முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் குழந்தைக்கு வீட்டிலேயே இருப்பதால் போர் அடிக்குதா ? பிசியாக வைத்துக்கொள்ள டிப்ஸ் இதோ..

உங்கள் குழந்தைக்கு வீட்டிலேயே இருப்பதால் போர் அடிக்குதா ? பிசியாக வைத்துக்கொள்ள டிப்ஸ் இதோ..

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு செல்லாமல் உங்கள் குழந்தை வீட்டிலேயே இருப்பதால் தனிமையை உணர்கிறதா ?

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு செல்லாமல் உங்கள் குழந்தை வீட்டிலேயே இருப்பதால் தனிமையை உணர்கிறதா ?

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு செல்லாமல் உங்கள் குழந்தை வீட்டிலேயே இருப்பதால் தனிமையை உணர்கிறதா ?

  • 1-MIN READ
  • Last Updated :

    இப்போது, நாம் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வீட்டில் சிக்கித் தவிக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் துணிச்சல் மிக்க குழந்தைகளுக்கு வீட்டில் அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை, அவர்களை பிஸியாக வைத்திருக்க கேட்ஜெட்களை அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த கேட்ஜெட் போரில் பெற்றோர்களாகிய நீங்கள் வெற்றிபெற ஒரே வழி, உங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுள்ள பிற செயல்களில் அவர்களை ஈடுபட வைக்கவேண்டும். பள்ளிகள் மூடப்பட்டிருந்தால், உங்கள் குழந்தைகளை கவனித்துக்கொண்டே வீட்டு வேலைகளை செய்ய நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

    குழந்தைகளை வீட்டிலேயே கற்க, திறன்களை வளர்க்க அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், கீழே உள்ள உள்ளடக்கத்தை படியுங்கள்.

    திறமைகளை வளர்க்க கற்றுக்கொடுங்கள்: உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற கலை மற்றும் கைவினைப் பொருட்களை கடைகளிலிருந்து வாங்கி, அது தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தையை ஈடுபடுத்துங்கள். பின்னர் அவர்களை புகழ்ந்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும். குழந்தையிடம் உடனடியாக சிறந்த அவுட்புட்டை எதிர்பார்க்க வேண்டாம், மாறாக அவர்களின் முயற்சியை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.

    ஓவியம், கிலே மாடலிங், காகிதப்பணி மற்றும் கூடை நெசவு, தையல், பின்னல், மற்றும் தச்சு வேலை போன்றவற்றை செய்யலாம். கலை மற்றும் கைவினை உங்கள் குழந்தையின் படைப்பாற்றலை வளர்த்து, கவனம் செலுத்த உதவுகிறது. இது அவர்களின் கை-கண் ஒருங்கிணைப்பு, வண்ண உணர்வு மற்றும் அவர்களின் மூளை திறன்களை மேம்படுத்துகிறது.

    சமைக்க கற்றுக்கொடுக்கலாம்: பெரும்பாலான குழந்தைகள் சமையலறையில் விளையாடுவதை விரும்புகிறார்கள். நீங்கள் நாள் முழுவதும் வீட்டில் இருக்கும்போது, நிச்சயமாக உணவைத் தயாரிப்பீர்கள். நீங்கள் சமைக்கும் போது உங்கள் குழந்தையை சமையலறைக்கு அழைக்கவும், உங்கள் அடுத்த உணவு அல்லது சிற்றுண்டியை அவர்களுடன் செய்யவும். அவர்களுக்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுதல், கிட்சனை சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்ய கற்றுக்கொடுக்கலாம்.

    Also read : கொரோனாவுக்கு இடையே மீண்டும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை காக்க பெற்றோர் செய்ய வேண்டியவை!

    கண்டுபிடிப்புகளை உருவாக்குங்கள் : புதிய யோசனைகள் மற்றும் பொருட்களை ஆராய்ந்து பரிசோதிக்க உங்கள் குழந்தைக்கு வாய்ப்பளியுங்கள். புதிய செய்முறையை முயற்சிப்பது போன்ற எளிய சோதனைகளை அவர்கள் செய்யலாம். நீங்கள் அவர்களுக்கு மறுசுழற்சி செய்யக்கூடிய சில பொருட்களைக் கொடுக்கலாம் மேலும் அவை என்ன கண்டுபிடிப்புகளைக் கொண்டுள்ளன என்பதையும் காணலாம். இதில் ஏற்படும் வெற்றி மற்றும் தோல்விகள் உங்கள் பிள்ளைக்கு தவறுகளைச் செய்வது சரியா என்பதைப் புரிந்துகொள்ள உதவும். இதுபோன்ற செயல்களைச் செய்யும்போது அவர்கள் புதிதாக என்ன கண்டுபிடிப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு நாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    உங்கள் குழந்தைகளுடன் ஒரு வேடிக்கையான மற்றும் ஈடுபாடான செயல்களைத் திட்டமிட உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். நல்லதை கற்றுக்கொடுத்து அவர்களை திறன் மிக்கவர்களாக மாற்றுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: