மோசமான நரம்பு ஆரோக்கியத்தின் துவக்க அறிகுறிகளை புறக்கணிக்கும் 60% இந்தியர்கள் - சர்வே சொல்லும் தகவல்..

காட்சி படம்

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிலைகள் மற்றும் உணர்வுகள் இந்தியர்களிடையே எவ்வாறு உள்ளது என்பதை அறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

  • Share this:
60 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நரம்பு ஆரோக்கியம் மோசமாகும் முன்பு வெளிப்பட்ட துவக்க நிலை அறிகுறிகளை புறக்கணித்துள்ள தகவல் ஆபத்து சார்ந்த சுகாதார கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நரம்பு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிலைகள் மற்றும் உணர்வுகள் இந்தியர்களிடையே எவ்வாறு உள்ளது என்பதை அளவிடுவதற்காக சுமார் 12 நகரங்களில் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஹீல் ஹெல்த் மற்றும் ஹன்சா ரிசர்ச் மூலம் நடத்தப்பட்ட இந்த சர்வேக்கு, ப்ராக்டர் மற்றும் கேம்பிள் ஹெல்த் ஆதரவு அளித்தது.

இந்த சர்வேயில் சுமார் 1,800-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பதில் அளித்துள்ளனர். பதிலளித்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், ஆரோக்கியமான நரம்புகள் முக்கியம் என்று நம்பும் அதே நேரத்தில், சுமார் 38 சதவீதத்தினர் மட்டுமே நரம்புகள் ரத்த நாளங்களிலிருந்து வேறுபட்டவை என்பதை அறிந்திருக்கிறார்கள்.

நரம்பு பாதிப்புக்கு வைட்டமின் பி குறைபாடு காரணம் என்று விளக்கியுள்ள சுகாதார நிபுணர்கள் தலைசுற்றல், தசை பலவீனம் மற்றும் மூட்டுகளில் ஊசி குத்துவது போன்று ஏற்படும் வலி உணர்வு ஆகியவை நரம்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் முக்கிய முதல் 3 அறிகுறிகள் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற சுமார் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த உண்மை தெரிந்திருந்தது. பாம்பே மருத்துவமனையில் பணியாற்றும் நரம்பியல் நிபுணரான டாக்டர் சதீஷ் காதில்கர் குறிப்பிடுகையில், மற்ற காரணிகளைத் தவிர, வைட்டமின்-பி குறைபாடு உள்ளவர்களுக்கு நரம்பு குறைபாடுகள் ஏற்படுவதற்கான அதிக நிகழ்தகவு உள்ளது. சிறப்பு ஊட்டச்சத்து பழக்கம் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை, நம் நரம்புகளை ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக வைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நியூரோட்ரோபிக்-பி வைட்டமின்கள் போன்ற சில அத்தியாவசிய வைட்டமின்களின் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

முறையற்ற உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக மற்ற குறைபாடுகளுக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் பொதுவானது. அந்த வகையில் நம் நாட்டில் B12 குறைபாடு மிகவும் பொதுவானது. வைட்டமின் பி 12 பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பு, நரம்புகளை நிரந்தரமாக பலவீனமடைய செய்யக்கூடும். பெரும்பாலான வைட்டமின்களைப் போலவே, பி 12 வைட்டமினை நம் உடலால் உருவாக்க முடியாது. மாறாக, அது உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸிலிருந்து பெறப்பட வேண்டும். தங்கள் பி 12 வைட்டமின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவு சிலர் உட்கொள்வதில்லை.

Also read : சிறுநீரக செயலிழப்பை காட்டும் ஆரம்பகால அறிகுறிகள் : உஷாராக இருங்கள்...

அதே போல சிலர் என்ன தான் பி 12 கொண்ட உணவுகளை சாப்பிட்டாலும் கூட அவர்களுக்கு தேவையான அளவு எப்போதும் கிடைப்பதில்லை என்பதால் வைட்டமின் பி 12 குறைபாடு ஒப்பீட்டளவில் பொதுவானதாக காணப்படுகிறது, குறிப்பாக வயதானவர்களிடையே என்று சதீஷ் காதில்கர் கூறுகிறார். இந்த ஆய்வு முடிவில் வைட்டமின் பி 12-ஐ பெற 73% பேர் காய்கறிகளையும், 69% பேர் பழங்களை நம்பியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் கவுரவ பொது செயலாளர் டாக்டர் மங்கேஷ் திவாஸ்கர் கூறுகையில், " விழிப்புணர்வு இல்லாததால், மக்கள் பொதுவாக சரியான உணவை தேர்ந்தெடுப்பதில்லை. நரம்பு ஆரோக்கியம் உட்பட பல நோய்களை தவிர்க்க இன்றியமையாதது நல்ல ஊட்டச்சத்துகள். நாம் உண்ணும் உணவு நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். எனவே நரம்பு மண்டலத்திற்கு உறுதுணையாக எந்த ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன, அவற்றை எவ்வாறு நம் உணவில் சேர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும்" என்றார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: