Home /News /lifestyle /

இந்தியாவில் உள்ள மிக பிரபலமான அமானுஷ்யங்கள் நிறைந்த 7 இடங்கள்!

இந்தியாவில் உள்ள மிக பிரபலமான அமானுஷ்யங்கள் நிறைந்த 7 இடங்கள்!

அமானுஷ்யங்கள் நிறைந்த 7 இடங்கள்

அமானுஷ்யங்கள் நிறைந்த 7 இடங்கள்

இந்தியாவில் உள்ள 7 முக்கியமான அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பொதுவாக அமானுஷ்யங்கள் நிறைந்த கதைகளை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ நமக்கு சிறிது பயம் உண்டாகும். இருப்பினும் அவற்றில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக பார்க்க முயற்சிப்போம். அதே போன்று தான் சில இடங்களில் அமானுஷ்யங்கள் நிறைந்துள்ளது என்று பலர் கூறினாலும் அந்த இடத்திற்குள் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காக அங்கு சென்று சிலர் பார்ப்பதுண்டு. அப்படி இந்தியாவில் உள்ள 7 முக்கியமான அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பங்கர் கோட்டைகள் :ராஜஸ்தானில் உள்ள பங்கர் என்கிற சிறிய கிராமத்தில் உள்ள கோட்டைகள் பல ஆண்டு காலமாக அமானுஷ்யங்கள் நிறைந்த இடமாக பார்க்கப்டுகிறது. இது ராஜஸ்தானில் அல்வர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோட்டையை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் செல்வதுண்டு. அப்போது ஒரு வித அமானுஷ்ய உணர்வு அவர்களுக்கு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட அமானுஷ்யங்கள் நிறைந்த உணர்வுகளால் தான் இந்த இடத்தை பலர் பார்க்க செல்கின்றனர்.

பெகுன்கோடர் ரயில் நிலையம் :மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் இந்த பெகுன்கோடர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த ரயில் நிலையமானது அமானுஷ்யங்கள் கொண்ட இடமாக பார்க்கப்படுகிறது. பலர் இந்த இரயில் தண்டவாளத்தில் வெள்ளை புடவை கட்டிக்கொண்டு பெண் உருவம் போன்று அடிக்கடி தென்படுவதாக கூறுகின்றனர். ஆனால், இந்த வதந்திகளை அரசு ஆதாரமற்றது என நிராகரித்தது. 42 ஆண்டுகளுக்கு பிறகு, 2009 ஆம் ஆண்டில் மீண்டும் இந்த ரயில் நிலையத்தில் சேவையைத் தொடங்கியது.

ALSO READ |  15 பியூன், ஸ்வீப்பர் பணிகளுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்

லம்பி தேஹார் சுரங்கங்கள் :உத்தரகண்ட் மாநிலத்தில் முசோரி என்கிற இடத்தில் இந்த லம்பி தேஹார் சுரங்கங்கள் உள்ளன. இங்கு சுண்ணாம்பு அதிகம் கிடைத்து வந்தது. ஆனால், இந்த பகுதியில் பல்வேறு விபத்துகள் நடந்ததால் தற்போது இது செயல்படாமல் உள்ளது. இங்கு சுமார் 50,000 ஆட்கள் வேலை செய்துள்ளதாகவும், அவற்றில் பலர் நுரையீரல் பாதிப்பு நோய்களால் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

டவ் ஹில் :மேற்கு வங்கத்தில் உள்ள குர்சியோங் பகுதியில் விட்டோரியா ஆண்கள் உயர்நிலை பள்ளியும், டவ்ஹில் பெண்கள் பள்ளியும் உள்ளது. இந்த பகுதியில் பல அமானுஷ்யங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் நிறைய பிணங்களின் உடல்களை கண்டெடுத்தால் இப்படி மக்கள் கருதி வருகின்றனர்.

ALSO READ |  உங்களுக்கு தெரியுமா..? இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்..!

டிசோசா சால் :மும்மையில் மாஹிம் என்கிற பகுதியில் டிசோசா சால் உள்ளது. அங்குள்ள ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பும் போது பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். அந்த பெண்மணி ஒவ்வொரு இரவும் அங்கு சுற்றியுள்ள பகுதியில் அலைந்து வேட்டையாடுவதாக பலர் கூறுகிறார்கள். மேலும் பலர் வெள்ளை நிற தோற்றத்தைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

டுமாஸ் கடற்கரை :டுமாஸ் கடற்கரையானது குஜராத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியானது தகனம் செய்யும் இடமாக பயன்படுத்தப்பட்டது. உள்ளூர்வாசிகள் அடிக்கடி அப்பகுதியில் விசித்திரமான குரல்களைக் கேட்பதாக புகார் கூறுகின்றனர். குறிப்பாக டுமாஸ் கடற்கரையில் உள்ள கருப்பு மணல் பற்றி பல மர்மங்கள் நிறைந்த கதைகளையும் சொல்கின்றனர்.

ALSO READ | தலைநகர் டெல்லியை பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

ஜடிங்கா :அசாம் மாநிலத்தில் திமா ஹசோ மாவட்டத்தில் ஜடிங்கா என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 2,500 பேர் வசிக்கின்றனர். இது கவுகாத்திக்கு தெற்கே 330 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இந்த பகுதியானது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் சில வாரங்களில் மட்டும் பறவைகளின் மர்மமான தற்கொலைக்கு பெயர் பெற்றது. இது பல ஆண்டுகளாக இங்கு நடந்து வருகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிலவு இல்லாத இரவுகளில் ஏராளமான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் திடீரென தரையில் விழுந்துவிடுமாம்.

இந்த நிகழ்வு பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது, இருப்பினும் இது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளை தொடர்ந்து குழப்பி வருகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: India, Tourism, Tourist spots

அடுத்த செய்தி