ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்களுக்கே தெரியாமல் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பழக்கவழக்கங்கள்...

உங்களுக்கே தெரியாமல் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பழக்கவழக்கங்கள்...

சிறுநீரக பாதிப்புகள்

சிறுநீரக பாதிப்புகள்

ஒரு சில வைட்டமின்கள் நம் கிட்னிக்களுக்கு நன்மை செய்ய கூடியவை. அதில் முக்கியமான ஒன்று வைட்டமின் டி. ஏனென்றால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நம் உடலில் சிறுநீரகங்கள் முக்கிய உறுப்பாக இருக்கின்றன, மேலும் இவை 24 மணி நேரமும் வேலை செய்கின்றன. நம் ரத்தத்தை வடிகட்டுவதில் துவங்கி உடலில் இருந்து கழிவுகளை நீக்குவது, அதிகப்படியான திரவத்தை அகற்றி உடலின் திரவ சமநிலையை கட்டுப்படுத்துவது, எலக்ட்ரோலைட்டுகளின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது வரை பலவேறு நன்மைகளை செய்கின்றன சிறுநீரகங்கள்.

மொத்தத்தில் நம்முடைய உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் உங்கள் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலில் உள்ள ரத்தம் சிறுநீரகங்கள் வழியாக ஒரு நாளைக்கு 40 முறை பாய்வது உங்களுக்கு தெரியமா.! உடலில் உள்ள நீர், உப்புகள் மற்றும் தாதுக்களை ஆரோக்கியமான சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படாவிட்டால் நம் உடலில் உள்ள நியூரான்கள், தசைகள் மற்றும் பிற உடல் திசுக்கள் செயலிழக்க கூடும்.

நமக்கே தெரியாமல் நம் சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில வாழ்க்கை முறை பழக்கங்களை இங்கே பார்க்கலாம்...

வைட்டமின் குறைபாடுள்ள டயட்:

ஒரு சில வைட்டமின்கள் நம் கிட்னிக்களுக்கு நன்மை செய்ய கூடியவை. அதில் முக்கியமான ஒன்று வைட்டமின் டி. ஏனென்றால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 10-15 நிமிடம் சூரிய ஒளியில் அமர்ந்தால் அல்லது நடைபயிற்சி மேற்கொண்டால் வைட்டமின் டி-யை பெறலாம். அதே போல வைட்டமின் பி 6-ஐ மற்ற மருந்துகளுடன் எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் பி6 சால்மன், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் பிற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் அல்லாத பழங்களில் காணப்படுகிறது.

அதிகப்படியான பெயின் கில்லர்களின் பயன்பாடு:

சிலர் அடிக்கடி உடல்வலி மற்றும் தலைவலிக்காக வலி நிவாரணிகளை வழக்கமான முறையில் எடுத்து கொள்கிறார்கள். இவர்களில் நீங்களும் ஒருவராக இப்பழக்கம் உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தாக முடியலாம். வலி நிவாரணி மாத்திரைகள் வலிகளை நீக்கினாலும் அலல்து குறைத்தாலும் சிறுநீரக புற்றுநோயை தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் 7 பலன்கள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது:

தினசரி உங்கள் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடித்து ஹைட்ரேட்டாக இருப்பது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் இப்பழக்கம் சிறுநீரக கற்களை தவிர்க்கவும் உதவுகிறது. சிறுநீரக நோய்கள் வராமல் இருக்க தினசரி 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது:

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் (Processed foods) சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. இது நம்முடைய சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவித்து பாதிப்படைய செய்கிறது.

போதுமான உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது:

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. சிறுநீரக செயல்பாடுகளில் குறை உள்ளவர்களுக்கு வாக்கிங் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது, ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள், வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

நீங்கள் ரன்னிங் செய்யும்போது அளவுக்கு அதிகமாக பயிற்சி எடுக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

அதிக அளவு ஆல்கஹால்:

நீங்கள் அதிகம் மது அருந்தும் பழக்கம் உடையவராக இருப்பின், நினைவில் கொள்ளுங்கள் உங்கள் சிறுநீரகங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறீர்கள். அளவுக்கு அதிகமான மது நுகர்வு நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயத்தில் இரு மடங்கு அதிகரிப்புடன் தொடர்புடையது.

உப்பு அதிகம் சேர்த்து கொள்வது:

உணவுகளில் அதிக உப்பு சேர்ப்பது உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடும். மேலும் இது உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கலாம். எனவே உணவில் சுவைக்காக அதிகம் உப்பு சேர்த்து கொள்வதற்கு பதில், மசாலாப் பொருட்களுடன் சுவையை கூட்ட முயற்சியுங்கள்.

First published:

Tags: Kidney Disease, Kidney Failure