பண்டிகைகள் முடிந்த பின்னர் சோகமாக காணப்படும் 5 ராசிக்காரர்கள்!

ஹோலியோ, தீபாவளியோ அல்லது கிறிஸ்துமஸ்ஸோ எதுவாக இருந்தாலும் சரி இது ஒரு மகிழ்ச்சியான பண்டிகை காலம். ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால், பண்டிகைகள் பொதுவாக நீண்ட நேரம் நீடிக்காது.

பண்டிகைகள் முடிந்த பின்னர் சோகமாக காணப்படும் 5 ராசிக்காரர்கள்!
ஹோலியோ, தீபாவளியோ அல்லது கிறிஸ்துமஸ்ஸோ எதுவாக இருந்தாலும் சரி இது ஒரு மகிழ்ச்சியான பண்டிகை காலம். ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால், பண்டிகைகள் பொதுவாக நீண்ட நேரம் நீடிக்காது.
  • Share this:
பொதுவாக பண்டிகைகளில் நாம் கலந்துகொள்ள விரும்புவோம். பண்டிகைகள் ஆண்டின் மகிழ்ச்சியான பகுதிகளில் ஒன்றாகும். அது ஹோலியோ, தீபாவளியோ அல்லது கிறிஸ்துமஸ்ஸோ எதுவாக இருந்தாலும் சரி இது ஒரு மகிழ்ச்சியான பண்டிகை காலம். ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால், பண்டிகைகள் பொதுவாக நீண்ட நேரம் நீடிக்காது.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பண்புகள் இருக்கும். அது தொழில் சார்ந்தும், இல்லறம் சார்ந்தும், உறவுகளில் அவர்கள் ஈடுபடும் விதம், ஒரு சூழலை அவர்கள் கையாளும் முறை, ஒரு செயலின் போது அவர்கள் எப்படி ரியாக்ட் ஆகிறார்கள் என அனைத்திலும் இந்த பொது குணத்தின் தாக்கம் கொஞ்சம் இருக்க தான் செய்யும். இதில் ஒரு சிலருக்கு கிரக நிலை பொறுத்து உணர்சிகள் மாறுபடலாம்.

ராசி என்பது கிரகங்களை அடிப்பயைாக வைத்து, நம்முடைய குணநலன்களை கணித்துச் சொல்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் மாறுபடும். அதில் நல்லதும் இருக்கும் தீயதும் இருக்கும். நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். பண்டிகைகள் முடிவடையும் போது பின்வரும் ராசிக்காரர்கள் மிகவும் மோசமாக உணர்வதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். வாருங்கள் அந்த ராசிகளை இப்போது காண்போம்.


Mesha,Aries

மேஷம் : அமைதியானார்கள். ஆனால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிரிகளை துவம்சம் செய்துவிடுவார்கள். அந்த அளவுக்கு கோபப்படுவார்கள். மக்களிடம் மோதல் போக்குடன் நடந்துக் கொள்வார்கள். அவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போல இருக்கும். இது இந்த ராசியின் இயல்பாக கருதப்படுகிறது. அதே போல வாக்குவாதம் செய்வதிலும், அடம் பிடிப்பதிலும் கூட இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களை சுற்றி ஏதாவது தவறு நடக்கும்போது மிகவும் வருத்தப்படுகிறார்கள். வாழ்க்கையின் மகிழ்ச்சி முடிந்துவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். பண்டிகைகள் முடிந்ததும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவது அவர்களுக்கு கடினமான ஒன்று.

Vrishabha, Taurus, ரிஷபம், ரிசபம்ரிஷபம் : இந்த ராசிக்காரர்கள் அன்பானவர்கள் என்றே அவர்களிடம் பழகும் நபர்கள் சொல்வார்கள். இவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். மேலும் அவர்கள் பழிவாங்குவதற்காக எதையும் செய்வார்கள். அடம் பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். தங்கள் வாழ்வில் தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள். மற்றவர்கள் இது நல்லது தான், வாழ்வை மேம்பட உதவும் என்று கூறினாலும் கூட அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். சில செயல்களில் பிடித்த வைத்த பிள்ளையார் போல தான் இவர்களது தீர்க்கம் இருக்கு. ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் சோம்பலாகி, சோகமாக இருக்கும் போதெல்லாம் அதிக உணவை உட்கொள்வார்கள். அவர்கள் இனிப்புகளை அதிகமாகப் உண்பார்கள், குறிப்பாக ஒரு பண்டிகை முடிந்துவிட்டால், அவர்கள் மிகவும் சோகமாக இருக்கிறார்கள், மேலும் கொஞ்சம் மகிழ்ச்சியாக உணர அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு பொறுமை என்பதே இல்லை, எனவே இவர்களை கோபப்படுத்துவது எளிது

மிதுனம் : சில நேரங்களில் பொய் பேசுவார்கள். கனவை நனவாக்குவதில் அவர்கள் நேர்மையை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களிடம் மிகுந்த ஆவல் இருக்கும். தாங்கள் செய்யும் செயலை எப்போது நிறுத்த வேண்டும் என்று கூட தெரியாது. இதனால் கூட இவர்களிடம் இருந்து சில கைமீறி சென்றுவிடும். இவர்களுக்கு தங்களுக்கான பாதையை சரியாக தேர்வு செய்ய தெரியாது. இதில் இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். மிதுன ராசிக்காரர்கள் இயல்பான சிந்தனையாளர்கள், அவர்கள் சோகமாக இருக்கும்போது சிந்தனை செய்யத் தொடங்குகிறார்கள். பண்டிகைகள் முடிந்ததும் பலர் சோகமாக உணர்ந்தாலும் மிதுன ராசிக்காரர்கள் சோகத்தை தங்கள் இதயத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் மிகவும் அமைதியாகி, புத்துயிர் பெறும் எந்தவொரு செயலிலும் பங்கேற்க மறுக்கிறார்கள். அடுத்த பண்டிகைகளைப் பற்றியும் கனவு காணத் தொடங்குகிறார்கள்.

கடகம் : அதிகமாக உணவு உண்பார்கள். தங்கள் அழகிற்காக அதிகம் செலவு செய்வார்கள். தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள். இவர்களிடம் நம்பிக்கை இருக்காது. இவர்களது உணர்ச்சிகள் அளவுக்கு மீறி மேலோங்கும். அது அன்பு, கோபம் எதுவாக இருந்தாலும் சரி. தொட்டதற்கு எல்லாம் கோபப்படுவார்கள். கடக ராசிக்காரர்கள் மிகவும் அற்பமான விஷயங்களுக்கு வருத்தப்படுவார்கள், எனவே பண்டிகைகள் முடிந்தபின் மனச்சோர்வடைவது அவர்களுக்கு புதியதல்ல. இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள், ஆனால் பிறரிடமிருந்து உதவி கேட்க பயப்படுகிறார்கள்.

மீனம்: நிறைய ஐடியாக்களை வைத்திருப்பார்கள். எதையாவது கூறி தங்கள் கடமையை செய்வதில் இருந்து நழுவி விடுவார்கள். அது அவர்கள் முன்னெடுத்த காரியமாக கூட இருக்கலாம், அல்லது அவர்கள் வேலை செய்து வரும் செயலாக இருக்கலாம். ரிசல்ட் நெகட்டிவாக வரும் என்பதை அறிந்தால் அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள். முன் கோபம் அதிகமாக இருக்கும். மூர்க்கம் தனம் கொண்டவர்கள். பண்டிகை காலம் எப்போது முடியும் என்று காத்திருப்பார்கள். பின்னர் தங்களுக்கான வழியில் செல்வார்கள்.

துலாம்: பிறரை ஏமாற்றுவார்கள். சில நேரங்களில் ஏமாறவும் செய்வார்கள். தாங்கள் விரும்பும் செயலை சிறப்பாக செய்வதற்கு மனதை ஏற்பாடு செய்துக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். தான் எடுத்த முடிவே சரியா, தவறா என தெரியாமல் தடுமாறுவார்கள். மிக சோம்பேறியான இராசி இந்த துலாம் ராசி. எதையும் முன்னெடுத்து செல்ல பெரிதும் ஆர்வம் இருக்காது. இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது அவர்கள் மனச்சோர்வடைகிறார்கள். பண்டிகைகளின் போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அவர்கள் மகிழ்ந்தவுடன், அவர்கள் தனிமையில் இருக்க நினைப்பார்கள். பின்னர் நீண்டகாலத்திற்கு அவர்கள் சமூகமயமாக்க விரும்புவதில்லை, மீண்டும் பாதையில் செல்வதில் நம்பிக்கையற்றவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வார்கள்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading