நம் ஒவ்வொருவருக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறையான குணங்கள் இருக்கிறது. இதில் எந்த குணம் நம்மிடம் அதிகம் வெளிப்படுகிறதோ, அதுதான் நம்முடைய குணம் என்று மற்றவர்கள் நம்புகிறார்கள். மற்றவர்களிடம் இருந்து நம்மை ‘மதிப்பிற்குரியவர்’ என்ற பிம்பத்தை உருவாக்க பலர் கஷ்டப்படுகிறார்கள். சமுதாயத்தால் மதிக்கப்படும் நபராக மாறுவதற்கு தேவையான முக்கிய குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
அமைதி :
வாழ்க்கையில் நாம் முன்னேறும்போது நிறைய பேர் என்னென்னவோ சொல்வார்கள்.இவர்களில் பெரும்பாலானோர் யார் என்று பார்த்தால் குடும்பம்,உறவினர்கள்,நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் சரியான வழியை காட்டினால் கூட நமக்கு அவர்கள் தவறான வழியை காட்டுகிறார்கள் என்று நினைத்து கொள்வோம். பல்வேறு பிரச்சினைகளுக்கு இது போன்ற சம்பவங்கள் காரணமாகின்றன.
அப்போது நாம் அமைதியை இழந்து கோபப்படுகிறோம். இது தான் பிரச்சனையின் ஆரம்பம் ஆகும். சமுதாயத்தில் மதிக்கப்படுபவர்கள் தங்களை எப்பொழுதும் அமைதியாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது முக பாவனைகளில் கூட எந்த வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
அதிகம் கேட்பவர்கள் :
‘அதிகம் கேள்,குறைவாக பேசு’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப இவர்கள் வாழ்வார்கள். இவர்கள் தான் செல்லக்கூடிய எந்த இடங்களிலும் அதிகம் பேசாமல், நிறைய செய்திகளை கேட்கவே விரும்புவார்கள். எனவே நீங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் மற்றவர்கள் கூறுவதை அதிகமாக கேளுங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்வது :
தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு இத்தகையை நபர்கள் செய்து கொண்டிருப்பார்கள். நீங்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களை வந்தடையும்.அதுபோல தான் நீங்கள் எதிர்பாராமல் செய்யும் உதவி மற்றவர்களால் உங்களை காலத்திற்கும் மனதில் வைக்க உதவுகிறது. உங்கள் வாழ்க்கையில் தோல்விகள் மட்டும்தான் வருகிறது என்று நினைக்கிறீர்களா? முதலில் இந்த மைண்ட் செட்டை மாற்றுங்கள்.
மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க வேண்டுமா? இதெல்லாம் கண்டிப்பாக ஃபாலோ பண்ணுங்க...
கடின உழைப்பு :
’எண்ணம் போல் வாழ்க்கை’ என்பது போல நான் வாழ்க்கையில் முன்னேறுவேன், எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும் அதை தாண்டி முன்னேறிக்கொண்டு போவேன், வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதனை முழு விருப்பத்தோடு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த வேலை கடினமாக இருந்தாலும் உங்களால் செய்து முடிக்க முடியும். எந்தவொரு வேலை செய்தாலும் கடமையுடன் செய்ய வேண்டும்.
பிடிவாதத்தை விடுவது :
ஈகோ கொண்ட நபர்கள் பலர் இருக்கின்றனர்.அவர்கள் மீது தவறு இருப்பது தெரிந்தாலும் கூட, அவர்கள் ஒருபோதும் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.அப்படிப்பட்ட நபர்கள் கூடிய சீக்கிரம் மரியாதையை இழக்க நேரிடும்.பொய்யான முகத்தை நீண்ட நாட்களுக்கு வைத்து யாராலும் நடிக்க முடியாது. நீங்கள் ஒரு தவறு செய்தால் உடனே அதனை ஒப்புக்கொள்ளுங்கள்.அந்த பிரச்சினைக்கான தீர்வு என்னவென்று யோசியுங்கள்.அதுதான் உங்களை மற்றவர்களிடம் இருந்து உங்களை தனித்து காண்பிக்கும்.
நம்பிக்கையுடன் இருப்பது :
உங்களை ஒருபோதும் தாழ்வாக நினைக்காதீர்கள். மனிதர்களுக்கு மட்டுமில்லை, உலகில் உள்ள அணைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையே ‘நம்பிக்கை’ தான். இந்த சமுதாயத்தில் மதிப்பிற்குரியவர்கள் என்று நீங்கள் நினைக்கும் அனைவரும் எப்போதும் தங்களை சுற்றி நேர்மறையான (பாசிட்டிவ்) எனர்ஜியை வைத்திருப்பார்கள்.இது போன்ற குணங்கள் தான் அவர்களை சமுதாயத்தில் மதிக்கப்படும் நபர்களாக மாற்றுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Life