படுக்கைக்கு செல்லும்முன் செய்ய வேண்டிய 6 வேலைகள்

news18
Updated: July 11, 2018, 3:56 PM IST
படுக்கைக்கு செல்லும்முன் செய்ய வேண்டிய 6 வேலைகள்
ஆரோக்கியத்துக்கு தூக்கம் மிக மிக அவசியம்
news18
Updated: July 11, 2018, 3:56 PM IST
வெற்றிபெற்ற மனிதர்கள் பலரும் தங்களின் ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலனின் தொடக்கமே வெற்றிக்கான காரணமாக கருதுகிறார்கள். போதுமான நல்ல தூக்கமே ஆரோக்கியத்தின் முதல்படி. தூங்குவதற்கு செல்லும் முன், சில செயல்களை செய்யும்போது அது உங்கள் மனநிலையிலும் உடலின் னர்ஜியிலும் குறிப்பிடத்தக்க  மாற்றத்தை உண்டாக்குகிறது.

1. வாசிப்பு

உங்களின் துறை சார்ந்த  அல்லது உங்களுக்கு பிடித்த புத்தங்களை அன்றாடம் வாசியுங்கள். வாசிப்பு உங்களின் மொழி வளத்தை அதிகரிக்கும். மனம் ஒன்றுபட்டால்தான், வாசிக்க முடியும். கவனம் சிதறினால் 5 நிமிடங்களுக்கு மேல் வாசிக்க முடியாது. உங்களால் கவனத்துடன் புத்தகத்தை வாசிக்கும் மனநிலை உங்களுக்கு உள்ளதா? என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

2. செய்ய வேண்டியவற்றின் பட்டியலை தயாரிக்கவும்

ஒவ்வொரு நாள் இரவும் தூங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற பட்டியலை உருவாக்கிக் கொள்ளுங்கள், செய்யப்போகும் வேலைக்கான நேரத்தையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதேபோல், ஒரு நாளின் வேலையை முழுமையாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

3.  குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்

அன்றாடம் உங்களின் மனைவி, குழந்தைகளுடன் பேசுங்கள். உங்களின் செல்லப்பிராணிகளுடன் விளையாடுங்கள். உளவியலாளர்கள் வெற்றிபெற்ற மனிதர்களின் பழக்கங்களில் ஒன்றாக இது உள்ளதென கூறுகிறார்கள். குடும்பத்துடன் செலவிடும் நேரம் வேலைக்கான எனர்ஜியை கொடுக்கும்.
Loading...
4. டைரி எழுதுங்கள்

ஒரு நாளில் நடந்தது என்னென்ன என்பது பற்றி தினமும் டைரியில் எழுதுங்கள்.  உங்கள் நேரத்தை  எந்த வேலை வீணடித்தது, எதைச் செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி எழுதும்போதே உங்களுக்கு உண்மை புரிந்துவிடும்.

5. தியானம்

படுக்கைக்கு செல்லும் முன் மனதை ஒருநிலைப்படுத்தி 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். பரபரப்பான மனநிலை குறைந்து அமைதியாகிவிடும்.

6. செல்போன், லேப்டாப்களிடமிருந்து விடுபடுங்கள்

வீட்டுக்கு வந்தாலும், உங்களின் அலுவலக வேலைகளை மடியிலே கட்டிக்கொண்டு இருக்காதீர்கள். உங்களின் லேப்டாப், ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள். அலுவலக வேலையை துண்டித்துக் கொண்டால்தான் நிம்மதியாக மேலே சொன்ன மற்ற வேலைகளை செய்ய முடியும்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...