உங்கள் வீட்டில் நாய் வளர்க்கபோறீங்களா..? உங்க பெற்றோர் ஒத்துப்பாங்களான்னு தெரிஞ்சுக்கோங்க

நாய்

ஏனெனில் செல்லப்பிராணியை வளர்ப்பது எப்போதும் வேடிக்கையானதாக இருக்காது.

  • Share this:
நம்மில் பெரும்பாலானோருக்கு நாய்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும், நம் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குறிப்பாக நாய்கள் வளர்க்க பெற்றோர்களிடம் ஒப்புதல் வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில் செல்லப்பிராணியை வளர்ப்பது எப்போதும் வேடிக்கையானதாக இருக்காது. நாய்களுக்கு நிறைய கவனிப்பு தேவைப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு நாய் வளர்க்க முடிவு செய்திருந்தால், உங்கள் பெற்றோரை சமாதானப்படுத்த சில வழிகள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.,

முதலில் நாயைத் தேர்ந்தெடுங்கள்:

நாய் இனங்கள் நிறைய உள்ளன, அவற்றை கவனமாகக் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் நாய் இனங்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். வெவ்வேறு இனங்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு உங்கள் வீட்டில் வளர்க்க பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுங்கள். உங்கள் இருப்பிடம், காலநிலை, உணவு கிடைக்கும் தன்மை போன்ற காரணிகளை கொண்டு தேர்வு செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திட்டத்தை வகுத்துத் கொள்ளுங்கள்:

எந்த நாய் இனத்தை வளர்க்க வேண்டும் என முடிவு செய்த பின்னர், நாய்க்கு தினசரி பழக்க வழக்கத்தை திட்டமிட்டு அதை உங்கள் பெற்றோருக்குக் காட்டுங்கள். அதில் நடை, உணவு, தூக்கம் மற்றும் உடற்பயிற்சிக்கான நேரத்தையும் சேர்க்கவும்.

நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள்?

நீங்கள் வளர்க்கும் நாயை நீங்களே கவனிப்பீர்கள் என கூறினாலும் உங்களுக்கு உடம்பு சரி இல்லை என்றால் அதனுடன் நீங்கள் விளையாட முடியுமா? அதற்கு தினமும் உணவு கொடுப்பீர்களா? ஆரம்பத்தில், நாம் அனைவரும் செல்லப்பிராணிகளுக்காக தீவிரமாக பணியாற்றுவோம், ஆனால் ஒரு கட்டத்தில் அது பெற்றோரின் பொறுப்பாக மாறும். எனவே நீங்கள் ஆர்வத்துடன் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளதை உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள்.

Also read... 30 வயதை கடந்த பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான்..!

நீங்கள் பொறுப்பு என்பதை நிரூபிக்க முயலுங்கள்:

உங்கள் எல்லா பணிகளையும் நீங்களே முடிந்தவரை செய்வதன் மூலம் உங்கள் அம்மாவை தொந்தரவு செய்யாமல் இருங்கள். உங்கள் பெற்றோருக்கு உதவிகள் செய்வது, சமைப்பதில் உதவுதல் போன்றவற்றை செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை நாய் வளர்க்க அனுமதிக்க வாய்ப்புகள் உள்ளது.

உங்களால் நாய்க்குத் தேவையான செலவைப் பார்த்துக் கொள்ள முடியுமா?

ஒரு நாய் குட்டியை வளர்க்க விடும் எனில் அதில் நிறைய செலவாகும். அதற்கான உணவு மற்றும் மருந்துகள் கூட விலை அதிகம். எனவே செலவுகளுக்கு நீங்கள் உதவக்கூடிய வழியைத் திட்டமிடுங்கள், உங்களால் முழு செலவையும் ஏற்க முடியாவிடில் ஒரு சிறிய பகுதியை மட்டுமாவது நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் சேமிப்பு அல்லது பாக்கெட் மணியிலிருந்து கூட நீங்கள் செலவிடலாம்.

ஒரு நாயை வளர்ப்பதில் உள்ள நன்மைகளைப் பட்டியலிடுங்கள்:

ஒரு நாயை வளர்ப்பதில் பல நன்மைகள் உள்ளன. இது உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தையை கொண்டிருப்பது போலாகும். அவை உங்கள் வீட்டிற்கு பாதுகாப்பை கொடுக்கிறது. மேலும் பொறுப்பு, தியாகம், இரக்கம் போன்ற பலவற்றை அவை உங்களுக்குக் கற்பிக்கின்றன.

பெற்றோர்களின் முடிவை கேட்க மறக்காதீர்கள்:

ஒரு நாயைப் பெற உங்கள் பெற்றோரிடம் நீங்கள் சண்டை போடக்கூடாது. அவர்களின் முடிவையும் கேட்டு நடக்க வேண்டும். உங்கள் அம்மாவுக்கு ஒவ்வாமை இருக்கலாம், ஒரு நாய் உங்கள் வீட்டில் தங்கினால் அது மோசமாகிவிடும். எனவே அவர்களின் கருத்துக்களை கேட்டு புரிந்து கொள்ளுங்கள். அமைதியாக அவர்களுக்கு பதிலளிக்கவும். அவசரப்பட வேண்டாம். பொறுமையாக கூறினாலே அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: