ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்தியாவில் பெண்களை விட 6 மடங்கு ஆண்கள் இதய நோயால் இறப்பு! - இந்த வயதினருக்கு பாதிப்பு அதிகம்!

இந்தியாவில் பெண்களை விட 6 மடங்கு ஆண்கள் இதய நோயால் இறப்பு! - இந்த வயதினருக்கு பாதிப்பு அதிகம்!

உலக இதய தினம்

உலக இதய தினம்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் (CVDs) இறக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] |

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 29 உலக இதய தினமாக கொண்டாடப்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதய நோய்களைத் தடுப்பதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக இதய தினம் 2022: தீம்

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் 1972 இல் நிறுவப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பான World Heart Federation (WHF) மூலம் உலக இதய தினம் தொடங்கப்பட்டது. முதல் உலக இதய தினம் செப்டம்பர் 24, 2000 அன்று கொண்டாடப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான உலக இதய தினத்தின் கருப்பொருள் "ஒவ்வொரு இதயத்திற்கும் மற்றொரு இதயத்தைப் பயன்படுத்து" என்பதாகும். இதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு சேவை செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் (CVDs) இறக்கின்றனர்.

நோய் வரக் காரணங்கள்:

இதய நோய் என்பது பல காரணங்களால் வருகிறது புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவற்றின் காரணத்தால் இதயம் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதத்திற்கு காரணமாகின்றன.

இந்தியாவில் 30% பெண்களுக்கு 21 வயதிற்குள் திருமணமாகிறது.. புதிய அறிக்கையில் தகவல்

இந்தியாவில் இதய நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது ஆண்டுதோறும் அதிகரிப்பதோடு நோய் தீவிரமடைந்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 2014 இல் 18,309 ஆக இருந்த எண்ணிக்கை  2021 ஆண்டுப்படி 28,449 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உச்சம் கொண்ட 2020 ஆண்டில் மட்டும் 28,680 பேர் இதயநோயால் இறந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்படும் ஆண்கள்:

2021 ஆண்டிற்கான இந்திய தரவுகளை ஆராயும்போது பெண்களை விட ஆண்கள் தான் அதிக எண்ணிக்கையில் இதய நோயால் இறந்துள்ளனர். சென்ற ஆண்டில் 3936 பெண்களும், 24,510 ஆண்களும் இறந்துள்ளனர். பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் இறப்பு எண்ணிக்கை 6 மடங்கு அதிகமாகும்.

அறிவியல் ரீதியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவதனால் அதற்காக சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் அவர்களது இதயத்தை பாதுகாக்கிறது. அதனால் பெண்கள் அவ்வளவு எளிதாக இதய நோய்களுக்கு ஆளாவதில்லை என்று கூறப்படுகிறது.

வயதின் அடிப்படையில்…

வயதின் அடிப்படையில் இறப்பு எண்ணிக்கையை பார்க்கும்போது,  அதிக எண்ணிக்கையாக 45-59 வயதிற்கு உட்பட்டவர்கள்  11,190 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 30-44 வயதிற்கு உட்பட்ட 8,544 நபர்கள் இதய நோயால் இறந்துள்ளனர். 18-29 இடைப்பட்ட இளம் பருவத்தினர் எண்ணிக்கை 2,541 ஆகவும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் எண்ணிக்கை 5,985 ஆகவும் உள்ளது. இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு மட்டும் 189 ஆக இருந்துள்ளது.

விரைவான நகரமயமாக்கல் கலாச்சாரம் மற்றும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறைதான் இருதய நோய்களின் அதிக வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த உலக இதய தினத்தில் பாஸ்ட் உணவுகளை குறைத்துக்கொண்டு,  பச்சை காய்கறி , பழங்கள் உண்டு, மன உளைச்சல்களை குறைக்கும் முயற்சிகள் மேற்கொண்டு இதயத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Health, Heart attack, Heart disease