Home /News /lifestyle /

வாழ்க்கையில் வெற்றியடைய எலான் மஸ்க் கூறும் 6 ரகசியங்கள்..!

வாழ்க்கையில் வெற்றியடைய எலான் மஸ்க் கூறும் 6 ரகசியங்கள்..!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

புத்தக வாசிப்பு என்பது உங்கள் மொழித் திறனை வளர்த்தெடுக்கும். அத்துடன் உங்களுக்கான அறிவை வளரச் செய்வதுடன், எண்ணற்ற தகவல்களை தெரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க்-ஐ நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அவரை பற்றி நாம் அதிகம் தெரிந்திராத சில தகவல்களும் உண்டு. அதாவது கடின உழைப்புக்கு சொந்தக்காரர் இவர். வாரத்தில் 100 மணி நேரம் பணி செய்வார். கடினமாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும் என விரும்பும் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியபோது, வெற்றிகரமான மனிதராக இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை இவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்வது நமக்கும் உதவிகரமாக இருக்கக் கூடும்.

புத்தகங்களை வாசியுங்கள்

புத்தக வாசிப்பு என்பது உங்கள் மொழித் திறனை வளர்த்தெடுக்கும். அத்துடன் உங்களுக்கான அறிவை வளரச் செய்வதுடன், எண்ணற்ற தகவல்களை தெரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். குழந்தையாக இருந்த சமயத்திலேயே, தான் என்சைக்ளோபீடியா புத்தகத்தை வாசித்ததாக எலான் மஸ்க் ஒருமுறை குறிப்பிட்டார். இலக்கியத்தை அதிகம் வாசிக்க வேண்டும் என்கிறார் அவர். புத்தகங்களை வாசித்து, தகவல்களை முடிந்த வரையில் உள்வாங்கிக் கொண்டால், போதுமான அளவுக்கு பொது அறிவுத்திறன் மேம்படும்.



நெட்வொர்க் மிக முக்கியம்

வீட்டில் சும்மா அமர்ந்து கொண்டு எதையும் சாதித்து விட முடியாது. உங்களை நீங்கள் தொழில்முறையில் மேம்படுத்திக் கொள்ளவும், நம்மை நாமே வளர்த்துக் கொள்ளவும் நெட்வொர்க் அவசியமானது. வாழ்க்கையில் பல தரப்பட்ட மக்களுடன் உரையாட வேண்டும் என்றும், அவர்களிடம் உள்ள திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எலான் மஸ்க் அறிவுறுத்துகிறார்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா - இந்த 10 நிமிட வொர்கவுட் செய்யுங்க

பங்களிப்பு

நீங்கள் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கு முடிந்த அளவு உங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். சமுதாயத்தில் இருந்து நீங்கள் எந்த அளவுக்கு பெற்றுக் கொள்கிறீர்களோ, அதில் ஒரு பகுதியை பங்களிப்பாக வழங்க வேண்டும் என்கிறார் எலான் மஸ்க்.



பயனுள்ளவராக இருக்க வேண்டும்

உங்களைச் சுற்றியிருக்கும் உலகில், நீங்கள் எத்தகைய சவால்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். சக மனிதர்களுக்கு பயனளிக்கும் ஏதோவொரு விஷயத்தை நீங்கள் செய்து கொண்டே இருப்பது அவசியம் என்பது எலான் மஸ்க்கின் அறிவுரை ஆகும்.

ரிஸ்க் எடுக்க வேண்டும்

எல்லா சமயத்திலும் பாதுகாப்பான வட்டத்தில் நின்று கொண்டு விளையாட நினைப்பது உங்கள் வளர்ச்சிக்கு தடையாக அமையும். ஆகவே, வாழ்க்கையின் எதோ ஒரு கட்டத்தில் நீங்கள் மிகுந்த தைரியத்துடன் ரிஸ்க் எடுத்து செயல்பட வேண்டும். அதில் தோல்வி வந்தாலும் வருத்தமடைய கூடாது. குடும்பம், குழந்தைகள் என்று வந்துவிட்ட பிறகு ரிஸ்க் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகும். ஆகவே, எந்தவித பொறுப்புகளும் இல்லாத இளம் வயதில் ரிஸ்க் எடுப்பதே சரியானது என்கிறார் எலான் மஸ்க்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Elon Musk, Successful Life

அடுத்த செய்தி