Home /News /lifestyle /

திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா..? நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா..? நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

உறவுமுறை

உறவுமுறை

என்னடா இது திருமணத்திற்கு முன்னாள் எதுவாக இருந்தாலும் சட்டென்று நாம் முடித்து விடுவோம் இப்போது வாழ்க்கை துணையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டிய நிலை உள்ளதே என்று சிலர் நினைப்பார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் பல முக்கியான கட்டங்கள் இருந்தாலும், மிகவும் சுவாரசியமான மற்றும் சிறப்பான தருணமாக அமைவது திருமணம். ஒருவரின் வாழ்வில் மற்ற எல்லாவற்றையும் விட திருமணம் வாழ்க்கையின் முக்கிய கட்டமாக அமைகிறது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு நிறைய விஷயங்கள் மாறுகின்றன. திருமணம் மூலம் ஒருவரது வாழ்வில் மற்றவர் நுழைகிறார்.

வாழ்க்கை துணையாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும் அவரது பங்களிப்பும் கலந்தே இருக்கும். முன்பு நீங்கள் மட்டுமே தனியாக கையாண்டு கொண்டிருந்த மற்றும் உங்களிடம் மட்டுமே இருந்த பல விஷயங்கள் திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை துணையுடன் ஷேர் செய்து கொள்ள வேண்டும் நிலை ஏற்படும்.

என்னடா இது திருமணத்திற்கு முன்னாள் எதுவாக இருந்தாலும் சட்டென்று நாம் முடித்து விடுவோம் இப்போது வாழ்க்கை துணையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டிய நிலை உள்ளதே என்று சிலர் நினைப்பார்கள். வாழ்க்கை துணையாக வருபவருக்கு உங்கள் வாழ்வில் மற்றும் அவரது வாழ்வில் உங்களுக்கு என இருவருக்குமே பங்கு மற்றும் பொறுப்பை ஏற்படுத்துவது தான் திருமணம். எனவே துணை வந்தவுடன் உங்கள் தனியுரிமை முடிவுக்கு வந்து விட்டதாக அர்த்தமல்ல. விரைவில் பேச்சுலர் லைஃபிலிருந்து விடைபெற்று மேரேஜ் லைஃபிற்குள் நுழைய போகிறீர்களா.! அப்படியானால் கீழ்காணும் சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

* திருமணம் ஆன பிறகு உங்கள் புதிய வாழ்க்கையை இனிதாக துவங்க வேண்டும். திருமணமாகி விட்டாலும் கூட உங்கள் துணையுடன் செட்டாவதற்கு இயல்பாகவே சிறிது நாட்கள் எடுக்கும். ஒரு புதிய சூழலில் புதிய உறவை கையாளுவது சற்று சவாலாகவே இருக்கும். ஆனால் இதில் பயப்பட ஒன்றும் இல்லை. உங்கள் புதிய உறவில் நம்பிக்கையை பேண முக்கியத்துவம் கொடுங்கள். உங்களை பற்றி உங்கள் துணையிடம் சொல்லுங்கள், அதே போல அவர்களை பற்றியும் தெரிந்து கொள்ள தயக்கம் காட்டாதீர்கள். மனம் விட்டு பேச துவங்குவதே இல்லற வாழ்வை இனிமையாக துவக்க தேவையான முதல் படி.



* இதற்கு முன் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பின்னர் எல்லா சூழலிலும், எந்த விஷயத்திலும் உங்கள் அணுகுமுறை நேர்மறையானதாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். நேர்மறையாக இருப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை வலுப்பெறுவதோடு, எந்த விஷயங்களையும் உங்களால் எளிதாகச் சமாளிக்க முடியும்.

உறவில் பொறாமை குணத்தை எப்படி நிறுத்துவது? உங்களுக்கான சில டிப்ஸ்

* ஆறாம் விரலாய் ஒட்டி கொண்டிருக்கும் செல்போனின் பயன்பாட்டை திருமணத்திற்கு பிறகு கணிசமாக குறைத்து விடுவது நல்லது. செல்போன் உபயோகத்தை குறைத்து உங்கள் வாழ்க்கை துணையுடன் அதிக செலவழிப்பது மிகவும் அவசியம் என்பதை புரிந்து அதேகேற்ப நடந்து கொண்டால் இல்லற வாழ்வு இனிதாய் துவங்கும்.



* புதிதாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை துவங்கும் போது உங்கள் துணை உங்களை பற்றிய அனைத்து விவரங்களையுமே தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என விரும்புவார். எனவே அவரிடம் பொய் சொல்லவோ அல்லது விஷயங்களை மறைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். உங்களை பற்றிய விஷயங்களை உள்ளதை உள்ளபடியே அவரிடம் பகிர்ந்து கொள்வது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த உதவும்.

* வெளிப்படையாக சொன்னால் வெவ்வேறு மனப்பான்மை கொண்ட இருவர் ஒன்றிணைந்து வாழ்க்கையை வாழ்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால் உங்களுடன் இருக்கும் நேரத்தில் துணையை வசதியாக உணர வைப்பது, உறுதிமொழிகள் அளித்து அதன்படி அவருக்காக ஏதேனும் செய்வது மற்றும் அன்பை வெளிப்படுத்தும் வகையிலான செயல்கள் உள்ளிட்டவை மூலம் உருவாகும் வலுவான பிணைப்பு உங்கள் திருமண வாழ்வை நீண்ட தூரம் சிறப்பாக எடுத்து செல்ல உதவும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Marriage Plan, Relationship Tips

அடுத்த செய்தி