HOME»NEWS»LIFESTYLE»5 ways reading benefits your health and how to make reading a daily habit riz ghta

தினசரி வாசிப்புப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது தெரியுமா?

வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் குளிப்பது, சாப்பிடுவது மாதிரி. ஆனால், நம் சமூகம் இப்படி நினைப்பதில்லை.

தினசரி வாசிப்புப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது தெரியுமா?
கோப்புப்படம்.
  • Share this:

வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் குளிப்பது, சாப்பிடுவது மாதிரி. ஆனால், நம் சமூகம் இப்படி நினைப்பதில்லை. பள்ளிப் படிப்பு வேலைக்கான உத்தரவாதம் என்று நம்புகிறார்கள். ஆனால், வாசிப்பது வாழ்க்கைக்கான ஊட்டம் என்று யாரும் கருதுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளி, கல்லூரிப் படிப்புக்குப் பிறகு வாசிக்கும் பழக்கம் ஒருவருக்கு இருக்கிறது என்றால், முதலில் குடும்பத்தினரும், பிறகு இந்தப் பழக்கத்தை முக்கியமில்லாதது என்றே கருதுகிறார்கள்.

எப்பொழுதோ நிகழ்ந்ததை இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்குகளின் வாழ்க்கை.

இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும், அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது. படித்தல் தொடர்ந்து மூளையில் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துகிறது, நினைவகத்தை மேம்படுத்துகிறது,



மேலும் நீண்ட காலம் வாழ உங்களுக்கு இது உதவுகிறது. படித்தல் மன அழுத்த அளவைக் குறைக்கும் மற்றும் வயது தொடர்பான அறிவாற்றலை இது மேம்படுத்தும். புத்தக வாசிப்பு உங்கள் பயணத்தின் போது அல்லது படுக்கைக்கு முன்பாக இருந்தாலும், ஒரு புத்தகத்தை எடுக்க ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்குங்கள். பட புத்தகங்கள் மற்றும் கவிதைகள் முதல் நினைவுக் குறிப்புகள் மற்றும் செய்தித்தாள்கள் வரை, வாசிப்பு என்பது வாழ்நாள் முழுவதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

ஓய்வுவின்போது வாசிப்பு

நம் ஓய்வு நேரத்தில் நாம் ஈடுபடக்கூடிய பல்வேறு வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். சிலர் ஆற்றல் நிறைந்த செயல்பாடுகளை விரும்புகிறார்கள், மற்றவர்கள் குறைவான தூங்க செல்கிறார்கள். மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள்.

அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய கடைப்பிடித்த அணுகு முறைகளை நமக்கு படிகளாக்கிக் கொள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனை சாதனையாளனாக்க வழிகாட்டுகிறது. சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும்.

நெப்போலியன் கில், நார்மன் வின்சென்ட் பேல், டேல் கார்னகி, ஜேம்ஸ் கேலன், டி எட்வர்டு போனோ, ராபர்ட் ஆண்டனி போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம் வளர்ச்சிக்கு படிக்கல்லாகும். இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின் நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும் ஏற்ப எழுதப்பட்டிருப்பினும் அடிப்படையான உண்மைகள் நமக்கும் ஏற்றதே. 2020ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 14 ஆண்டு ஆய்வில் , வாரத்திற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை படிப்பவர்களுக்கு 6 ஆண்டு மற்றும் 14 ஆண்டு இடைவெளியில் அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படுவது குறைவு என்று கண்டறியப்பட்டது.

Also read: கொரோனா காலத்தில் உயிர்காக்கும் செயலில் ஈடுபடும் செல்லப்பிராணிகள் : ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!

 

இலக்கிய வாசிப்பு மட்டும் போதுமா?

இலக்கியத்தை வாசிப்பது மட்டும் வாசிப்பு என்று பரவலாக மக்கள் நினைக்கிறார்கள். வாசிப்பு எந்தத் துறையைச் சார்ந்தும் இருக்கலாம். தன் தொழில் தொடர்பாக வாசிப்பதை நாம் வாசிப்பு என்று கொள்ள முடியாது. பல துறைப் புத்தகங்களையும் வாசிக்கும்போது தான் ஒருவருடைய வாசிப்பு வளமானது என்று நாம் கூறலாம். இலக்கியம் ஒரு பகுதிதான். வரலாறு, பொதுமக்களுக்கான அறிவியல், வாழ்க்கை வரலாறு, அரசியல், இசை என்று வாசிப்பு பல துறைகளையும் உள்ளடக்கியிருக்கும் போது தான் நம் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.

நூலகங்களின் பங்கு

உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார். வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம்.

புத்தகம் படிப்பதுகூட ஒரு வகையான தியானம் தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கின்ற நிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும்போது ஏற்படும். என்னைப் பொறுத்த வரை புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை அவ்வப்போது அனுபவிக்கிறேன். ஆழ்ந்து படிக்கிற அத்தனைப் பேருக்கும் இத்தகைய அனுபவம் இருக்கும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: