உறவுகளின் உன்னதம்...! ஆரோக்கியமான உறவுமுறை எப்படி இருக்கும்...?

உறவுகளின் உன்னதம்...! ஆரோக்கியமான உறவுமுறை எப்படி இருக்கும்...?
A Healthy & Unhealthy Relationship- What is The Difference?
  • RedWomb
  • Last Updated: February 13, 2020, 4:44 PM IST
  • Share this:
வாழ்க்கையில் எவ்வித முடிவையும் எடுக்காமல் பலரும் திருமணத்தில் குதிக்கின்றனர். ஆனால் உறவு முறைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இன்னும் கடினம். நம்மில் பெரும்பாலானோர் புத்தகங்கள், திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து காதல் மற்றும் உறவு முறைகள் பற்றிய அறிவைப் பெறுகிறோம்.

பெரும்பாலும், இவை தவறாக வழிநடத்தும். எனவே ஆரோக்கியமான உறவுமுறை எப்படி இருக்கும் என்பது குறித்து சில உளவியலாளர்களுடன் பேசிய பிறகு, உறவுமுறையை ஆரோக்கியமாக்குவதற்கான சில குறிப்புகளை எழுத்தாளர் பூஜா பிரியம் வதா (Pooja Priyamvada) எழுதியுள்ளார்.

முதலில் நலமான உறவுமுறைக்கு கம்யூனிகேசன் மிக முக்கியம். நீங்கள் என்ன உணர்கின்றீர்கள் என்பதைப் பற்றி உங்கள் துணையுடன் பேசுவது உறவுமுறைக்கு மிக முக்கியமான ஒன்று. நீங்கள் உங்கள் துணையுடன் எவ்வாறு பேசுகின்றீர்கள் என்பது கம்யூனிகேசனில் முக்கியமான ஒன்று.


உதாரணமாக, உங்கள் வாழ்க்கை துணை எடுக்கும் திட்டங்களை வேண்டாம் என நிராகரித்தால் அந்த நேரத்தில், ஆக்ரோஷமான அல்லது அவற்றை குற்றம் சாட்டும் விதமாக செயல்படுவது சரி ஆகாது. நீங்கள் எப்போதும் முடிவை மாற்றுகிறீர்கள் ? நீங்கள் ஏன் இவ்விதம் மீண்டும் முடிவை மாற்றுகிறீர்கள் ? என்னால் இவற்றை நம்ம முடியவில்லை என விவாதம் செய்தால் அது ஆரோக்கியமற்ற உறவாகும்.

கம்யூனிகேசன் சிறப்பாக செயல் பட, உங்கள் துணை உங்கள் மீது கோபம் கொண்டாலும் அவரின் நடத்தையை கவனித்து பொறுமையாக அவரின் செயல்பாட்டை அவருக்கு விளக்க வேண்டும்.

உங்கள் துணை கோபத்தில் உங்களிடத்தில் எவ்விதம் நடந்து கொண்டார் என அவருக்கு விளக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு மாறாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது சரியானது அல்ல. உங்கள் துணையுடன் கம்யூனிகேசன் செய்யும் பொழுது உதாரணமாக, ‘இன்றிரவு உங்களைச் சந்திக்க முடியவில்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பிஸியாக இருப்பதை நான் அறிவேன், ஆனால் உங்களுடன் நேரத்தை செலவிட நான் விரும்பியிருப்பேன். என்றபடி பொறுமையாக பேச முற்பட வேண்டும்.கம்யூனிகேஷன் என்பது எதிர்மறையான விஷயம் அல்ல. உங்கள் துணையிடம் உங்களுக்கு பிடித்தமான செயல்களை அடிக்கடி கூறி அவரை வாழ்த்த வேண்டும். உறவுமுறைகளுக்கு இடையில் நீங்கள் உரையாடும் சிறிய விஷயம் கூட மிக நீண்ட நாட்களுக்கு உங்களுடன் பயணிக்கும்.

உங்கள் துணையின் சிறு சிறு திறமையையும் பாராட்டுங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதும் , ஒருவருக்கொருவர் மற்றொருவரின் மகிழ்வாக உணரும் படியும் செய்ய வேண்டும். உறவுமுறைகளில் பொதுவாக வரும் பிரச்னையே புறக்கணிக்க படுவதும் ஒருவருக்கொருவர் பாராட்டாமல் இருப்பதும் தான். அடிக்கடி ஒருவருக்கொருவர் பாராட்டி கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக நம்பிக்கை:

உங்கள் துணை உங்களிடம் தொடர்ந்து பொய் சொல்வதை உணருகின்றீர்களா ? அது குறித்து நீங்கள் கவலை அடைகின்றீர்களா?

ஒருவருக்கொருவர் தொலைபேசிகளையும் சமூக ஊடகங்களையும் சரிபார்த்து, மற்றவர் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் இருக்கும்போது நீங்கள் உங்களுக்குள்ளாக பொறாமைப்படுகின்றீர்களா?

இவை பொதுவாக ஆரோக்கியமற்ற உறவின் அறிகுறிகளாகும். இவை அனைத்தும் நம்பிக்கை உடைவதற்கான அறிகுறிகள். நீங்கள் உண்மையிலேயே உங்கள் துணையை நம்பினால் உங்கள் துணை யாருக்கு மெசேஜ் அனுப்புகிறார் என்பது குறித்த சந்தேகம் உங்களுக்கு வந்திருக்காது.

இதில் இருந்து விடுபட முதலில் உங்கள் பயம் மற்றும் பாதுகாப்பின்மை பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள், அவற்றைக் கடப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் முயற்சி செய்யுங்கள். பெரும்பாலும் யாரும் தங்களது தேவை இல்லாத எண்ணங்கள் குறித்து உண்மையை கூறமாட்டார்கள்.

ஏனினில் தன் மீது இருக்கும் தவறை பெரும்பாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் வெளிப்படையாகப் பேசினால் இதனை தவிர்க்கலாம். வலுவான உறவுக்கு நேர்மை அவசியம்.

நேரம் ஒதுக்குங்கள்:

உண்மையில் நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கின்றீர்கள் எனில் உங்கள் நேரத்தை ஒருவருக்கொருவர் செலவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. உங்களின் துணை இல்லாமல் எந்தவொரு செயலையும் செய்வதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாவிட்டால், அல்லது உங்களுடன் உங்கள் துணை 24/7 நேரம் உங்களுடன் செலவிட்டால் இது ஆரோக்கியமற்ற உறவின் அடையாளமாக இருக்கலாம். நீங்கள் ஒரு தனித்துவமான நபர். நீங்கள் மற்ற நபரைச் சார்ந்து இருக்கக்கூடாது, நீங்கள் யார் என்பதை மறந்துவிடுவீர்கள்.

இரண்டாவதாக, நீங்கள் ஒரு உறவு முறையில் கமிட் ஆனவுடன் உங்கள் நண்பர்களை விட்டுவிடாதீர்கள். நம்மில் பலர் ஒரு உறவு முறையில் இறங்கிய பிறகு நண்பர்களை விட்டு விடுகின்றனர்.

ஆனால் அனைவருக்கும் தன்னை சுற்றி இருக்க ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தேவை. உங்கள் காதலன் அல்லது காதலி முக்கியம் என்றாலும், அவர்கள் உங்கள் முழு வாழ்க்கையாக மாறக்கூடாது. உங்களுக்கென குடும்பம், நண்பர்கள் உங்கள் துணைக்கு வெளியே ஒரு வாழ்க்கை தேவை.

உங்கள் துணையுடன் நீங்கள் செய்யவிருக்கும் செயல்களை திட்டமிடுங்கள். சில தம்பதிகள் ஒன்றாக சமைக்க விரும்புகிறார்கள், நடந்து செல்லலாம் அல்லது தங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க விரும்புகிறார்கள். இது தம்பதியினரிடையே இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ளும். இருவரும் சேர்ந்து புதிதாக வாழ்க்கையில் ஏதேனும் முயற்சித்தால், அது உங்கள் வாழ்வில் சலிப்பை ஏற்படுத்தாது.

இவை அனைத்தும் மிக பெரிய குறிப்புகள். நன்றாக நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு உறவில் இருக்க விருப்பமில்லை எனில் அது உங்களுக்கு மகிழ்ச்சியை தராது. நீங்கள் நன்றாக உணரமுடியாத உறவில் நீங்கள் இருக்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! உங்களது உணர்வு சிறந்தது என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான உறவுக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

Also see...ஆரோக்கியமான உறவு & ஆரோக்கியமற்ற உறவு - என்ன வேறுபாடு ?
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்