப்பது. அந்தக் குழி எவ்வளவு ஆழம் இருக்க வேண்டும், எவ்வளவு அகலம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். இது குறித்து படித்து பட்டம் பெற்றவன் நான். அது இந்த ஊருக்கே தெரியும் என்று கூறினார் குழிபறித்துக் கொண்டிருந்தவர்.

அடுத்து இருந்தவர் கூறினார், "ஒரு குழிக்கு எவ்வளவு மண் போட்டு நிரப்ப வேண்டும் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். சந்தேகம் இருந்தால் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று.

அடுத்து இருந்தவரோ, "குழிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். எப்போதும் நான் நீரை வீணாக்கியதில்லை. குறைவாகவோ, அளவுக்கு அதிகமாகவோ நான் ஊற்ற மாட்டேன். இன்றைக்கு இன்னும் இருநூற்று முப்பத்து இரண்டு குழிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட டார்கெட்டை முடிக்க முடியும், அதற்குள் நீங்கள் வந்து, நேரத்தை வீணடிக்கிறீர்கள்" என்று கூறி கடிந்து கொண்டார்.

"அதெல்லாம் சரிதான். விதை போடுபவன் எங்கே?" என்று அந்த நபர் கேட்டார். "அவர் இன்று விடுப்பில் இருக்கிறார் என நினைக்கிறேன்" என எந்த சலனமும் இன்றி பதில் கூறினார் முதலாம் நபர்."

Read More : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது!

“விதை போடாமல் எதற்காக வேலை செய்றீங்க. அதனால் என்ன பயன், என்ன விளையும், எதுக்காக இப்படி பிழைப்பற்ற வேலை செய்றீங்க” என்று கேட்டார் அந்த நபர்.

“சார், இங்க பாருங்க, என் வேலைய நான் செய்கிறேன். விதை போடுபவர் வரவில்லை என்பது அவர் பிரச்னை, அவரை வரவழைக்காமல் விட்டது கான்ட்ராக்ட் காரரின் பிரச்னை, என் வேலை சரியில்லை என்றால் என்னிடம் கேளுங்க, அவர் வராததைப் பற்றி நான் ஏன் கவலைபட வேண்டும்” என்று நிதானமாக பதில் அளித்தார்.

Must Read : வாய்ப்புகள் கைநழுவுகிறதா கவனமான இருங்கள்... இவர் உங்களுடனும் இருக்கலாம்!

ஆம், நமது சமுதாயம் இப்படித்தான் போய்க் கொண்டு இருக்கிறது. மனிதர்களிடம் ஒருங்கிணைந்த உலகப் பார்வை இல்லை. இணக்கமான உறவுநிலை இல்லை. பல கோடி மக்கள் நாள்தோறும் செய்யும் கோடிக்கணக்கான வேலைகளால்தான் இந்தச் சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற புரிதல் இல்லை. வேலைகளுக்குள் இருக்க வேண்டிய உறவுநிலைகளின் முக்கியத்துவத்தையும் அறியாமல் ‘ஒண்டித்தனத்தில்’ ஊசலாடியவாறு ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருங்கிணைந்த உலகப் பார்வைதான் படைப்பாற்றலை வளர்க்கும், உரிய பயனையும் வெற்றியையும் கொடுக்கும். அனைத்து துறை வளர்ச்சிக்குமான முழுமையான செயல் திறனை ஊக்குவிப்பதாக அமையும். முறையாக வளரும் விதைபோல சமுதாயமும் வளரும்.
Published by:Suresh V
First published:

Tags: Farmers, Motivational Story, Special story

அடுத்த செய்தி